“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.
அவர் பேசியது லண்டனில் இருந்து. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டாள். பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.
பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோஸைப் பார்த்தபோது அது 40 இல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும்.
களைப்பு, தலைச்சுற்று, சோர்வு என்ற எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது சீனி குறைவதால்தான் என சீனி நோயாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இவை வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். தனக்கு நீரிழிவு என்று அறிந்தவுடன் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பாக தோன்றுவதுண்டு.
நீரிழிவும் மருந்துகளும்
நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது. மாறாத புண்களுக்காகப் பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்று கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை.
“இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்” எனப் பலர் சொல்வார்கள் ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறு நீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுள் கிட்டுகிறது.
குருதியில் சீனியின் அளவு குறைதல்
இருந்தபோதும் ஒரு முக்கியமான ஆபத்து இருக்கவே செய்கிறது. முன்னரே குறிப்பிட்ட குருதியில் சீனியின் அளவு குறைவதே ஆகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இங்கு காணப்படுவதில்லை. நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.
இருந்தபோதும் Yale School of Medicine and the University of Chicago வில் செய்யப்பட்ட ஆய்வானது குருதியில் சீனி குறைவதானது எதிர்பாராமல் நடக்கக் கூடியது என்கிறது.
தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.
ஆனால் 10,000 Type 2 நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். அதுமட்டுமின்றி சீனியின் அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருந்தவர்களுக்கே அவ்வாறு சீனி மட்டம் எதிர்பாராது குறைந்ததாம்.
குறைந்த சீனி மட்டம் என்பது எது?
சாதாரண சீனி மட்டம் என்பது 60 - 60 mg/dl முதல் 118 mg/dl வரையாகும். சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.
குறைந்த சீனி மட்டத்தின் அறிகுறிகள் எவை?
நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, மாறாட்டம், தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
சில தருணங்களில் நோயாளி உணர்வதற்கு முன்னரே கூட இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்பமடைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.
இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீற்றர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம்60 mg/dl (3.3 mmol/L)க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை ((Hypoglycemia)) என நிச்சயமாகச் சொல்லலாம்.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?
உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காமை காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.
திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். “இண்டைக்கு சாப்பாடு கூடிப் போச்சு” என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.
நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதில்லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் தேவையான அளவிலும் அதிகம் உட்கொண்டால் அந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சோடாவோ குடியுங்கள், அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் குருதியால் விரைவாக உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.
உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், அதேநேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.
முதலில் கூறிய பெண்ணுக்கு நாளம் ஊடாக குளுக்கோஸ் ஏற்றிய பின் மெதுவாக சகஜ நிலைக்கு வந்தாள். வீட்டில் குளுக்கோமீற்றர் இருந்தது. இருந்தபோதும் தாதிப்பெண் அதை உபயோகித்து சீனியின் அளவை அளவிட்டுப் பார்த்திருக்கவில்லை. விடயம் விளங்கிய மகளும் ஊருக்குப் போயிருந்தாள். மருத்துவ மனையில் கொடுத்த மருந்துகளின் அளவை நீரிழிவின் நிலைக்கு மாற்றவில்லை. அதனால் எற்பட்ட வினை.
நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?
நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஒரு சிலர் குருதியில் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு.
ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை. ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre-diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் insulin resistance நிலையால் அவர்களது சீனி மட்டம் குறையலாம். மிக மிக அரிதாக இன்சுலினை உற்பத்தி செய்யும் கட்டிகள் (insulinomas) தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.
மேற்கொண்டு செய்ய வேண்டியவை
குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.
மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.
சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும். உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100இற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியை செய்யலாம்.
நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல.
மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
டாக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக