பிரித்தானியாவில் ஹரோ நகரத்தை சேர்ந்த யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் சொந்த குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து உள்ளார்.
அனோபன் - வயது 5, நதிபன் - வயது 8 மாதம் ஆகிய இரு ஆண் பிள்ளைகளையும் கொன்று விட்டு, மனைவி ஜயவாணி தற்கொலை செய்து இருக்கின்றமையை கணவன் சக்திவேல் விக்னேஸ்வரன் - வயது 36 வீட்டுக்கு வந்தபோது கண்டு கொண்டார் என்று பொலிஸ் விசாரணையில் வெளிப்பட்டு உள்ளது.
கறுப்பு பைகளுக்குள் பிள்ளைகளின் சடலங்கள் போடப்பட்டு இருந்தன. மனைவியும் இறந்து காணப்பட்டார். வேலையில் இருந்து திரும்பி வந்த கணவன் இன்னமும் பேரதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. இப்போதும் குழந்தைகளை எண்ணி, உருகி, ஓலமிட்டு அழுகின்றார். இவ்வீட்டுக்கு திரும்பிச் செல்கின்ற தைரியம் இவருக்கு இல்லை.
இத்தம்பதி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றது. சந்தோசமான குடும்பம். ஆயினும் இரண்டாவது குழந்தை கிடைத்த பிற்பாடு இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் நேர்ந்து இருக்கின்றன என்று அயவர்கள் கூறுகின்றார்கள்.
இம்மரணங்களில் வேறு எவர் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் இல்லை. குழந்தையின் பிறப்புக்கு பின்னரான மன அழுத்தத்தால் ஜயவாணி பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கழுத்து இறுக்கப்பட்ட்டமையே ஜெயவாணியின் மரணத்துக்கான காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தைகளின் சடலங்கள் மீதான பரிசோதனை செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக