உணவு உண்ணும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பணத்தைப் பயன்படுத்தி தனது பல்கலைக்கழக கட்டணங்களை மாணவன் ஒருவன் செலுத்தி வரும் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் துறையில் கல்வி கற்று வரும் எறிக் டால் என்ற மாணவரே இவ்வாறு உணவு உண்ணும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பணத்தைப் பயன்படுத்தி தனது பல்கலைக்கழக கட்டணத்தை செலுத்தி வருகிறார்.
பிக் ரெட்ஸ் ஸ் ரீக்ஹவுஸ் என்ற உணவகத்தால் உணவு உண்பதற்கான போட்டி நடத்தப்படுவதை அறிந்த எறிக் டால், தான் விரைவாக உணவு உண்டால் உணவுக்கான கட்டணத்தை செலுத்துவதை தவிர்ப்பதுடன் மேலதிக பணப் பரிசையும் பெற முடியும் என்பதை உணர்ந்தார்.
அந்த உணவகமானது 3 இறாத்தல் வெண்ணெய் சான்ட்விச் உணவை 10 நிமிடங்களிலும் குறைவான நேரத்தில் உண்பவர்களுக்கு மேற்படி பரிசை வழங்குகிறது.
எறிக் அந்த உணவு உண்ணும் போட்டியில் 2011 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று இதுவரை 18000 அமெரிக்க டொலரை பரிசாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர், அளவுக்கதிகமான உணவால் தனது நிறை அதிகரிப்பதை தடுக்க தினசரி நடைப்பயிற்சி, ஹொக்கி விளையாட்டு என்பவற்றில் ஈடுபட்டு வருவதுடன் வாரத்துக்கு இரு தடவை பாரந்தூக்கும் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக