புதன், 29 ஜனவரி, 2014

உப்பு அதி­க­ரித்தால் நோய்கள் வரும்... உப்பு இல்­லா­விட்டால்...?

எமது பண்­பாட்டில் உப்பு முக்­கிய இடத்தைப் பெறு­கி­றது. இதனால் தாய்­மொ­ழியில் பழ­மொ­ழி­களும் வாய் மொழி­களும் உப்பைப் பற்றிப் பர­வ­லாகப் பேசு­கின்­றன.

“உப்­பிட்­ட­வரை உள்­ளவும் நினை..”, “உப்­பிலாப் பண்டம் குப்­பை­யிலே..”, “உப்புச் சப்­பில்­லாத விடயம்..” இவ்­வாறு பல.



“பச்சை மிளகாய் சம்பல் நல்ல டேஸ்­டாக இருக்கு” சப்புக் கொட்டிக் கொண்டு சாப்­பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்த பச்சை மிளகாய்த் தேங்காய் சம்­பலை வெள்­ளைமா இடி­யப்­பத்­துடன் சேர்த்து அள்ளி வாயில் போட்டு சுவைத்தார். இவ­ருடன் சேர்ந்து இருந்து சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்த மனை­வியும் மகளும் அவர் சொன்­னதைக் கேட்டு ஆச்­ச­ரி­யத்­துடன் ஒருவர் முகத்தை மற்­றவர் பார்த்­தார்கள்.

“இந்த மனு­ச­னுக்கு நாக்கு கெட்டுப் போச்சு” என்றாள் மனைவி.

“கடைக்­காரன் உப்பை அள்ளிப் போட்­டிட்டான் போல கிடக்கு என மகள் மனம் நோகாமல் கொமன்ட் பண்­ணினாள்.

எமது உணவில் உப்பு

மொழி, மத வேறு­பா­டு­களைக் கடந்து இலங்­கை­யர்­க­ளான நாம் அனை­வ­ருமே உப்புப் பிரி­யர்­க­ளாக இருக்­கிறோம். தின­சரி உட்­கொள்ளக் கூடிய உப்பின் அள­வா­னது 3.75 முதல் 5 கிராம் மட்­டுமே இருக்க வேண்டும் என்­பது பொது­வாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தாக இருந்­த­போதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்­கொள்­கிறோம்.

இலங்­கையில் ஆண்கள் பெண்­க­ளை­விட அதி­க­மாக உப்பை உட்­கொள்­கி­றார்கள் என இலங்கை சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட ஒரு அறிக்­கையில் தெரி­வித்­தி­ருப்­பதை இவ்­வி­டத்தில் ஞாப­கப்­ப­டுத்­தலாம். அதிலும் முக்­கி­ய­மாக 20 முதல் 60 வய­து­வ­ரை­யான ஆண்கள், அவர்கள் நகர்­பு­றத்தைச் சார்ந்­த­வர்­க­ளா­னாலும் சரி கிரா­மங்­களைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் சரி அதி­க­மாக உப்பை உள்­ளெ­டுக்­கி­றார்­களாம்.

சோற்­றுக்கு உப்புப் போட்டுச் சமைப்­பதும், கறி­க­ளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடு­வதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்கு மேல் கடையில் வாங்கும் துரித உண­வுகள் உப்பைத் தார­ள­மாகக் கொட்டித் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

கிழக்கு ஆசிய நாட்­ட­வர்­க­ளான நாம் மேலைத் தேசத்­த­வர்­களை விட அதிகம் உப்பை உணர்­கிறோம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. உப்பு என்­பது NaCl.

அதி­லுள்ள சோடியம் (Na) எனும் கனி­மம்தான் பாத­கங்­க­ளுக்கு முக்­கிய பங்­க­ளிக்­கி­றது

அதிக உப்பின் பாதக விளை­வுகள்

உப்பை அதிகம் உட்­கொண்டால் பிரஷர் வரும், ஏற்­க­னவே பிரஷர் உள்­ள­வர்­க­ளுக்கு மேலும் அதி­க­ரிக்கும் என்­பது எல்­லோ­ருக்­குமே தெரிந்த செய்­திதான். அதே நேரம் தின­சரி 12 கிராம் உப்பை உட்­கொண்­டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிர­ச­ரா­னது 3.6 முதல் 5.6 ஆல் குறையும் என ஆய்­வுகள் சொல்­கின்­றன.

ஆனால் அதிக உப்­பா­னது மார­டைப்பு மற்றும் பக்­க­வாதம் வரு­வ­தற்­கான சாத்­தி­யத்­தையும் அதி­க­ரிக்கும் என்­பது பலரும் அறி­யாத செய்­தி­யாக இருக்­கலாம்.

உப்பு அதி­க­ரிப்­பதால் பிரஷர் அதி­க­ரிக்கும். அத­னால்தான்; மார­டைப்பு பக்­க­வாதம் ஆகி­யன வரும் என நீங்கள் எண்­ணலாம். ஆனால் பிரஸர் அதி­க­ரிப்­பதால் மட்டும் இவ் ஆபத்துக்கள் வரு­வ­தில்லை. அதீத உப்பு நேர­டி­யா­கவே இரத்தக் குழாய்­க­ளிலும், இரு­த­யத்­திலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி மார­டைப்­பையும் பக்­க­வா­தத்­தையும் கொண்டு வரும் என்­கி­றார்கள் மருத்­துவ ஆய்­வா­ளர்கள்.

ஆனால் உட்­கொள்ளும் உப்பின் அளவை 12 கிரா­மி­லி­ருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்­க­வாதம் வரு­வ­தற்­கான சாத்­தியம் நான்கில் ஒரு பங்­காலும், இரு­தய நோய்கள் வரு­வ­தற்­கான சாத்­தியம் மூன்றில் ஒரு பங்­காலும் குறையும் என்ற நல்ல செய்­தி­யையும் ஆய்­வுகள் கூறு­கின்­றன.

அதீத உடல் எடைக்கு தவ­றான உணவு முறைதான் காரணம் என்ற போதும் கூடு­த­லாக உப்பு உட்­கொள்­வதும் ஒரு கார­ண­மாகும். எண்ணெய், கொழுப்பு, இனிப்பு மற்றும் மாப் பொருட்­களை அதிகம் உட்­கொள்­வதே தவ­றான உணவு முறை என நாம் பொது­வாகக் கரு­தி­னாலும் அதி­க­மாக உப்பை உட்­கொள்­வதும் ஒரு காரணமாகும்.

உப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதி­க­மாகும். தாகம் அதி­க­மானால் இனிப்­புள்ள பானங்­களை அடிக்­கடி அருந்­துவதும் எடை அதி­க­ரிப்­பிற்கு ஒரு கார­ண­மா­கி­றது. முக்­கி­ய­மாக குழந்­தைகள் நொறுக்குத் தீனி­களை அடிக்­கடி சாப்­பி­டு­கி­றார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்­ப­டும் ­தாகத்தைத் தணிக்க மென் பானங்­க­ளையும் இனிப்­புள்ள ஜுஸ் வகை­க­ளையும் குடிக்­கி­றார்கள். இதனால் எடை அதி­க­ரித்து குழந்­தைகள் குண்­டா­கி­றார்கள்.

“இவன் சாப்­பி­டு­றதே இல்லை ஆனால் குண்­டா­கிறான்” என அம்­மாமார் சொல்­வ­துண்டு. அதற்­கான காரணம் இப்­பொ­ழுது புரி­கி­றது அல்­லவா?

இரைப்பை புற்­றுநோய்,

ஓஸ்­டி­யோ­பொ­ரோசிஸ்,

சிறு­நீ­ரகக் கற்கள்,

ஆஸ்­துமா பாதிப்பு தீவி­ர­ம­டைதல்

போன்ற பல பிரச்சினை­க­ளுக்கும் உப்பு கார­ண­மாக இருக்­கி­றது என்­பதை மறக்­கா­தீர்கள்.

மறைந்­தி­ருக்கும் உப்பு உண­வுகள்

“இவ­ருக்கு பிரஷர் என்­ற­ப­டியால் நான் உப்பு போட்டு சமைப்­ப­தில்லை” என்றார் ஒரு இல்­லத்­த­ரசி. அவ்­வாறு சமைப்­பது நல்­லதா கூடாதா என்­ப­தை­யிட்டு பிறகு பார்க்­கலாம். ஆனால் அவள் உப்பு போடா­விட்­டாலும் கூட வேறு பல வழி­களில் அதீத உப்பு வேறு உண­வுகள் வழி­யாக அவ­ரையும் எங்­க­ளையும் சென்­ற­டையும் என்­பதை நாம் நினைவில் வைத்­தி­ருக்க வேண்டும்.

இன்று உணவு என்­பது முற்று முழு­தாக வீட்டு உணவு அல்ல. உண­வ­கங்­களில் கிடைக்கும் உண­வு­களை அடிக்­கடி உட்­கொள்ள நேர்­கி­றது. அவற்றில் உப்பு அதி­க­மா­கவே இருக்­கி­றது.

அதற்கு மேலாக பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­க­ளையும் உண்ண நேர்­கி­றது. அவற்றில் பெரும்­பாலும் உப்பின் செறிவு அதி­க­மா­கவே இருக்­கி­றது. பதப்­ப­டுத்­தப்­பட்ட இறைச்சி வகைகள், ஹம்­பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்­சாறு போன்­றவை அதீத உப்­பிற்கு நல்ல உதா­ர­ணங்­க­ளாகும்.

ஆனால் இவற்றில் மட்­டு­மின்றி நாம் சந்­தே­கிக்­காத பல உண­வு­க­ளிலும் உப்பு அதி­க­மாக இருக்­கி­றது. பாண், கேக், பிஸ்கற் போன்­ற­வற்றைச் சொல்­லலாம்.

பிள்­ளை­களும் பெரி­ய­வர்­களும் விரும்பிச் சாப்­பிடும் பொட்­டேட்டோ சிப்ஸ் போன்ற பொரியல் வகை­களில் நிறைய உப்பு இருக்­கி­றது. பக்­கற்றில் கிடைக்கும் உருளைக்

கிழங்கு பொரியல் மாத்­தி­ர­மின்றி, மர­

வள்ளி, பாகற்காய் பொரி­யல்கள் யாவுமே உப்புப்பண்­டங்­கள்தான்.

ஒவ்­வொரு ரோல்ஸ்­சிலும் 230 மி.கி. வரையும், பீட்ஷா ஒரு துண்டில் 760 மி.கி. சோடியும் இருக்­கி­றதாம். பற்றிஸ், சமோசா, மிக்ஸர் போன்­றவை சற்றும் குறைந்­தவை அல்ல. போத்­தலில் அடைக்­கப்­பட்ட மினரல் வோட்­டர்­களின் சோடியச் செறிவு அதிகம் இருக்­கலாம்.

சில வகை மருந்­து­க­ளிலும் Na அதி­க­மாக உண்டு. அஸ்­பிரின், பர­சிற்­றமோல் போன்ற கரையக் கூடிய மருந்­து­க­ளாகக் கிடைக்­கின்­றன. சோடியம் பை கார்­பனேட் சேர்ப்­ப­தா­லேயே அவை கரையக் கூடிய தன்­மையைப் பெறு­கின்­றன. இவற்றில் சிலதில் உள்ள சோடி­ய­மா­னது ¼ தேக்­க­ரண்டி உப்பின் அள­விற்கு இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரு­வரின் தின­சரி உப்பு உட்­கொள்ளவு ஒரு தேக்­க­ரண்­டி­ய­ளவே இருக்க வேண்டும் என்­பதை நினைவில் கொள்­ளுங்கள்.

வலிக்கு பொது­வாக உட்­கொள்­ளப்­படும் டைகு­ளோ­பெனிக் மருந்தில் சோடியம் (Diclofenac Na)) உள்­ளது.

இத­னால்தான் வலி மாத்­தி­ரை­களை அளவு கணக்­கின்றி உப­யோ­கிக்கும் நோயா­ளி­க­ளுக்கு பிரஷர் நோய் வரு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மருத்­து­வர்கள் பொது­வாக பழ­வ­கை­க­ளையும் காய்­க­றி­க­ளையும் உணவில் அதிகம் சேர்க்கச் சொல்­வார்கள்.

இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நார்ப்­பொ­ரு­ளாகும். அவை உணவு உறிஞ்­சப்­ப­டு­வதை தாம­தப்­ப­டுத்­து­வதால் நீரி­ழிவு அதி­க­ரிக்­கா­தி­ருக்க உத­வு­வ­துடன் எடை அதி­க­ரிப்­பையும் குறைக்கும் என்­ப­தா­லாகும்.

ஆனால் பெரும்­பா­லான பழங்கள் மற்றும்

காய்­க­றி­க­ளி­லுள்ள கனி­ம­மான பொட்­டா­சி­ய­மா­னது, உப்பில் உள்ள சோடி­யத்தின் பாதிப்பை குறைக்கும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தலாம். எனவே உணவில் பழ­வ­கை­களை அதிகம் சேருங்கள்.

குரு­தியில் உப்பு குறைதல்

குரு­தியில் உப்பு குறை­தலை மருத்­து­வத்தில் (Hyponatremia) என்­பார்கள். ஆனால் இது உணவில் உப்பைக் குறைப்­பதால் ஏற்­ப­டு­வ­தல்ல. இரு­தய வழுவல், சிறு­நீ­ரக வழுவல், ஈரல் சிதைவு, தைரோயிட் குறை­பாடு போன்ற நோய்­களால் ஏற்­படும். கடு­மை­யான வயிற்­றோட்டம், வாந்தி போன்­ற­வற்றால் நீரிழப்பு நிலை ஏற்­ப­டு­வ­தாலும் இது ஏற்­ப­டலாம். இவை மருத்துவர்களால் உடனடியாக அணுக வேண்டிய பிரச்சினைகள் ஆகும்.

இருந்தபோதும் உணவில் உப்பின் தினசரி அளவை 1.5 கிராம் அளவிற்கு கீழ் குறைப்பது நீரிழிவு, இருதய வழுவல், சிறுநீரக வழுவல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்லதல்ல என அண்மைய மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

இறுதியாக

உணவில் உப்பைக் குறையுங்கள். ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக் கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள். உப்பைக் குறைப்பது நல்லது. ஆனால் முற்று முழுதாக உப்பில்லாத உணவு அவசியமல்ல.

பழவகைகளை அதிகம் சேருங்கள்.

பொதுவாக பலதரப்பட்ட போஷாக்குகளும் அடங்கிய சமச்சீரான உணவுகள் ((Balanced food) ஆக உட்கொள்வது நல்வாழ்விற்கு உகந்தது.

 டொக்டர்.எம்.கே.முரு­கா­னந்தன்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல