ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தமிழ் சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்ற கே.பாலச்­சந்தர்

தமிழ் சினி­மாவின் சிக­ர­மாகத் திகழ்ந்த கே.பாலச்­சந்­தரின் மறைவால் திரை­யு­லகம் சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது. தமிழ் சினி­மாவின் ஜாம்­ப­வா­னாக இருந்து திரை­யு­ல­கிற்கு பல்­வேறு கலை­ஞர்­களைத் தந்த கே.பாலச்­சந்தர், தென்­னிந்­திய சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்றார். சுப்­பஸ்டார் ரஜி­னிகாந்த் உலக நாயகன் கமல் ஹாசன் உள்­ளிட்ட இவரின் கண்டு பிடிப்­புகள் தான் இன்று திரை­யு­லகை ஆட்சி செய்து வரு­கின்­றார்கள். சினிமா கலை­ஞர்கள் அனை­வ­ருக்கும் குரு­நா­தராய் இருந்த கே.பி. இன் இழப்பை எவ­ராலும் ஈடு செய்ய முடி­யாது.



அண்மைக் கால­மாக உடல் நலம் பாதிக்­கப்­பட்டு சென்னை மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வந்த இயக்­குநர் கே.பால­ச்சந்தர் சிகிச்சை பல­னின்றி தனது 84 ஆவது வயதில் கடந்தசெவ்வாய்க் கிழமை கால­மானார். இயக்­குநர் கே.பாலச்­சந்­த­ருக்கு சிறுநீர் பாதையில் ஏற்­பட்ட நோய்த்­தொற்று கார­ண­மாக சென்னை ஆழ்­வார்­பேட்­டையில் உள்ள காவேரி மருத்­து­வ­ம­னையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்­கப்­பட்­டி­ருந்தார். அங்கு அவ­ருக்கு மூத்த மருத்­துவ நிபு­ணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்­தனர். தமிழ்த் திரை­யு­லகின் முன்­னணி நடிகர், நடி­கை­க­ளான ரஜினி, குஷ்பு உள்­ளிட்ட பலரும் அவரை சந்­தித்து நலம் விசா­ரித்­தி­ருந்­தனர்.

மறைந்த இயக்­குநர் கே.பாலச்­சந்­த­ருக்கு 3 பிள்­ளைகள். அவ­ரது மகன் கைலாசம் சில மாதங்­க­ளுக்கு முன்பு தான் உடல்­நலம் பாதிக்­கப்­பட்டு கால­மானார். மேலும், பிர­சன்னா என்ற மகனும், புஷ்பா கந்­த­சாமி என்ற மகளும் அவரைக் கவ­னித்து வந்­தனர்.

தமிழ் சினி­மாவில் ‘இயக்­குநர் சிகரம்’ எனப் போற்­றப்­படும் கே.பாலச்­சந்தர், 'நீர்க்­கு­மிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்­களை இயக்­கி­யுள்ளார். அதி­க­மான டி.வி தொடர்­க­ளையும் இயக்கி இருக்­கிறார். 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்­தம வில்லன்' ஆகிய மூன்று படங்­களில் நடித்­தி­ருக்­கிறார். இதில் 'உத்­தம வில்லன்' திரைப்­படம் இன்னும் வெளி­யா­க­வில்லை. 'கலை­மா­மணி', 'பத்­மஸ்ரீ', 'தாதா சாகேப் பால்கே விருது' உள்­ளிட்ட பல உய­ரிய விரு­து­க­ளையும் அவர் வென்­றவர்.

கே.பாலச்­சந்தர் தன் வாழ்க்­கையில் பல படிக்­கட்­டு­களைக் கடந்து முன்­னேறி வந்­தவர். நாட­கங்கள் மூலம் பிர­ப­ல­மான இவர் திரைப்­ப­டத்­து­றையில் தனக்­கே­யு­ரிய முத்­தி­ரையைப் பதித்­தவர். அண்­ணா­மலைப் பல்­கலைக் கழ­கத்தில் அறி­வியல் பட்­டப்­ப­டிப்பு படித்த பாலச்­சந்தர், படிக்கும் போதே 1960 களில் தலைமை கணக்­காளர் அலு­வ­ல­கத்தில் உயர்­ப­த­வியில் இருந்தார்.

'மேஜர் சந்­தி­ரகாந்த்', 'சர்வர் சுந்­தரம்', 'நீர்க்­கு­மிழி', 'மெழு­கு­வர்த்தி' மற்றும் 'நவக்­கி­ரகம்' உள்­ளிட்ட பிர­பல நாட­கங்கள் மூலம் அவர் முன்­ன­ணிக்கு வந்தார். அவரே தயா­ரித்து, இயக்­கிய நாட­கங்கள் மக்கள் மத்­தியில் பெரும் வர­வேற்பைப் பெற்­ற­தோடு, விமர்­ச­கர்­களின் பாராட்­டு­த­லையும் ஒருங்கே பெற்­றது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளி­யான 'தெய்­வத்தாய்' படத்­துக்கு வசனம் எழு­தி­யதன் மூலம் ‘கே.பி’ திரை­யு­லகில் நுளைந்தார். அந்த சம­யத்தில், தான் பணி­யாற்­றிய அலு­வ­ல­கத்தில் கண்­கா­ணிப்­பா­ள­ரா­கவும் பதவி உயர்வு வந்­தது. இதற்­கி­டையே இவரின் 'சர்வர் சுந்­தரம்' நாட­கத்தைப் பட­மாக்கும் உரி­மையைப் பெற்ற ஏ.வி.எம் செட்­டியார், அதை கிருஷ்ணன், - பஞ்சு இரட்டை இயக்­கு­நர்­க­ளைக்­கொண்டு நாகேஷை நாய­க­னாக நடிக்­க­வைத்து தயா­ரித்தார். படம் மிகப் பெரிய வெற்­றி­பெற்­றது. இவரின் இன்­னொரு நாட­க­மான ‘மேஜர் சந்­தி­ரகாந்த்’ இந்­தியில் பட­மாக எடுக்­கப்­பட்டு, தேசிய விருது பெற்­றது.

1965 இல் 'நீர்க்­கு­மிழி' மூலம் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல்', 'மேஜர் சந்­தி­ரகாந்த்', 'எதிர்­நீச்சல்' என தன் நாட­கங்­க­ளையே பட­மாக எடுத்தார்.

அன்று முதல் வெள்­ளித்­தி­ரையில் அவர் ஒரு நட்­சத்­திர இயக்­கு­ந­ராக ஜொலிக்கத் தொடங்­கினார். அதன் பிறகு பல மொழி­க­ளிலும் திரைக்­கதை, வசனம், இயக்கம் என்று அவ­ரது பணி பர­வ­லாக்கம் பெற்­றது. தமிழ், தெலுங்கு, கன்­னடம், மற்றும் இந்தி மொழி­களில் இவ­ரது படங்­க­ளுக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­தன. தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்­கிய ‘பாமா விஜயம்’ இவரை புதிய பரி­ணா­மத்­திற்கு இட்டுச் சென்­றது. இவரின் ‘இரு­கோ­டுகள்’ சிறந்த தமிழ் படத்­துக்­கான தேசிய விருதை பெற்­றது. ‘அரங்­கேற்றம்', 'சொல்­லத்தான் நினைக்­கிறேன்', 'அவள் ஒரு தொடர்­கதை', 'நான் அவன் இல்லை.' என பாலச்­சந்தர் இயக்­கிய படங்கள் விமர்­சனம், வியா­பாரம், சர்ச்சை என ஏதோ ஒரு­வ­கையில் மக்­க­ளிடம் சென்­ற­டைந்­து­கொண்டே இருந்­தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்­கிய இந்திப் படம், 1981இல் வெளி­வந்து காதல் சினி­மாக்­களின் முக­வ­ரி­யாக அமைந்­தது. தெலுங்கில் 'மரோ­ச­ரித்ரா' என்ற படம்தான் இந்­தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறி­யது. தெலுங்கில் சரிதா நாய­கி­யா­கவும் கமல்­ஹாசன் நாய­க­னா­கவும் நடித்­தி­ருந்­தனர். இந்­தியில் சரி­தா­வுக்கு பதி­லாக ரதி அக்­னி­ஹோத்­ரியை கமலின் நாய­கி­யாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்­டி­லுமே இந்தப் படம் பல மைல்­கற்­களைக் கடந்து சென்­றது.

இவரின் படங்கள் வெவ்­வேறு வடி­வங்­களில் இருந்­த­தாலும், அவை பெரும்­பாலும் சமூக அர­சியல் விட­யங்­க­ளையே மையப்­ப­டுத்­தி­ய­வை­யாக அமைந்­தன. இந்­தியப் பெண்­களின் பரி­தாப நிலை­க­ளையே இவரின் படங்கள் அதி­க­மாக பேசின. மாதவன், சிம்ரன், சினேகா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளி­யான ‘பார்த்­தாலே பர­வசம்’ இவரின் 100 ஆவது பட­மாக அமைந்­தி­ருந்­தது. 2006 ஆம் ஆண்டு வெளி­யான ‘பொய்’ திரைப்­படம் கே.பி இயக்­கிய 101 ஆவது பட­மாக அமைந்­தி­ருந்­தது. இதன் பின்னர் திரைப்­ப­டங்கள் இயக்­கு­வதை நிறுத்­திக்­கொண்­டாலும் சினிமா ரசி­க­ராக இளைய தலை­முறைக் கலை­ஞர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி வந்தார்.

பெண்கள் சமு­தா­யத்தின் பிரச்­சி­னை­களை உரத்த குரலில் பேசி­யது இவ­ரது சில படங்கள், அதோடு மட்­டு­மல்­லாமல் அவர்­க­ளது உயர்­வுக்கும் வித்­திட்­டது என்று கூறலாம். மது அருந்தும் பழக்­கத்தின் தீமை­களை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்­டிய பாலச்­சந்தர், சமு­தா­யத்­திற்­காக தன்­ன­ல­மற்று உழைக்க வேண்­டிய கட­மை­யையும் அப்­ப­டத்தின் மூலம் உணர்த்­தினார்.

சினிமா என்­பது வெறும் பொழு­து­போக்கு மட்­டு­மல்ல என்­பதை தீவி­ர­மாக நம்­பிய அவர் தன் படத்தில் சமு­தா­யத்­திற்­கான நற்­செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்­வாறே படங்­க­ளையும் எடுத்தார். இவ­ரது படங்­களில் பணி­யாற்­றிய தொழில்­நுட்பக் கலை­ஞர்கள், இசைக்­க­லை­ஞர்கள், பாட­கர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்­வேறு விரு­து­களை வென்­றுள்­ளனர்.

திற­மை­களைக் கண்­டு­பி­டிப்­பதில் அவ­ருக்கு நிகர் அவரே. இன்று நட்­சத்­தி­ரங்­க­ளாகத் திகழும் பலர் இவ­ரது கைவண்­ணத்தில் உரு­வா­ன­வர்­களே. எத்­த­னையோ இளம் இயக்­கு­நர்கள், திற­மை­யான புதிய இயக்­கு­நர்கள் உரு­வாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்­டு­க­ளாக இவர் படங்­களை அவ­ருக்கே உரிய தரத்­து­டனும் உற்­சா­கத்­து­டனும் கொடுத்து வந்தார். இவ­ரது உத்­திகள் பல இளம் இயக்­கு­நர்­க­ளுக்கு பெரும் தூண்­டு­கோ­லாக அமைந்­துள்­ளது. இளம் நடி­கர்­க­ளுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்­ப­டியோ அப்­ப­டித்தான் இளம் இயக்­கு­நர்­க­ளுக்கு இயக்­குநர் திலகம் கே.பாலச்­சந்தர்.

தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறு­திப்­பாடு மற்றும் தான் நினைத்­ததை கலை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து தரு­விக்­கக்­கூ­டிய அவ­ரது திற­மையே கலை­மட்­டத்­திலும், வணிக அள­விலும் அவ­ரது பெரும் வெற்­றிக்கு காரணம்.

சின்னத் திரை­யிலும் கே.பாலச்­சந்தர் தனது முத்­தி­ரையைப் பதித்து வந்­துள்ளார். வெள்­ளித்­தி­ரையில் காண்­பித்த அதே தீவிரம், காட்­சி­ய­மைப்பில் துல்­லியம் என்று இங்கும் அவர் சம­ர­சத்­திற்கு இடம் கொடுக்­க­வில்லை. 1990 களில் தூர்­தர்­ஷனில் ஒளி­ப­ரப்­பான தொடர் 'ரயில் ஸ்நேகம்' சீரி­யல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்­தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்­தது. 'ரகு­வம்சம்' என்ற நெடுந்­தொடர் மூலம் மெகா சீரி­யல்­களும் ஏன் தர­மாக இருக்கக் கூடாது என்ற சிந்­த­னையை இளம் இயக்­கு­நர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தினார் பாலச்­சந்தர். இவ­ரது படங்கள், அதன் கதைக்­கரு, கதா­பாத்­திர உரு­வாக்கம், கதை­யாடல் முறை, உத்தி ஆகி­யவை இன்று மாண­வர்­களின் ஆய்வு செய்­வ­தற்கு ஒரு கரு­வி­யாக உள்­ளது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஒரு ஹோலி பண்­டிகை தினத்தில் சிவாஜி ராவ் என்ற நடி­க­னுக்கு ரஜி­னிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்­தவர் கே.பாலச்­சந்தர். திரைப்­பட கல்­லூ­ரியில் பேசிய கே.பாலச்­சந்­த­ரிடம் அங்கு மாண­வ­ராக இருந்த சிவா­ஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடி­க­னிடம் வேறு என்ன எதிர்­பார்க்­கி­றீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்­த­படி "கெம­ரா­விற்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று கே.பி. பதி­ல­ளித்­துள்ளார். அதனை ரஜி­னிகாந்த் இன்­று­வரை பின்­பற்றி வரு­கின்றார்.

அதேபோல், பாலச்­சந்­தரை தனது குரு­நா­த­ராக போற்றி வரு­பவர் கமல். காரணம், கமலின் திரை­யு­லக வாழ்க்­கையில் பல முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை அளித்து அவரை மெரு­கேற்­றி­யவர் கே.பி. என்றே கூற வேண்டும். ரஜ­னிகாந்த், கமல்­ஹா­ச­னுடன், விவேக், நாசர், ராதா­ரவி, சார்லி, பிர­காஷ்ராஜ், சரத்­பாபு, சிரஞ்­சீவி, எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்­வ­நாதன், கவிஞர் வாலி, மதன் பாபு, மேஜர் சுந்­த­ர­ராஜன், டெல்லி கணேஷ், வை.ஜி.மகேந்­திரன் உட்பட பல நடிகர்களையும் கே. பாலச்சந்தரே அறிமுகப்படுத்தியிருந்தார்.

அதேபோல், சுஜாதா, ஜெயப்­பி­ரதா, சரிதா, ஜெய­சித்ரா, படாபட் ஜெய­லட்­சுமி, ஸ்ரீப்­ரியா, 'கல்கி' ஸ்ருதி, விஜி, சித்­தாரா, ஸ்ரீவித்யா, பிர­மிளா, ரதி, ஜெய­சுதா, சுமித்ரா, பாத்­திமா பாபு, யுவ­ராணி, விசாலி கண்­ண­தாசன் போன்ற நடி­கை­களும் கே.பி. இன் கண்டு பிடிப்­பு­களே. இயக்­கு­நர்­களைப் பொறுத்­த­வரை விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசை­ய­மைப்­பா­ளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மர­க­த­மணி, சக்­ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகிேயார் கே.பாலச்­சந்தர் தயா­ரித்த படங்­களின் மூல­மாக தமிழ் திரை­யு­ல­கிற்கு அறி­மு­க­மா­ன­வர்கள். தமிழ் திரை­யு­லகை ஏற்­றப் ­பாதைக்கு இட்­டுச்­சென்று இவ்­வு­ல­கை­விட்டு நீங்­கிய கே.பாலச்சந்தரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

தொகுப்பு: எஸ்.ரகுதீஸ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல