ஞாயிறு, 24 நவம்பர், 2013

அடங்கும் மாநாட்டு ஆர­வா­ரங்­களும் கிளம்பும் பாதீட்டு நெருக்­க­டி­களும்

'ஓரா­யிரம் யானை கொன்றால் பரணி. ஆதலால் யுத்தம் இருக்கு கவனி....' என்­கிற பாடல், நா. முத்­துக்­கு­மாரால், பாலாவின் ' நந்தா' திரைப்­ப­டத்­திற்­காக எழு­தப்­பட்­டது. இது, ஒடுக்­கப்­ப­டு­வோ ரின் இன்­னு­மொரு போர்க்­க­ளத்­திற்­கான பாதையைக் காட்­டு­வது போலுள்­ளது.

11 வரு­டங்­க­ளுக்கு முன் எழு­தப்­பட்ட பாட்­டா­யினும், முள்­ளி­வாய்க்கால் பேர­ழிவு முடி­வுற்று நான்கு வரு­டங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்­களும், நீதி கோரும் ­கா­ணாமல் போக­டிக்­கப்­பட் ட மக்­களின் உற­வு­களும், அதனை உயிர்ப்­புள்ள கவி­தை­யாக இன்றும் நிறுத்தி வைத்­துள்­ளார்கள்.

ஒரு விடயம் மட்டும் ஊடக இரும்புத் திரை­களை, வெள்ளை வான்­களின் உறு­மல்­களைத் தாண்டித் தெரி­கி­றது.

அது வேறொன்­று­மில்லை. சுயா­தீன சர்­வ­தேச விசா­ர­ணையை வேண்டி நிற்கும் தமிழ் மக்­களின் குரல்தான் அது.

அதை எப்­படி உறு­தி­யாகச் சொல்ல முடியும் என்­கி­றீர்­களா? சர்­வ­தேச நாடு­க ளின் தலை­வர்­களும், ஐ.நா.சபையின் உயர்­மட்டத் தலை­வர்­களும் தமிழர் தாய கப் பகு­தி­களில் காலடி வைக்­கும்­போது, காணாமல் போன தமது உற­வு­களை கண்டு பிடித்துத் தரு­மாறு, இவர்­க­ளி­டமே அந்த மக்கள் திரண்டு சென்று முறை­யி­டு­கின்­றார்கள்.

ஒடுக்­கப்­படும் தமி­ழினம் வேண்­டு­வது, சர்­வ­தேச விசா­ரணை என்­ப­தைத்­த­விர வேறொன்­று­மில்லை என்­பதை உணர்த்த இது ஒன்றே போதும்.

அதே­வேளை, பாதிப்­புற்ற பல்­லா­யி­ரக்­ க­ணக்­கான தமிழ் மக்­களின் வலி­க­ளை யும், துய­ரங்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத் தும் வகையில் சுழல்பந்து வீச்­சாளர் முத்­தையா முர­ளி­தரன் வழங்­கிய நேர்­காணல், இந்த ஆண்டின் மிகக் கொடு­மை­யான விட­ய­மாகப் பார்க்க வேண்டும்.

அத்­தோடு, உல­கி­லுள்ள கிரிக்கெட் ஆத­ர­வா­ளர்­களை, தனது நட்­சத்­திர அந்­தஸ்து போர்­வை­யூ­டாக, ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சார்­பாக மாற்றும் முயற்­சி­யா­னது, விளை­யாட்­டையும் அர­சி­ய­லையும் கலக்கக் கூடா­தென்று அடம் பிடிக்கும் தீவி­ர­வா­தி­களின் சிந்­த­னைக்கு விடப்­படும் சவா­லாகக் கருத வேண்டும்.

முர­ளியின் அதி­கா­ர­வா­சி­கள் ­சார்­பான அர­சியல் கருத்­தினை, மிகவும் காட்­ட­மான வகையில் கண்­டித்­துள்ளார் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன். காணாமல் போக­டிக்­கப்­பட்ட மக்­களின் சார்­பாக தொடர்ச்­சி­ யாகக் குரல் கொடுத்­த­வாறு பல போராட்­டங்­களை முன்­னெ­டுக்கும் மனோ கணே­ச­னுக்கு அந்த மக்­களின் துய­ரமும், சீற்­ற மும் நன்கு புரியும்.

சனல் 4 வெளி­யிட்ட இன அழிப்பு ஆவ­ணங்கள் போலி­யா­ன­வை­யென்று இது­வரை எவ­ராலும் நிரூ­பிக்­கப்­ப­ட­ வில்லை. சர்­வ­தேச சுயா­தீன விசா­ர­ணை­யொன்று நிகழ்த்­தப்­பட்டால் அதன் உண்­மைத்­தன்மை உல­கிற்கு வெளிச்­ச­மாகும். அதை­வி­டுத்து, எந்த அறி­வியல் உண்­மை­ யின் ­அ­டிப்­ப­டையில் சனல் 4 இன் காணொ­ளிகள் பொய்­யென்று சுழல் பந்து வீச்­சா­ள­ரால் ­சொல்ல முடி­கின்­றது.

வேறொரு கோணத்தில் பார்த்தால், இதனை அர­சியல் பிர­வேசம் ஒன்­றிற்­கான முன்­னோட்­ட­மா­கவும் பார்க்­கலாம். ஆனால், புகழின் உச்­சா­ணிக் ­கொம்பில் அமர்ந்­தி­ருக்கும் எவரும், மக்­களின் உணர்­வோடும், வாழ்­வோடும் விளை­யாட முற்­பட்டால், ஒரு சிறு கணத்தில் மக்கள் நெஞ்­சங்­க­ளி­லி­ருந்து அகற்­றப்­ப டும் சோகமும் நடக்கும். கர­கோஷம் செய்ய ஆட்கள் இருக்­க­மாட்­டார்கள்.

பொது­ந­ல­வாய மாநாடு நடை­பெற்ற வேளை­யில்தான், இந்த சுழல்பந்து வீச் சால் ஈழத்­த­மி­ழினம் ஆவே­சப்­பட்­டது. ஆனால் ஆட்­சி­யாளர் எதிர்­பார்த்­தது போல, எந்த விக்­கெட்­டையும் முர­ளி­த­ரனால் வீழ்த்த முடி­ய­வில்லை. மழை போல் பொழிந்த எறி­க­ணை­களை சந்­தித்த மக்­க­ளுக்கு, இவ்­வா­றான சிறு சுழல்­பந்து வீச்­செல்லாம் ஒரு பொருட்­டே­யல்ல.

இருப்­பினும் வர்த்­தகக் குழு­வோடு இலங்கை சென்ற பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன், 2015 மே இல் நிறை­வ­ டையும் பத­விக்­கா­லத்தை மனதில் நிறுத்தி, சில காட்­ட­மான கேள்­வி­களை எழுப்ப மறக்­க­வில்லை.

'சுயா­தீன விசா­ர­ணையை இலங்கை அரசு நடத்­தா­விட்டால், வரு­கிற மார்ச்சில் நவ­நீ­தம்­பிள்ளை அம்­மையார் கொண்­டு­வரும் சர்­வ­தேச சுயா­தீன விசா­ரணை ஒன்­றிற்­கான பிரே­ர­ணையை ஆத­ரிப்போம்' என்று கமரூன் போட்ட வெடியால், அரசு அதிர்ந்­தது. அதை முழு­வ­து­மாக நம்பி சில ஈழத்­தமிழ் அமைப்­புக்­களும், ஊட­கங்­களும் கொண்­டா­டத் ­தொ­டங்கி விட் ­டன. இவை­த­விர, பிரித்­தா­னியப் பிர­த­ம ரைப் பாராட்டி கலைஞர் கரு­ணா­நி­தியும் எழு­தி­விட்டார்.

ஆனால் பூனைக்கு, ஐ.நா.மனித உரி­மைப்­பே­ர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை அம்­மை­யாரே மணி கட்­டட் டும் என்­கி­ற­வ­கையில், பிரித்­தா­னிய பிர­தமர் தெரி­வித்த கருத்­துதான், பூகோள அர­சி­யலில் இந்த வல்­ல­ர­சா­ளர்கள் போடும் இரட்டை வேடங்­க­ளையும், தற்­காப்பு நிலை­க­ளையும் புரிய வைக்­கி­றது.

ஒடுக்­கப்­படும் தமிழ்த்­தே­சிய இனத்­திற்கு, உண்­மை­யா­கவே உதவி செய்ய விரும்­பினால். பாது­காப்­புச்­ச­பையில் பிரித்­தா­னிய அரசே இந்த தீர்­மா­னத்தை முன்­வைக்­கலாம்.

வடக்கில் கால் பாதிக்கும் வல்­ல­ரசுத் தலை­வர்கள் யாவரும், தற்­கா­லிக ஆற்­றுப்­ப­டுத்­த­லைத்தான் அங்கு வாழும் மக்­க­ளுக்கு அளிக்­கின்­றார்கள்.

இர­ணங்­களின் மீது ஒரு மெல்­லிய காற்று வருடிச் செல்­கி­றது. கண நேர மகிழ்வு, அடுத்­த­க­ணத்தில் தலை­கீ­ழாக புரட்­டிப்­போ­டப்­ப­டு­கி­றது. சற்று இளைப் ­பா­றிய வெள்ளை வாக­னங்கள் மீண்டும் இயங்கத் தொடங்­கி­வி­டு­கின்­றன. காணா மல் போதல் என்­கிற இயல்பு வாழ்வு மறு­ப­டியும் ஒட்டிக் கொள்­கி­றது.

ஏதோ­வொரு மூலையில், அர­சியல் பேசாமல், அபி­வி­ருத்தி பற்றிப் பேசிக் கொண்டு மாகா­ண­ச­பை­களும் அசைந் து ­கொண்­டி­ருக்­கின்­றன அணுக்­க­ளைப்­போல.

வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கொண்­டு­வரும் மாநாட்டு ஆர­வா­ரங்கள் முடி­வ­டைந்­ததும், வரவு- செலவு திட்­டத்­திற்­கான பெரு­விழா ஆரம்­ப­மா­கி­விட்­டது.

மாநாட்­டிற்கு வருகை தந்த, பொது­ந­ல­வாய நாடு­களின் விழு­மி­யங்­களைக் காப்­பாற்ற திட­சங்­கற்பம் பூண்­டுள்ள இரட்­ச­கர்கள் எவ­ருமே, பாது­காப்பு அமைச்­சுக்கு இத்­தனை கோடி பணத்தை ஏன் ஒதுக்­கீடு செய்­கி­றீர்கள் என்று கேட்­க­வில்லை.

மனித உரிமை மீறல்­களைத் தட்­டிக்­கேட்போம், அதட்டிக் கேட்போம் என்று சொன்­ன­வர்கள், வர்த்­தகக் குழு­வோ­டு தான் இலங்கை சென்­றார்கள்.

அதே­வேளை, இவ் வரவு- செலவு திட்­ட­மா­னது கிரா­மிய பொரு­ளா­தா­ரத்தை இலக்கு வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­ தா­க ­த­லை­ந­கர பொரு­ளியல் நிபு­ணர்கள் விளக்­க­ம­ளிக்­கின்­றார்கள். பாது­காப்புத் துறை­யோடு நகர அபி­வி­ருத்தி அமைச் சும் சேர்ந்­தி­ருப்­பதால், ஒதுக்­கப்­படும் பெரிய தொகை பாதுகாப்பு அமைச்சுக்கு மட்டுமானதல்ல என்கிற வியாக்கியா னத்தை அரசு கூறும் என்கிறார்கள்.

இருப்பினும், பொதுநலவாய மாநாடு பெரியளவில் வெளிநாட்டு நேரடி முதலீ டுகளைக் கொண்டு வரவில்லை என் கிற செய்தியும் வருகின்றது. வரவு–-செல வுத் திட்ட குறைநிரப்ப, தேசிய சேமிப்பு வங்கியூடாக மீண்டும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான முறிகளை விற்ப தற்கு அரசு தயாராகலாம் என்று வேடிக் கையாகச் சொல்லப்படுகிறது.

சீனாவிடம் வாங்கிய கடனிற்கான வட் டிப்பணத்தைச் செலுத்த, மென்மேலும் கடன் வாங்கும் தவிர்க்க முடியாத சூழ் நிலைக்குள் அரசு தள்ளப் படுகிறது.

கடனை அடைக்கக் கடன் வாங்கும் நாட்டில் ஏராளமான பொருளியல் நிபு ணர்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல