சிங்களவரை காட்டுமிராண்டித்தனமாக அடித்த குற்றத்துக்காக தமிழ் இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளனர்.
தாக்குதல்தாரிகளில் ஒருவருக்கு வயது 30. மற்றவருக்கு வயது 32.
கடந்த வருடம் பெப்ரவரி 12 ஆம் திகதி குற்றச் செயல் இடம்பெற்று உள்ளது.
இவரை தாக்குகின்றமைக்கு உடைந்த போத்தல் ஒன்ன்றையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.
வம்ளே பெருந்தெருவில் இச்சிங்களவரை மடக்கி இருக்கின்றனர் இளைஞர்கள் இருவரும். இருவரிடமும் சிங்களவர் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கின்றார். காரணம் கேட்டு இருக்கின்றார் சிங்களவர். எவ்வித தவறும் செய்து இருக்கவில்லை என்று விளங்கப்படுத்தி இருக்கின்றார்.
தப்ப முயன்ற இவரை வீதியால் இழுத்துச் சென்று உள்ளனர். ஏராளமானோர் காணும்படியாக தொடர்ச்சியாக நையப் புடைத்து இருக்கின்றனர்.
வீதியில் நின்றவர்கள் காரணம் கேட்டபோது இதில் மற்றவர்கள் தலையிட வெண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கின்றனர்.
சிங்களவர் நன்றாக காயப்பட்டுப் போனார். தழும்புகள் உடலில் ஏற்பட்டன.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரையும் பிடித்து சென்றனர்.
சிங்களவர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக தமிழர்களால் தாக்கப்பட்டு இருக்கின்றார் என்று புலனாய்வாளர்கள் கண்டு கொண்டனர்.
ஆயினும் உள்நோக்கத்தோடு வேண்டும் என்று இத்தாக்குதலை நடத்தினர் என்கிற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் இருவரும் மறுத்து உள்ளனர்.
ஆயினும் இருவரையும் நீதிமன்றம் குற்றவாளியாக கண்டு உள்ளது.
ஒருவருக்கு எட்டு வருடங்களும், மற்றவருக்கு ஏழு வருடங்களும் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக