ஞாயிறு, 24 நவம்பர், 2013

சனிக்கிழமைகளில் சுபகாரியம் செய்யலாமா?

‘‘நாள் செய்வதை நல்லவர் கூட செய்ய மாட்டார்கள்’’ என்பது நம்மவர் வழக்கத்தில் உள்ள முதுமொழி. அத்தோடு உலகம் வியக்கும் உன்னத திருக்குறள் தந்த வள்ளுவப் பெரியாரும் ‘‘காலம் அறிதல்’’ எனும் அதிகாரத்தில் நாள், முகூர்த்த சிறப்புகளை எடுத்தியம்பியிருக்கின்றார்.

அத்தோடு ஜோதிட அறிஞர்களால் எழுதப்பட்ட முகூர்த்த சிந்தாமணி, காலப்பிரகாசிகா, மளையடி சாஸ்திரம், சூடாமணி உள்ளமுடையான், வீமேசுர உள்ளமுடையான், சரசோதிமாலை, பெரிய வருஷாதிநூல் போன்ற பல ஜோதிட நூல்களில் முகூர்த்த நிர்ணயம் பற்றிய அற்புதமான விடயங்கள் மிக நேர்த்தியாக கூறப்பட்டு இருக்கின்றது.

இன்றைய கால கட்டம் மிகவும் இயந்திரமயமான சூழலிலே இயங்கிக் கொண்டிருக்கின்ற தன்மையினால் பழைய பாரம்பரிய முறைகள் எல்லாம் மருவிச்சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமே. அவசர யுகமாய் இயங்கி அவசரமாக நாம் செய்கின்ற காரியங்கள் எல்லாம் அவசரமாகவே முடிந்து விடுகின்றன. நாம் நிதானம், பொறுமை, கடமையுணர்வு என்பவற்றை தவிர்க்கின்ற காரணங்களினாலே பலவிதமான இன்னல்களையும் தேடி வரவழைக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது. முகூர்த்தம் பற்றிய விடயங்களில் பல விடயங்கள் உற்று நோக்கப்பட வேண்டும்.

பிறந்த நட்சத்திரம், பிறந்த மாதம், நட்சத்திரபடுபட்சி என்பன சுபகாரிய முகூர்த்தங்களுக்கு முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியவை. அத்தோடு திதி, நட்சத்திர வாரம் என்பனவும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. ‘‘சுபகாரியம்’’ இதில் எவை முக்கியமானதாக அமைகின்றது. விவாகம், மனை அத்திவாரம், புதுமனை புகுவிழா, புதுவியாபார திறப்பு விழா, புதிய தொழில் ஆரம்பம் இவை மிக முக்கியமானவை. இவை மனித வாழ்வியலுக்கு வலுவூட்டும் முதல் ஊக்க நாட்கள் என்றே கூறலாம்.
மாதங்களிலேயே தவிர்க்க வேண்டியவை ஆடி, புரட்டாதி, மார்கழி, மாசி என்பன. தவிர்க்க வேண்டிய திதிகள். சதுர்த்தி அட்டமி, நவமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பூரணை இவைகள் சுப முகூர்த்தத்திற்கு தவிர்க்க வேண்டியவை. இதிலே பூரணை (பெளர்ணமி) மத்திமமாக ஏற்றுக்கொள்ள முடியும். (ஆதாரம் செகராசசேகரமாலை 122ஆம் பாடல்) பொதுவாக சுப முகூர்த்தங்களுக்கு ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்தரம், அத்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி ஆகிய 11 நட்சத்திரங்களும் உத்தமமாக கூறப்படுகின்றது.

அடுத்து முக்கியமாக கூறப்படுவது வாரங்கள். புதன், வெள்ளி, திங்கள் இவை மூன்றும் உத்தம வாரம். வியாழன், ஞாயிறு, மத்திம வாரம். செவ்வாய், சனி இந்த இரு வாரமும் விலக்கப்பட வேண்டியவை. முக்கியமாக சனி வாரம் நாம் விலக்க வேண்டிய வாரம் ‘‘சனி நீராடல்’’ எனும் வழமை இன்றும் எம்மவர்கள் கைக்கொள்ளும் மிக முக்கியமான விடயமாகும். எமது தோஷங்கள், உடல் நோய்கள் தீர எண்ணெய் தேய்த்து நீராடும் நாளாக சனிவாரத்தை நாம் கைக்கொள்கின்றோம். அதைவிட ஒருவரின் மரண சடங்கிலும் பூதவுடல் எடுத்து தகனம் செய்வதை சனிவாரத்தில் மேற்கொள்வதில்லை.
''சனிப்பிணம் தனிப்போகாது" எனும் முது மொழியை இன்னும் அனுபவரீதியாக உணர்ந்து செயற்படுகின்றார்கள் எம்மவர்கள். உத்தரகரணம் எனும் ஆகமநூல் 12ஆம் சுலோகம் வாரங்களின் பலன் கூறுகையில் செவ்வாய், சனி வாரங்கள் அழிவைச் செய்வன என்று கூறுகின்றது. கிரகங்களிலே நாம் மிகவும் பயம் கொள்ளும் கிரகம் ‘‘சனீஸ்வரன்’’ எல்லா மனிதர்களுக்கும் சரியான நீதிமானாக இருந்து அவர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி எனும் ஏழரை ஆண்டும் அட்டமத்து சனி எனும் இரண்டரை ஆண்டும் என மொத்தம் 9 ஆண்டுகள் ஜாதகரின் கர்ம வினைக்கு ஏற்ப சரியான பலன்கள் கொடுத்து விடுவார். அதுமட்டுமன்றி ஏழரை சனி காலங்களில் பொங்குசனியாக நற்பலன் பலவும் வாரி வழங்குவதிலும் தவற மாட்டார்.

எனவே அப்பேற்பட்ட சனீஸ்வர பெருமானின் வாரமானது அவரை நினைத்து நீராடி வணங்குவதற்கு உரிய நாளாகும். சுப காரியங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும். ஒரு சுப முகூர்த்தம் எடுக்கின்ற போது மேற்கூறிய நட்சத்திரங்களில் 8ஆம், 12ஆம் இடங்களில் பாவக் கிரகங்களும் குரு, சுக்கிரன், புதன் 6ஆம், 8ஆம் இடம் இல்லாத மற்றைய இடங்களில் பலமுடனிருக்க அல்லது 1ஆம், 7ஆம் பாவத்திற்கு உரியவர் பலமாய் இருக்க குருவின் பார்வையுடன் 2ஆம், 3ஆம் இடம் சந்திரன் இருக்க 7ஆம் 8ஆம் இடம் சுத்தமாக இருக்க மிதுனம், கும்பம், கடகம், இடபம், தனுசு, துலாம் எனும் லக்கினம் அமைய சுப முகூர்த்தம் விவாகத்திற்கு மிகவும் விசேடமாகும். திதி, நட்சத்திரம், லக்கினம், யோகம் என்பன சிறப்பாக அமையும் நிலையில் தனியே இந்த வாரம் மட்டும் என்ன செய்யும் எனும் எண்ணமும் சிலருக்கு வருவதனால் வாரத்தில் அதிக அக்கறை காட்டாமல் முகூர்த்தம் நிர்ணயிக்கின்றனர்.

பூமியோடு சம்பந்தமுடைய செவ்வாய் வாரம் யாரும் முகூர்த்தத்திற்கு நிர்ணயம் செய்வது இல்லை. அதேபோலவே சனி வாரமும் தவிர்த்து வரப்பட்டது. தற்போது ஒரு குறுகிய கால எல்லையில் புலம்பெயர் நாடுகளில் நம்மவர்கள் முகூர்த்தம் எனும் நிலையில் முதல் சொல்வது சனி, ஞாயிறு தினம் பாருங்கள். ஏனெனில் அன்றுதான் அவர்களுக்கு விடுமுறைநாள். இதை சற்று சிந்தித்து தமது நெருங்கிய உறவோடு நல்ல முகூர்த்த நாளில் திருமணம் செய்து திருமண வரவேற்பு உபசாரத்தை சனி, ஞாயிறு வாரம் வைத்துக் கொள்ளலாமே. இது வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும், மேன்மையும் தரும். தேவாரம் தந்த மூவரில் சுந்திரமூர்த்தி நாயனார் 'மகத்தில் புக்கும் சனியை' என்று சனீஸ்வரன் செய்யும் அசுபபலனை குறிப்பிடுகின்றார். எனவே முடிந்த வரை சுப காரியங்களுக்கு சனிக்கிழமையை தவிர்ப்போம்.

துன்னையூர் - - கலாநிதி
ராம்.தேவலோகேஸ்வர குருக்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல