புதன், 29 ஜனவரி, 2014

தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்

இறைபணிக்கு தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த வணக்கத்துக்குரிய தோமஸ் அடிகளாரின் 50 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் நாளை (27) திங்கட்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஜாதி, மத, இன வேறுபாடின்றி சகலருக்கும் மன நிறைவுடன் சேவையாற்றினார்.வண.தோமஸ் யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வு எனும் கிராமத்தில் 07.03.1886 ஆம் ஆண்டு பிறந்தார். பிறக்கும்போதே உடல் பலவீனமாகப் பிறந்த இவர் சுவாசிக்கவே மிகவும் கஷ்டப்பட்டார்.

இதனால் பிறந்தவுடனேயே இறந்துவிடுவாரோ என்று அஞ்சி அவரது பெற்றோர் குருவானவரை அழைத்து வீட்டிலேயே திருமுழுக்குக் கொடுத்தனர். எனவே அவர் பிறந்த சில மணி நேரங்களிலேயே பிறப்பின் ஜென்ம பாவநிலையிலிருந்து விடுபட்டு தூய ஆன்மாவை உடையவரானார்.

தனது ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் பாடசாலையிலும் உயர்கல்வியை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பயின்றார். இந்தக் காலத்தில்தான் இறைபணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் உதயமானது. இயேசுவின் நற்செய்தியை மக்களுக்குப் போதித்து ஆன்மாக்களை உலக பாவ நிலைகளிலிருந்து விடுவித்து இறைவன் பதம் சேர்க்க வேண்டும் என்னும் ஆவல் உடையவராக இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி இறைவனுக்கு பணியாற்ற குருவானவராக யாழ்.மரியன்னை பேராலயத்தில் அன்றைய யாழ்.மறைமாவட்ட ஆயர் மேதகு யூலன் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஆயர் மக்களுக்குக் கூறிய தனது குறிப்பில் தந்தை தோமஸ் அடிகளார் உடல்நலம் மிகவும் குன்றியவராகவும் வைத்தியர்களின் கணிப்பின்படி இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என்பதாலும் புனித பத்திரிசியார் கல்லூரியில் உள்ள குருக்களுடன் தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என்று கூறினார்.

எனினும் இறைவனின் திட்டம் வேறாக இருந்தது. இறைவன் இவரை மேலான காரியங்களுக்காக தயாரித்துக் கொண்டிருந்தார். தாழ்ச்சி, அன்பு, அனைவரையும் அன்பு செய்கின்ற பண்பு, வாழ்விலே அனைவருக்கும் உதவி செய்து சிறப்பாக ஏழை, எளியோர், புறக்கணிக்கப்பட்டோர் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பணயாற்றினார்.

1926ஆம் ஆண்டு யாழ் ஆயர் மேதகு கியோமர் ஆண்டகை அவர்கள் அன்றைய திருச்சபையின் திருத்தந்தையாக இருந்த பதினோராம் பத்திநாதர் அனுப்பிய ''திருச்சபையின் பணிகள்'' என்ற திருமடலைப்பெற்றார். அதில் ''உங்கள் மறைமாவட்டங்களிலேயே செபதப வாழ்வை வாழும் துறவற சபைகள் உங்கள் மக்களாலேயே ஆரம்பிக்கப்படலாம்'' என்று அழைப்புக் கொடுத்திருந்தார் உடனேயே அவர் புனித பத்திரிசியார் கல்லூரியின் அப்போது கல்விப்பணியிலும் மாணவர் விடுதிப் பொறுப்பாளராகவும் சிறந்த பணியாற்றிக் கொண்டிருந்த அருட்தந்தை தோமஸ் அடிகளாரை யாழ். ஆயர் இல்லத்திற்கு அழைத்தார். அவரிடம் திருந்தந்தையின் விருப்பத்தை வெளிப்படுத்தி நமது மறைமாவட்டத்தில் செபதவ வாழ்வு வாழும் ஒரு தியான யோக துறவற சபையை ஏற்படுத்தப்படவேண்டும் என்று தனது விருப்பத்தை அறிவித்ததுடன் அடிகளாரே இந்தப்பணியை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆயரின் இந்த வேண்டுகோளை, அதே மனநிலையோடு வாழ்ந்த தோமஸ் அடிகளார் ஏற்றுக்கொண்டு தன்னை முழுவதும் தனது பணியை ஆரம்பிக்க முழு ஆர்வத்தோடு செயற்படுத்தத் தொடங்கினார்.

இந்த மாபெரும் இறை பணிக்கு ஆறு இளைஞர்களை தேர்ந்தெடுத்து வசாவிளான் பகுதியிலுள்ள ''தோலகட்டி'' என்ற சிற்றூரில் இந்த தியான யோக துறவற சபையை 2.2.1928 இல் நிறுவினார்.

பல்வேறு கஷ்டங்கள் துன்பங்கள் அவரை அழுத்திக்கொண்டிருந்தன. சபையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தம்மோடு இணைந்திருப்பவர்களைப் பராமரிப்பதற்கும் அனைவரும் தங்குவதற்றும் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு பணம், பொருள், ஆள்பலம் தேவையாக இருந்தது. இவர் ஏற்படுத்தியது ஒரு புதிய ஆன்மிக புரட்சியின் வாழ்வாக அமைந்ததால் பலரும் இதை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இவருடைய முயற்சிக்கு எதிர்ப்பையே காட்டினர்.

இவரின் வாழ்வு அதிக ஒறுத்தல் உபவாசமும் அமைதி, மௌனம் மிக்க வாழ்வாக இருந்தது. பல துன்பங்களினூடாக வாழ்ந்து வந்த வேளையில் இத்தகைய வாழ்வை அறிந்து பல அழைத்தல்கள் இந்தியாவிலிருந்து வரத்தொடங்கின. அதன் பின் சிறிது சிறிதாக தோலகட்டி ஆச்சிரமமானது தேவைகளுக்கேற்ப வளர்ச்சி காணத்தொடங்கியது. அவர்கள் தாங்களே உழைத்து வாழவேண்டிய நிலையிலிருந்தனர்.

எனவே இறைவனின் பராமரிப்பில் நெல்லிரசம் தயாரிக்கும் முறையைக்கண்டுபிடித்து அதை செய்தனர். அத்துடன் முந்திரிகை, மாதுளை, நாவல், தோடை, அன்னாசி, எலுமிச்சை போன்ற பழவகைகளிலிருந்தும் நன்னாரி போன்ற வேர் வகைகளிலிருந்தும் இனிய பானங்கள் தயாரித்தனர்.

அந்தப்பகுதிகளில் முதல் முதலாக திராட்சைப் பயிர்களைப் பயிரிட்டு நல்ல விளைச்சலைக் காட்டினர். அதன் வழியாக வசாவிளான், அச்சுவேலி, இளவாலை, உரும்பிராய் பகுதிகளில் மக்கள் திராட்சை பயிரிடத் தொடங்கினர். மேலும் எல்லா வகையான பழ மரங்கள் , கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட பலதும் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலைப்பெற்றனர்.

மாட்டுப்பண்ணை, கோழிப் பண்ணையும் மேலும் புறா, லவ்பேட்ஸ் போன்ற பறவையினங்களும் , முயல், அணில் போன்ற பிராணிகளும் வளர்த்தனர். அத்துடன் மேசன் வேலை, தச்சுவேலை, நெசவு வேலை உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில்களும் அங்கு நடைபெற்றன.

இவைகளின் வழியாக பல ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுத்து அன்றிலிருந்த ஜாதி,மதம் மற்றும் சமுதாய சீர்கேடுகளைக் களைந்து சமுதாயத்தில் தள்ளப்பட்டவர்களும் நலமே வாழ வழிகாட்டினார். இதன் மூலம் அடிமைகள் போல் துன்புற்ற மக்களின் வாழ்வில் ஒரு புதுவிடியலைக் காட்டினார்.

அவருடைய காலத்திலேயே இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்திலும் இரண்டு ஆசிரமங்களை நிறுவினார்.

இறுதியாக 1962ஆம் ஆண்டு மிகவும் சுகவீனமுற்று 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் செபம் நிறைந்த உள்ளத்தோடு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்து உயிர் துறந்தார்.

தோமஸ் அடிகளார் இறந்து இந்த ஆண்டு 2014 ஜனவரி 26ஆம் நாள் 50 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. ஜனவரி 27ஆம் திகதி தற்போது அவரின் கல்லறை அமைந்துள்ள அருள் ஆசிரமத்தில் யாழ் ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் கல்லறை ஆசீரும் இடம்பெறும்.

தோமஸ் அடிகளார் 2005 ஆம் ஆண்டில் உரோம் திருப்பீடத்தால் இறையடியாராக உயர்த்தப்பட்டார். அவரது புனிதப்பட்டத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவரைப் புனிதராக தரவேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுவோம்.

அருட்பணி அ.ம.ஸ்ரீபன், செ.தா

அதிபர், அருள் ஆசிரமம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்

திருக்குறள்


தமிழில் எழுத
புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல