செவ்வாய், 8 ஏப்ரல், 2014

புலம்­பெயர் அமைப்­புகள் மீதான தடை எதனை வெளிப்­ப­டுத்­து­கி­றது?

ஐ.நா. பாது­காப்புச் சபையின் 1373 ஆவது தீர்­மா­னத்­துக்கு அமைய, இலங்கை அர­சாங்­கமும், வெளி­நா­டு­க ளில் செயற்­படும் பயங்­க­ர­வாத அமைப்­பு கள் என்ற பட்­டியல் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

இந்தப் பட்­டி­யலில், விடு­தலைப் புலிகள் இயக்கம், புலம்­பெயர் தமிழர் அமைப்­புகள் என மொத்தம் 16 அமைப்­பு­களை இலங்கை அர­சாங்கம் தடை செய்­யப்­பட்­ட­வை­யாக அறி­வித்­துள்­ளது.



போரின் போது, கூட அர­சாங்கம் விடு­தலைப் புலி­களை தேசிய அளவில் தடை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­ததே தவிர, சர்­வ­தேச அள­வுக்கு அதனை விரி­வாக்க எத்­த­னித்­தி­ருக்­க­வில்லை.

அப்­போ­து­கூட, அர­சாங்கம் விடு­த லைப் புலிகள் இயக்கம் மீது தான் கவ னம் செலுத்­தி­யி­ருந்­தது.

புலம்­பெயர் அமைப்­பு­களை அவ்­வ­ள­வாக கண்­டு­கொள்­ள­வில்லை.

ஆனால், இப்­போது விடு­தலைப் புலி கள் சார்பு அமைப்­பு­க­ளான புலம்­பெயர் தமிழர் அமைப்­புகள் அனைத்­தையும் தடை செய்­யப்­பட்ட அமைப்­பு­களின் பட்­டி­ய­லுக்குள் கொண்டு வந்­துள்­ளது அர­சாங்கம்.

அதுவும், ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட ஒரு­சில நாட்­க­ளுக்குள் இது நடந்­தி­ருப்­பது முக்­கி­ய­மான விட­ய­மாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஜெனீவா தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டது மேற்­கு­லக நாடு­களின் முடி­வாக இருந்­தாலும், அதற்கு ஒரு வகையில் அழுத்­தங்­களைக் கொடுப்­ப­தற்கு புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் கார­ண­மாக இருந்­தன என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஜெனீ­வாவில் கூட்­டத்­தொ­டரில், இப் ­போது இலங்கை அர­சாங்­கத்­தினால் தடை­செய்­யப்­பட்­டுள்ள உலகத் தமிழர் பேரவை, பிரித்­தா­னியத் தமிழர் பேரவை உள்­ளிட்ட பல அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் வெளிப்­ப­டை­யா­கவே பங்­கேற்­றி­ருந்­தனர். சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­பதை அவர்கள் இதன்­போது கடு­மை­யா­கவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த னர். இந்தச் சூழலில், ஜெனிவா கூட்­டத்­தொடர் முடி­வுக்கு வந்­த­வுடன், அர­சாங்கம் தடையை விதித்­துள்­ளது, ஜெனீவா தீர்­மா­னத்தின் எதி­ரொ­லி­யா­கவே பர­வ­லாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், ஜெனீவா தீர்­மா­னத்தின் எதி­ரொ­லி­யா­கவே, புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் கருத்­து­களை அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்­ளது.

பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடகப் பேச்­சா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிரி­கே­டியர் ருவன் வணி­க­சூ­ரிய இது­கு­றித்துக் கூறு­கையில், ஜெனீவா தீர்­மா­னத்­துக்கும் இந்தத் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி­யி­ருக்­கிறார்.

அது­மட்­டு­மன்றி, இது நீண்­ட­கா­ல­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்டு வந்த முயற்சி என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, இலங்­கையில் மீண்டும் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கு உயிர் ­கொ­டுக்கும் முயற்­சி­களில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் ஈடு­ப­டு­வ­தா­கவும், நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு ஆபத்தை விளை­விக்க முனை­வ­தா­கவும் வெளி­வ­கார அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக வடக்­கிலும் கிழக்­கிலும், நடந்து வரும் புலி­வேட்­டையுடன் தொடர்­பு­படுத்தி - அவர்­க­ளுக்குப் பின்­பு­ல­மாக இருந்து செயற்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டியே அர­சாங்கம் இந்த தடையை விதித்­தி­ருந்­தது.

ஆனால், வெளி­நா­டுகள் பல­வற்­றிலும் வலு­வாகச் செயற்­படும் புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் மீது அர­சாங்கம் கொண்டு வந்­துள்ள இந்த தடைக்­கான உண்­மை­யான காரணம், ஜெனீவா தீர்­மா­னத்­துக்குப் பதி­லடி கொடுப்­ப­தா­கவே கருத வைக்­கி­றது.

இந்தத் தடைக்கும் ஜெனீ­வா­வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அர­சாங்­கத்தின் மறுப்பு எந்த அடிப்­படை ஆதா­ரங்­க­ளு­மற்­ற­தா­கவே உள்­ளது.

அதே­வேளை, புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனை­வ­தாகக் கூறி தடை­வி­தித்த அர­சாங்கம், இன்­னொரு வகையில் அதற்­கான கார­ணத்தை நிரூ­பிக்கத் தவ­றி­யுள்­ளது.

ஜெனீவா கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கிய பின்னர் தான், வடக்கில் திடீ­ரெனப் புலி­வேட்டை தொடங்­கப்­பட்­டது.

இந்தப் புலி­வேட்டை நாளுக்கு நாள் விரி­வாக்­கப்­பட்டும் – தேடப்­படும் புதி­ய­வர்கள் பற்­றிய அறி­விப்­புகள் வெளி­யி­டப்­பட்டும் வரு­கி­றது.

ஆனால், இது­வரை சன்­மானம் அறி­விக்­கப்­பட்டு தேடப்­பட்டு வரும் கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரில் ஒரு­வ­ரை­யேனும் அர­சாங்­கத்­தினால் பிடிக்க முடி­ய­வில்லை. இது ஒரு பக்­கத்தில் அர­சாங்­கத்தின் பாது­காப்பு பல­வீனம் என்று எடுத்துக் கொள்­ளப்­ப­டலாம்.

இன்­னொரு பக்­கத்தில், வடக்கின் பாது­காப்புக் கெடு­பி­டி­களை நீடித்துச் செல்­வ­தற்­கான முயற்­சி­யா­கவும் கரு­தலாம்.

ஜெனீவா கூட்­டத்­தொ­டரின் பின்னர் தொடங்­கிய புலி­வேட்டை மற்றும் புலி­க­ளுக்கு மீண்டு உயிர் கொடுக்கும் முயற்சி என்­ப­ன­வற்­றுடன் தொடர்­பு­ப­டுத்தி, புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­க­ளுக்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால், இது நீண்­ட­கால முயற்சி என்று பிரி­கே­டியர் ருவன் வணி­க­சூ­ரிய தெரி­வித்­துள்ளார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. அவ்­வா­றாயின், குறு­கிய காலத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள, புலி­களின் மீள் எழுச்சி பற்­றிய கதை­க­ளுக்கும் இந்த தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

அதை­விட, வடக்கில் தொடங்­கப்­பட்ட புலி­வேட்­டை­யா­னது, இந்த தடையை விதிப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

அதே­வேளை, இந்த தடையின் மூலம், புலம்­பெயர் தமி­ழர்­களின் அர­சியல் பலத்தை சிதைக்­கவும், அவர்­க­ளுக்கும், அந்­தந்த நாடு­களின் அர­சாங்­கங்­க­ளுக்கும் இடையில் இருக்­கின்ற சுமு­க­மான உற­வு­களை குலைக்­கவும் அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாகத் தெரி­கி­றது.

அர­சாங்­கத்­தினால் தடை செய்­யப்­பட்­

டுள்ள 16 அமைப்­பு­களில், பல மேற்கு நாடு­களின் அர­சாங்­கங்கள், அர­சியல் தலை­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவைப் பேணும் நிலையில் இருப்­பவை.

உதா­ர­ணத்­துக்கு. உலகத் தமிழர் பேரவை, பிரித்­தா­னியத் தமிழர் பேரவை, அவுஸ்தி­ரே­லிய தமிழ் காங்­கிரஸ், கனே­டி யத் தமிழ் காங்­கிரஸ் உள்­ளிட்ட அமைப்­புகள் இவ்­வா­றா­னவை. இவை, விடு­த லைப் புலி­களின் எந்­த­வொரு அமைப்­பி­னதும் நேரடிக் கட்­டுப்­பாட்டில் இருந்­த­தற்­கான ஆதா­ரங்கள் இல்லை.ஆனால், இந்த அமைப்­புகள் போர்க்­குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­று­வ­தற்கும், அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கும் கொடுக்கும் அழுத்­தங்­களை அர­சாங்­கத்­தினால் பொறுத்­துக் ­கொள்ள முடி­ய­வில்லை. இந்த தடையின் மூலம், புலம்­பெயர் அமைப்­பு­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வது மட்டும் அர­சாங்­கத்தின் நோக்­க­மல்ல.

ஜெனீ­வாவில் தமக்­கெ­தி­ரான தீர்­மா­னத்தை கொண்டு வந்து நிறை­வேற்­றிய மேற்­கு­லக நாடு­க­ளையும் சிக்­க­லுக்குள் மாட்டி விடு­வது தான் அர­சாங்­கத்தின் இலக்­காக உள்­ளது. ஏனென்றால், இந்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள, 1373ஆவது இலக்க ஐ.நா. பாது­காப்புச் சபைத் தீர்­மா­னத்­துக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்­டுப்­ப­டு­பவை.

பயங்­க­ர­வா­தத்தை ஒழித்தல் மற்றும் கட்­டுப்­ப­டுத்தல் ஆகிய நோக்­கங்­க­ளுக்­காக அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்ட தீர்­மானம் இது.

அமெ­ரிக்கா மீது அல்­கைய்தா நடத்­திய தாக்­கு­தலை அடுத்து, 2001 செப்­டெம்பர் 28 ஆம் திகதி கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­படை நோக்கம், பின்­லே­ட­னையும், அல்­கைய்­தா­வையும் நசுக்­ கு­வ­தற்கு உல­க­ளா­விய ஆத­ரவை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது தான்.

அமெ­ரிக்கா அந்த நோக்­கத்தைப் பெரும் ­பாலும் அடைந்து விட்­டது என் றே கூறலாம். இப்­போது இலங்­கையும் அது வழியில் நடக்கப் பார்க்­கி­றது.

புலி­க­ளுடன் போரை நடத்­திய போது, கூட புலி­க­ளுக்கு எதி­ராக இத்­த­கைய தடையை விதிக்க முனை­யாத இலங்கை அர­சாங்கம், போருக்குப் பின்னர், 5 ஆண்­டுகள் கழித்து இந்த தடையை விதித்­தி­ருக்­கி­றது,

இது புலம்­பெயர் தமி­ழர்­களின் அர­சியல் போராட்­டங்­களை நசுக்­கு­வ­தற்­கான – முயற்சி என்­பதை விட வேறெ­து­வா­கவும் இருக்க முடி­யாது.

இந்த தடைக்குப் பின்­னரும், குறிப்­பிட்ட புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் மேற்கு நாடுகள் உற­வு­களை வைத்துக் கொண்­டி­ருந்­தாலோ, அவற்றைச் செயற்­பட அனு­ம­தித்­தாலோ, பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை­போ­வ­தாக மேற்கு நாடு­களை நோக்கி இலங்கை சுட்­டு­வி­ரலை நீட்­டப்­போ­கி­றது.

அத்­துடன், புலம்­பெயர் தமிழர் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச கூட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்கும் இலங்கை சட்­ட­ரீ­தி­யாக எதிர்ப்பைத் தெரி­விக்கும்.

அவர்கள் எதைச் சொன்­னாலும் அது பயங்­க­ர­வா­தி­களின் கருத்­தாக தட்­டிக்­க­ழிக்­கும்­படி எடுத்­துக்­கூறும்.

இது தான் இனி நடக்­கப்­போ­கி­றது

இதன்­மூலம் புலம்­பெயர் தமி­ழர்கள் சர்­வ­தேச அளவில் கொடுத்து வரும் தலை­வ­லியைக் குறைக்­கலாம் என்று இலங்கை அர­சாங்கம் கரு­து­கி­றது.

இந்த அமைப்­பு­களில் இயங்­கு­வோ­ருக்கும் இலங்­கையில் வசிக்கும் அவர்­களின் உற­வு­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் கூட இந்த தடை விரி­சலை ஏற்­ப­டுத்தும்.

அவ்­வா­றான உறவு நீடித்தால், தடை­செய்­யப்­பட்ட அமைப்­புடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாக குற்­றம்­சாட்டி இங்­குள்ள உற­வி­னர்கள் தண்­டிக்­கப்­படக் கூடும்.

எனவே, புலம்­பெயர் தமி­ழர்கள் தமது இங்­குள்ள உற­வு­க­ளுடன் உறவைத் துண்­டிக்க வேண்டும், அல்­லது இலங்கை அர­சுக்கு எதி­ரான செயற்­பா­டு­களில் இருந்து ஒதுங்க வேண்டும்.

புலம்­பெயர் தமி­ழர்கள் தமது உற­வு­களின் தொடர்­பு­களை துண்­டிப்­பதால், ஏற்­படும் விரிசல், புலம்­பெயர் தமி­ழர்­களின் இலங்கை அரச எதிர்ப்பு போராட்­டங்­களை உள­வியல் ரீதி­யாக வலு­வி­ழக்கச் செய்யும்.

அது இனி­வரும் காலத்தில் இலங்­கைக்­கான சர்­வ­தேச அழுத்­தங்­களை குறைப்­ப­தற்கு உத­வி­யாக அமையும்.

இவ்­வாறு அடுக்­க­டுக்­கான பல இலக்­கு­களை அடையும் நோக்கில் தான் அர­சாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.

அதேவேளை, இந்த தடையின் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், கே.பியை வைத்தும் அவர் சார்ந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்களை வைத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முடக்க முயற்சித்தது அரசாங்கம்.

புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தேடிவருவதாகவும் அவர்களுடன் அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்த முனைவதாகவும் முன்னர் காட்டிக் கொண்ட அரசாங்கம், இப்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிட்டுள்ளது.

இது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வசப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியை எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த தடைகளின் மூலம் வெளிப்படையான போர் ஒன்றை புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ளது.

இது, இருதரப்புக்கும் இடையில் சுமுகமான இணக்கத்தை ஏற்படுத்தும் கதவுகளை மட்டும் அடைக்கப் போவதில்லை.

இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கவும் காரணமாகலாம்.

சுபத்ரா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல