ஞாயிறு, 24 நவம்பர், 2013

பெண்­களை பாதிக்கும் பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய்

இந்த பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் பெண்­களில் பல பிரச்­சி­னை­களை தோற்று­விக்­கின்­றது. அவை­யா­வன ஒழுங்­கற்ற மாத­விடாய் சக்­கரம், தாம­த­மாகும் குழந்­தைப்­பாக்­கி­யம், உடற்­ப­ருமன் அதி­க­ரித்தல் மற்றும் ஹோர்­மோன்­களின் (Hormones) சம­நி­லை­யற்ற தன்­மையால் முகத்தின் தோற்­றத்தில் ஏற்­படும் அசா­தா­ரண மாற்­றங்கள் என்­பனவாகும். இந்த நோய் பெண்­களின் பிற்­கால வாழ்க்­கை­யிலும் கெடு­தலை உண்டு பண்ணும்.

இந் நோயின் அறி­கு­றிகள்

*ஒழுங்­கற்ற மாத­விடாய் சக்­கரம் அல்­லது மாதக்­க­ணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல்.

*குழந்தைப் பாக்­கியம் அல்­லது கருத்­த­ரித்தல் தாம­தம­டை­தல்.

*முகத்­திலும் உடம்­பிலும் வழ­மை­யை­விட அதி­க­மாக உரோ­மங்கள் வள­ருதல்.

*தலை முடி உதி­ர்தல்.

*அதி கூடிய உடற்­ப­ரு­மனைக் கொண்­டி­ருத்தல், உடற்­ப­ருமன் வேக­மாக அதி­க­ரித்தல், மற்றும் உடற்­ப­ரு­மனைக் குறைக்க முயற்­சிகள் எடுக்­கின்­ற­போது இது குறை­வடைதல் மிக மெது­வா­கவே நடை­பெறும்.

*முகத்தில் பருக்கள் தோன்­றுதல் (Acne).

*மனம் சோர்­வ­டைதல் மற்றும் மன­நிலை மாற்­றங்கள்.

இந்த நோய் அறி­கு­றிகள் பெண்­க­ளுக்கு பெண்கள் மாறு­படும். சில பெண்­களின் இந்த நோய் அறி­கு­றிகள் சிறி­த­ளவில் இருக்கும். ஆனால், வேறு சில பெண்­களில் இவை அதி­கூ­டிய உக்­கிர நிலையில் இருக்கும்.

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் எதனால் உரு­வா­கின்­றது?

இதற்கு பல விளக்­கங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நோய் சில­வே­ளை­களில் பரம்­ப­ரை­யா­கவும் கடத்­தப்­படும். உங்­க­ளது தாய் மற்றும் சகோ­த­ரிகள் போன்ற உற­வி­னர்­களில் இந்த நோய் இருந்தால் உங்­க­ளுக்கு இது உரு­வா­குவ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது.

இதன் நோய் அறி­கு­றிகள் அசா­தா­ரண ஹோர்­மோன்­களின் (Hormones) அள­வுடன் தொடர்­பு­பட்­டுள்­ளது. ஹோர்­மோன்கள் என்றால் எமது உடற்­செ­யற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தும் இரத்­தத்தில் காணப்­படும் இர­சா­யன பதார்த்தம். ஆண்­களில் காணப்­படும் ரெஸ்­ரெஸ்­ரரோன் (Testosterone) என்ற ஹோர்மோன். சாதா­ர­ண­மாக பெண்கள் சூல­கத்தில் இருந்து சிறி­த­ளவில் சுரக்­கப்­படும். பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்­களில் இந்த ரெஸ்­ரெஸ்­ரரோன் (Testosterone) கூடு­த­லாக சுரக்­கப்­பட்டு பெரும்­பா­லான நோய் அறி­குறி தோன்றக் கார­ண­மாக உள்­ளது.

இன்­சுலின் (Insulin) என்ற ஹோர்மோன் எமது இரத்­தத்தில் வெல்­லத்தின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது. பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் உடை­ய­வர்­களின் உடம்பில் இன்­சுலின் சரி­யாக தொழிற்­பட முடி­யா­துள்­ளது. எனவே, வெல்­லத்தின் அளவு உயர்­கின்­றது. இந்த வெல்­லத்தின் உயர்வைக் கட்­டுப்­ப­டுத்த உடம்பில் மேலும் மேலும் இன்­சுலின் சுரக்­கப்­ப­டு­கி­றது. அதி­க­ளவில் இன்­சுலின் இருப்­பதால் உடற்­ப­ருமன் அதி­க­ரிக்கும். மாத­விடாய் ஒழுங்­கற்­ற­தாகும். கருத்­த­ரித்தல் தாம­த­மடையும் மற்றும் அதி­க­ளவில் ரெஸ்­ரெஸ்­ரரோன் உரு­வாகும்.

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் எவ்­வாறு கண்டு பிடிக்­கப்­ப­டு­கின்­றது?

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்­களில் பல­வி­த­மான நோய் அறி­கு­றிகள் தோன்றி மறை­கின்­றது. இதனால் இந்த நோயைக் கண்டு பிடிப்­பதில் கடினம் உள்­ளது.

பின்­வரும் மூன்று குணா­தி­ச­யங்­களில் ஏதா­வது இரண்டு குணா­தி­சயங்கள் இருந்­தாலே இந்த நோய் உறு­திப்­ப­டுத்­தப்­படும்.

1. ஒழுங்­கற்ற மாத­விடாய் அல்­லது மாத­வி­டாயே வராது இருத்தல்.

2. முகத்­திலும் உடம்­பிலும் அதி­க­ளவில் உரோமம் வள­ருதல் அல்­லது இரத்­தத்தில் அதி­க­ளவில் ரெஸ்­ரெஸ்­ரரோன் இருத்­தல்.

3. ஸ்கேன் (Scan) பரி­சோ­த­னையில் பொலி­சிஸ்ரிக் ஓவரி காணப்­ப­டுதல்.

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோயினால் பிற்­கால வாழ்க்­கையில் ஏற்­படும் பாதிப்­புக்கள் எவை?

இந்த நோய் உடை­ய­வர்­களில் பின்­வரும் சிக்­கல்கள் பிற்­கா­ல­வாழ்க்­கையில் தோன்­றும்.

* நீரி­ழிவு, சல­ரோக நோய்

பொலி­சிஸ்ரிக் ஒவரி நோய் உடைய 10 பெண்­களை எடுத்தால் 1 அல்­லது 2 பெண்­களுக்கு நீரி­ழிவு நோய் ஒரு கால­கட்­டத்தில் உரு­வாகும். அத்­துடன் 40 வய­துக்கு மேற்­பட்­ட­வ­ராக இருப்பின் உற­வி­னர்­க­ளுக்கு நீரி­ழிவு நோய் இருப்பின் கர்ப்ப காலத்தில் நீரி­ழிவு நோய் ஏற்­பட்­டி­ருப்பின் மற்றும் உடற்­ப­ருமன் அதி­க­மாக இருப்பின் நீரி­ழிவு நோய் கூடு­த­லாக ஏற்­படும்.

* உயர் குருதி அமுக்கம்

பொலி­சிஸ்ரிக் ஒவரி நோய் உடைய பெண்­களில் உயர் குருதி அமுக்கம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. அத்­துடன் இது உடற்­ப­ருமன் அதி­க­மாக உள்­ள­வர்­களில் கூடு­த­லாக ஏற்­ப­டும்.

இரு­தய மார­டைப்பு நோய்கள்

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் உடை­ய­வர்­களில் நீரி­ழிவு நோயோ அல்­லது உயர் குருதி அமுக்­கமோ இருப்பின் இரு­தய, மார­டைப்பு நோய்கள் ஏற்­ப­ட­வாய்ப்­புள்­ளது.

கர்ப்­பப்பை புற்­று­நோய்கள்

மாத­விடாய் 3 அல்­லது 4 மாதங்­க­ளுக்கு ஒரு தடவை வரு­ப­வர்­களில் கர்ப்­பப்­பையின் உட்­சுவர் அதி­க­ளவில் தடிப்­ப­டைந்து சில பெண்­களில் இது புற்று நோயாக மாறும். இதற்கு புற­ஹொஸ்­ரரோன் (Progestorone) மாத்­தி­ரை­களை பாவித்து கர்ப்­பப்­பையை பாது­காப்­பது அவ­சியம். இவ்­வாறு மாத­விடாய் வரா­த­வர்­களில் இந்த மாத்­தி­ரை­களை 3 அல்­லது 4 மாதங்­க­ளுக்கு ஒரு தடவை 5 நாட்­க­ளுக்கு உட்­கொண்டு மாத­வி­டாயை தூண்­டு­வதன் மூலம் கர்ப்­பப்பை புற்­று­நோயைத் தடுக்­கலாம்.

இந்த நோயினால் ஏற்­படும் சிக்­கல்­களைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்­டும்?

ஆரோக்­கி­ய­மான சம நிலை­யான உண­வு­களை உட்­கொள்ள வேண்டும். அல்­லது பழங்கள், மரக்­க­றிகள், தானிய வகைகள், சிவத்த அரிசி, அவரை, கடலை மற்றும் மீன் வகைகள் உணவில் உள்­ள­டக்க வேண்டும். கொழுப்பு, மாச்­சத்து, இனிப்பு வெல்­லங்கள் மற்றும் உப்பு என்­பன தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். -உண­வு­களை ஒழுங்­கான நேரத்­துக்கு குறிப்­பாக காலை உணவு சரி­யாக எடுக்க வேண்டும்.

-ஒழுங்­கான உடற்­ப­யிற்சி முக்­கியம் ஒரு கிழ­மையில் ஆகக்­கு­றைந்­தது 3 தட­வை­க­ளா­வது 30 நிமிட உடற்­ப­யிற்சி செய்ய வேண்டும்.

இவ்­வாறு சிறந்த உண­வுப்­பழக்­கத்­தி­னாலும் ஒழுங்­கான உடற்­ப­யிற்­சி­யி­னாலும் உடற்­ப­ரு­மனை உங்­க­ளது உய­ரத்­துக்கு ஏற்ற அளவு கட்­டுப்­பா­டாக வைத்­தி­ருந்தால் இந் நோயின் உரு­வாக்­கத்­தையும் அதன் உக்­கி­ரத்­தையும் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கலாம். இதன் மூலம் மாதவிடாய்­களை ஒழுங்­காக வரச்­செய்­யலாம். குழந்தைப் பாக்­கி­யத்தை துரி­தப்­ப­டுத்­தலாம். முகத்தில் ஏற்­படும் அசா­தா­ரண தோற்­றத்தை குறைக்­கலாம் மற்றும் பிற்­கா­லத்தில் ஏற்­படும் உடல் நலச் சிக்­க­லான நீரி­ழிவு நோய், மார­டைப்பு நோய் மற்றும் கர்ப்­பப்பை புற்று நோய் என்­பன தடுக்­கப்­படும்.

பொலி­சிஸ்ரிக் ஓவரி நோயினால் ஏற்­படும் சிக்­கல்­க­ளுக்கு வேறு என்ன சிகிச்­சைகள் உள்­ளன.

-முகத்தில் அசா­தா­ரண உரோ­மங்கள் இருந்தால் அவற்றை அகற்றும் பல­வி­த­மான சிகிச்­சை­க­ளுடன் அவ்­வா­றான உரோ­மங்கள் வளர்­வ­தனைத் தடுக்கும் மருந்­து­களை முகத்தில் பூசுதல் மற்றும் மாத்­தி­ரை­களை உட்­கொள்ளுதல் இதற்கு பலன் தரும்.

-* ஒழுங்­கற்ற மாத­விடாய் முக்­கிய பிரச்­சி­னை­யெனில் இதனை ஒழுங்­காக வர­வ­ழைப்­ப­தற்­கான ஹோர்மோன் மாத்­தி­ரை­க­ளையோ அல்­லது குடும்­பக்­கட்­டுப்­பாட்டு வில்­லைகள் போன்ற நாளாந்தம் உட்­கொள்ளும் மாத்­தி­ரை­க­ளையோ இதற்கு பாவிக்­கலாம்.

-* குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டைதல் ஒரு முக்­கிய பிரச்­சினை எனில் இதற்குக் காரணம் சூல்­முட்டை வளர்ந்து வெளி­யே­றாது இருத்­தலே ஆகும். இதனைத் தூண்­டு­வ­தற்கு முதலில் உடற்­ப­ரு­மனை குறைக்க வேண்டும். அடுத்­த­தாக மெற்­போர்மின் (Metformin) போன்ற நீரி­ழிவு நோய்க்கு பாவிக்­கப்­படும் மாத்­தி­ரை­களே இந்த நோய்க்கும் பாவிக்­கப்­ப­டும். இதனால் இன்­சுலின் தொழிற்­பாடு உடம்பில் ஒழுங்­காக நடை­பெறும். இதன்­போது இன்­சுலின் அளவு உடம்பில் கட்­டுப்­பாட்டில் வரு­கின்­றது. இதனால் இந்­நோயின் உக்­கிரம் குறை­வ­டை­யும். மேலும் சூல் முட்டை வள­ரு­வ­தனை தூண்டும் மாத்­தி­ரைகள் அல்­லது ஊசிகள் என்பனவும் பாவிக்கப்படும். இவை பலனளிக்காவிட்டால் லப்ரஸ்கோபி (Laparoscopy) சத்திரசிகிச்சை மூலம் சூலகங்களில் சிறிய துளைகள் போடப்பட்டு (Ovarian drilling) சூல் முட்டை வளர்ச்சியை தூண்டலாம்.

இந்த நோயை நாம் இன்று கூடுதலாக காண்பதற்கு காரணம் எமது வாழ்க்கை முறையே.

அதாவது நாம் உட்கொள்ளும் கொழுப்புச்சத்தும் மாச்சத்தும் நிறைந்த பலவகை சுவை உணவுகளுக்கு ஈடாக நாம் எமது வேலைகளைச் செய்து சக்தியை விரயமாக்குவது இல்லை. ஏனென்றால் நாம் செய்து வந்த வேலைளை இன்று எமது வீடுகளில் இயந்திரங்கள் செய்கின்றன. இதுவே இன்று பெண்களின் உடற்பருமன் அதிகரித்து செல்ல மூலகாரணம். எனவே, எமது அன்றாட வேலைகளையே உடற்பயிற்சிகளாக்கி உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைத்து இந்த நோயில் இருந்து விடுபடுவோமாக.


டாக்டர் கு.சுஜாகரன் மகப்பேற்று பெண் நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல