ஞாயிறு, 24 நவம்பர், 2013

தேயிலையை அறிமுகப்படுத்திய தேசத்தின் இளவரசர் சார்ள்ஸ் மலையக தேயிலைத் தோட்டத்தை பார்வையிட வந்தபோது ....

தேயிலைப் பயிர்ச்­செய்­கையை இந்த நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­ தி­ய­வர்கள் ஆங்­கி­லே­யர்­க­ளாவர். அது­மட்­டு­மின்றி இந்த நாட்­டுக்கு இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் வரு­ வ­தற்கும் அவர்­களே கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றார்கள். இந்­தியத் தமி­ழர்கள் இந்த நாட்­டி­லேயே நிரந்­த­ர­மாக தங்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. ஆனால், ஆங்­கி­லே­யரோ பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நாட்­டை­விட்டு வெளி­யேறி தாய்­நாட்­டுக்குத் திரும்­பி­விட்­டனர். இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான தொடர்­பு­களும் இல்­லா­மல்­போய்­விட்­டது.

இந்த நிலையில் கடந்­த­வாரம் கொழும்பில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக பிரித்­தா­னிய மகா­ரா­ணியின் பிர­தி­நி­தி­யாக இள­வ­ரசர் சார்ள்ஸ் அவ­ரு­டைய பாரி­யா­ருடன் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் அப்­ப­டியே மலை­ய­கத்­திற்கும் விஜயம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தார். அவர் முதலில் கண்டி தல­தா­மாளி­கைக்கும் அதன்­பின்னர் நுவ­ரெ­லி­யா­விற்கும் விஜயம் செய்தார்.

நுவ­ரெ­லி­யாவில் “மென்கப்” என்ற விஷேட தேவை­யு­டையோர் பாட­சா­லை ஒன்­றுக்கு இள­வ­ரசர் சார்ள்ஸ் விஜயம் செய்தார். அங்­குள்ள விஷேட தேவை­யு­டைய மாண­வர்­க­ளுடன் உரை­யாடி, பாடி மகிழ்ந்தார். இது அந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்­சியை கொடுத்­தது.

இள­வ­ரசர் தமது மலை­யக விஜ­யத்­தின்­போது தோட்­டங்­க­ளுக்குச் சென்­று சென்று தேயிலைச் செடிகள், தேயிலைத் தொழிற்­சாலை, தொழி­லா­ளர்கள், அவர்­களின் வாழ்க்கை நிலை என்­ப­வற்றை நேரில் பார்த்து அறிந்­து­கொள்வார் என்­றுதான் நீங்கள் எதிர்­பார்த்­தி­ருப்­பீர்கள்! ஆனால் அவ்­வாறு எது­வு­மில்லை.

நுவ­ரெ­லி­யா­வுக்கு ஹெலி­கொப்­டர்­ மூலம் வந்த அவர் அங்­கி­ருந்து (தரை­மார்க்­க­மாக) லபுக்­க­லை தோட்­டத்­திற்கு வந்தார். அவரை குறித்த (லபுக்­கலை) தோட்­டத்தின் உயர்­அ­தி­கா­ரி­கள், அவர்­க­ளது உற­வி­னர்கள் மற்றும் தோட்ட நிரு­வா­கிகள் ஆகியோர் வர­வேற்­றனர்.

அங்­கி­ருந்த அனை­வ­ரி­டமும் சுமு­க­மாக உரை­யா­டிய இள­வ­ரசர் தமது சந்­தே­கங்­களை அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் கேட்டு நிவர்த்தி செய்­து­கொண்டார். பின்னர் அவரின் பிறந்த தினத்­தை­யொட்டி அங்கு தயா­ராக வைக்­கப்­பட்­டி­ருந்த கேக் வெட்­டப்­பட்­டது. பல நூற்றுக்­க­ணக்­கான வண்ணப் பலூன்கள் வானில் பறக்­க­வி­டப்­பட்­டன.

பின்னர், பெண்கள் கொழுந்து பறிக்கும் இடத்­திற்கு இள­வ­ரசர் அழைத்­துச்­செல்­லப்­பட்டார். அங்கு கொழுந்து பறித்த பெண்கள் மிகவும் அழ­காக காட்­சி­ய­ளித்­தனர். வழ­மை­யாக தோட்­டத்­தொ­ழி­லாளர் உடுத்தும் உடை­யி­லி­ருந்து வேறு­பட்டு அதா­வது இடுப்பில் கன­மான பொலித்தீன் ரெட்டு மற்றும் தலையில் கொங்­கானி போன்­றவை இல்­லாமல் காணப்­பட்­டனர். புதி­ய­பட்­டுச் ­சேலையும், வண்­ண­வண்ண அணி­க­லன்­களும் அணிந்­தி­ருந்­தனர்.

விஷே­ட­மாக பழைய பாரம்­ப­ரிய மூங்கில் கூடை­க­ளின்றி நவீன கொழுந்து கூடை­களை சுமந்­த­படி இருந்­தனர். வழ­மை­யாக தோட்­ட­மக்கள் கொழுந்து பறிக்க செல்­வ­துபோல் இருக்க வில்லை. கொழுந்து பறித்து கொண்­டி­ருந்த பெண்ணான டி..வினி­த­மே­ரி­யிடம் வயது என்ன? பெயர் என்ன? என்று மாத்­தி­ரமே இளவரசர் கேட்டார். சுமார் 25 பெண்கள் அங்கு கொழுந்­து­ப­றித்­த­படி இருந்­தனர்.

அதன்பின் புதி­தாக அமைக்­கப்­பட்ட தேயிலை நூதன சாலையை திறந்து வைத்தார். அ­வ­ருக் கும் நினை­வுப்­ப­ரி­சுகள்; வழங்­கப்­பட்­டன. ஒரு­புறம் பியானோ வாத்­தியம் இசைக்­கப்­பட்டு கொண்­டி­ருந்­தது. நூதன சாலையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவரின் தாயாரின் படத்தை பார்­வை­யிட்டார். ஏற்­க­னவே தாயார் மேற்­படி தோட்­டத்­திற்கு வருகை தந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கப்­பட்­டன.. பின்பு தகவல் தொழில்­நுட்ப பிரி­வையும் பார்­வை­யிட்டார். அங்கு தோட்ட தொழி­லா­ளர்­களின் பிள்­ளைகள் இருந்­தமை ஒரு விஷேட அம்­ச­மாகும்.

பின்னர்; தேநீர் ருசி பார்க்கும் பிரி­விற்கு அழைத்­துச்­செல்­லப்­பட்டார். அங்கு பல தரப்­பட்ட தேயி­லை­வ­கை­க­ளி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்ட தேநீரை ருசித்த இள­வ­ரசர் தனக்குப் பிடித்த சுவை­யொன்றை தெரிவு செய்து சந்­தோ­ஷ­ம­டைந்தார். அத்­துடன் இவர் பிரித்­தா­னி­யாவில், இலங்கை தேயி­லையை குறிப்­பாக குறித்த தோட்­டத்தின் தேயி­லையை விரும்பி அருந்­து­வது தெரி­ய­வந்­தது. இவை அனைத்­தையும் முடித்­து­விட்டு அங்­கி­ருந்த அனை­வ­ருக்கும் கைய­சைத்துவிட்டு ஹெலி­கொப்­டர்­ மூலம் பய­ண­மானார்.

இள­வ­ர­ச­ருக்கு விஷேட பாது­காப்பு பிரி­வி­னரால் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்கள் மாத்­தி­ரமே குறித்த பிர­தே­சத்­துக்குள் செல்­லக்­கூ­டி­ய­தாக இருந்­தது. பொது­மக்கள் மலை­மே­டு­க­ளி­லி­ருந்து அங்கு நடந்­த­வை­களை பார்த்துக்­கொண்­டி­ருந்­தனர். இள­வ­ரசர் வந்த இடத்­திற்கு எல்­லோரும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இள­வ­ரசர் வரு­கை­யை­யொட்டி மேற்­படி தோட்­டத்தில் பல­கோடி ரூபா செலவில் பல்­வேறு அபி­வி­ருத்திப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. பாதைகள் துப்புரவு செய்­யப்­பட்டு விஷேட பாது­காப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன, ஹெலி­கொப்டர் இறங்­கு­தளம் அமைக்கப்பட்டிருந்தது, வீட்­டுக்­கூ­ரை­க­ளுக்கு வர்­ணம் தீட்­டப்­பட்­டி­ருந்­த­துடன் பூ மரங்கள், மற்றும் பூக்­கன்­றுகள் நாட்­டப்­பட்­டி­ருந்­தன.

கடந்த பல வரு­டங்­க­ளாக திருத்­தப்­ப­டாமல் இருந்த பாதைகள் அனைத்தும் திருத்தி அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த அபி­வி­ருத்­தி­களை பார்­வை­யி­டும்­பொ­ழுது பிர­மிப்­பா­கவும் அதிர்ச்­சி­யா­கவும் இருந்­தது. ஏனெனில் எமது தோட்ட தொழி­லா­ளர்கள் எத்­தனை கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரு­கின்­றனர் என்­பது இங்­குள்­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே தெரியும். பல வரு­டங்­க­ளாக வர்ணம் பூசப்­ப­டாமல் இருந்த பல கூரை­க­ளுக்கு வர்ணம் பூசப்­பட்­டது. கூரைகள் வர்ணம் பூசப்­பட்­ட­னவே தவிர வீட்டின் உட்­ப­கு­தியில் எந்­த­வி­த­மான அபி­வி­ருத்­தியும் செய்­யப்­ப­ட­வில்லை. இள­வ­ரசர் நிச்­ச­ய­மாக வீடு­க­ளுக்கு விஜயம் செய்­ய­மாட்டார் என்­பது நன்கு தெரியும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது வீட்டின் உட்­ப­குதி பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருக்­காது என்­பதால் இந்த ஏற்­பா­டாகும். எனவே இள­வ­ர­ச­ருக்கு வெளியில் தெரி­யக்­கூ­டிய இடங்களுக்கு மாத்­தி­ரமே கோடிக்­க­ணக்­கான ரூபாய் செலவு செய்­யப்­பட்டிருந்தன. அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன.

இள­வ­ர­சரின் பிறந்த தின­மான 15ஆம் திகதி அன்று தோட்­டத்தில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா பணமும் உலர் உணவு பொருட்­களும் வழங்­கப்­பட்­டன. அதிலும் ஒரு சில­ருக்கு இந்த எதுவும் கிடைக்­க­வில்லை என சில தொழி­லா­ளர்கள் புலம்­பு­வதை கேட்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

பாதை ஓரங்­களில் பல ஆண்­டு­க­ளாக திருத்தி அமைக்­கப்­ப­டாமல் இருந்த கொழுந்து மடு­வங்கள் திடீ­ரென புதுப்­பொ­லிவு பெற்­றி­ருந்­தன. அதை­விட இந்த மக்­கள்­மீது அக்­கறை இருந்­தி­ருந்தால்; இள­வ­ர­சரின் இலங்கை விஜ­யத்தை முன்­னிட்டு சில வீடு­க­ளை­யா­வது அமைத்துக் கொடுத்­தி­ருக்­கலாம். அல்­லது வீடு­களை திருத்தி அமைப்­ப­தற்­கான பண உத­வி­களை செய்­தி­ருக்­கலாம். அவ்­வ­ள­வு­கூட தேவை­யில்லை, இள­வ­ர­ச­ருக்கு மாலை அணிவிப்பதற்கு ஒரு தோட்ட தொழிலாளிக்கு சந்தர்ப்பம் கூடவா வழங்க முடியவில்லை?

பெருந்தோட்ட மக்கள் சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியரினால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அன்று அவர்கள் வருகின்றபோது என்னனென்ன பிரச்சினைகளை எதிர்நோக்கினார்களோ அதே பிரச்சினைகள் தற்போதும் நிலவுகின்றன.

பல்வேறு வகைகளில் தொடர்ந்தும் தோட்டமக்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இளவரசர் சார்ள்ஸின் வருகையால் இதற்கொரு தீர்வு கிடைத்திருக்குமானால் அவை பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும் அவருக்கு மலையக மக்களின் நிலை தொடர்பாக எந்தவொரு விடயமும் தெரியாது. யாரும் சொல்லியோ, ஞாபகப்படுத்தியோ இருந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

ஆனால், இது இளவரசருக்கு ஒரு உல்லாசப்பயணமாகவே அமைந்திருந்தது.

பா. திரு­ஞானம், - நுவ­ரெ­லியா எஸ். தியாகு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல