சோதிடமும் எண் சோதிடமும் கலந்து ஓர் இலகுவான ஆய்வு
தத்தம் அன்றாட வாழ்வின் எதிர்பார்ப்புகள் எதிர்கால முன்னேற்றம் பற்றிய கனவுகள் மெய்ப்பட வேண்டுமென விரும்புவது ஒவ்வொருவரினதும் இயல்பு. ஆனால் எதிர்பார்த்தது போல அவை கைவசமாகின்றனவா என்பது தான் கேள்விக்குறி. அதிலும் கடந்தாண்டிலோ அதற்கு முன்போ எத்தனையோ கஷ்டங்களைச் சுமந்து பல இடர்பாடுகளைக் கடந்து இளைத்துக் களைத்துப் போன பலரின் எதிர்பார்ப்பு புதிதாய் மலர்ந்துள்ள புத்தாண்டிலாவது தங்களது ஒரு சில எதிர்பார்ப்புக்களோ குறைந்தபட்ச ஆசை அபிலாஷைகளோ நிறைவேற வாய்ப்புக் கிட்டுமா என்பதே. சென்ற ஆண்டில் ஏழாம் எண்காரர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்திருப்பார்கள். அவர்களை விட இரண்டாம் எண்காரர்களுக்கு அவர்களை அறியாமலே தேங்காய்க்குள் இளநீர் சேருமாப்போல சில அல்லது பல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கிட்டியிருக்கும். அப்படியானால் இந்த ஆண்டு எந்த எண்காரர்களுக்கு நன்மைகள் செய்யும் ஆண்டாக மலர்ந்துள்ளது என்பதையறிய ஆவல் உந்துகிறதல்லவா?
ஆம். இந்த 2015ஆம் ஆண்டு (2+0+1+5=8) எட்டாம் எண் காரர்களுக்கே உரியது. எந்த மாதத்திலாவது பிறந்த 8ஆம் 17ஆம் 26ஆம் திகதிகளில் பிறந்த எட்டாம் எண்காரர்களே தம் வாழ்வில் திடீர் மாற்றங்களைச் சந்திக்கப் போகிறார்கள். இதுவரை தம்மைச் சூழ்ந்திருந்த நெருக்கடிகள் மெதுமெதுவாக விலகி சுமுகமான சூழலொன்று உருவாகி வருவதை உணரப் போகிறார்கள். அதிலும் முக்கியமாக அவரவர் சாதகப்படி மகர, மீன, மிதுனம், கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் இவ்வாண்டின் நடுப்பகுதி வரையிலும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் நடுப் பகுதியிலிருந்து நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். நல்ல பலன்கள் என என்னும் போது அவர்கள் இதுவரை உழைத்த உழைப்புக்குக் கிடைக்கும் பலன்களென்றோ பட்ட பாட்டுக்கு கிடைத்த ஆதாயமென்றோ தான் கொள்ள வேண்டும். இதில் அதிகம் பாடுபடாமல் அல்லது பாடுபடுவதே இல்லாமல் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டத்துக்கு இடமில்லை.
எட்டாம் எண் முக்கியமாக அரசியலுக்கானது. எனவே, எட்டாம் எண்ணில் பிறந்த அரசியல்வாதிகள் இவ்வாண்டில் கட்சி விட்டுக் கட்சி மாறியோ அல்லது தாம் தாம் சார்ந்த கட்சியில் கடைசி வரை நிலை கொண்டோ உயர் பதவியும் மிகுந்த பொருளும் சம்பாதிப்பர். மேலும், எட்டாம் எண்ணில் பிறந்த கல்விமான்கள், தொழிலதிபர்கள், சட்டத்துறை சார்ந்தோர், ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரெல்லாம் தத்தமக்கு இஷ்டமான துறைகளில் கஷ்டப்பட்டு வேலை செய்து உயர்வடைய வழி வகை செய்யும் இப்புத்தாண்டு.
விவசாயத்துறை சார்ந்த உரம், கிருமிநாசினி, உழுந்து, எள்ளு, மிளகு போன்ற கருநிறத் தானியங்களை உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபடுவோர் தோல், பாதணி உற்பத்தி விற்பனை, எரிபொருள் இறக்குமதி விற்பனை செய்வோர், மேற்குத் திசை நோக்கிய நிறுவனங்களில் தொழில் புரிவோர், மேற்குத்திசை நோக்கிய கடல் கடந்த பயணங்களை மேற்கொள்ளக் காத்திருப்போர் ஆகியோரெல்லாம் தத்தம் நெடுநாள் காத்திருப்புக்களுக்கும் முயற்சிகளுக்குமேற்ப புதிய வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதோடு இத்தொழில்துறைகளில் முன்னர் இழந்தவற்றை ஈடு செய்யவும் வழி செய்யும் இப்புத்தாண்டு.
மேலும், இதுவரை தாமதித்து வந்த திருமணம், பிள்ளைப் பாக்கியம் என்பன கைகூடும். சிலருக்கு போரில் தோற்ற இலங்கை வேந்தனைப் போல மனம் கலங்க வைத்த கடன் கட்டுக்கள் ஒரு வழியாகத் தீர்ந்து விடும். சிலருக்கு வருடக் கணக்கில் இழுபட்டு கையில் திருவோடு ஏந்த வைத்த வழக்கு விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு இக்காலகட்டத்தில் திடீரென்று உக்கிரம் பெறும். நடை நோய்கள் தீவிர சிகிச்சையின் பின் முற்றாகக் குணமாகிப்போகும். இன்னும் சிலருக்கு மொத்தத்தில் முதலில் ஒரு சங்கடத்தைத் தந்து பின்னர் சஞ்சலம் தீர்க்கும் எட்டாம் எண்ணுக்குரிய சனி பகவானின் திருவிளையாடல்கள் இவ்வாண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அது சரி, திருப்பங்களைப் பெறுவோர் எட்டாம் எண்காரர்களென்றால் இவ்வாண்டின் அதிர்ஷ்டசாலிகள் யாரென்று கேட்கிறீர்களா? அவர்கள் தான் 4ஆம், 13 ம், 22ஆம், 31ஆம் திகதிகளில் பிறந்த நாலாம் எண்காரர்கள்.
இவர்கள் பொதுவாக சுதந்திரம் விரும்பிகள். பேச்சும் எழுத்தும்தான் இவர்கள் மூலதனம். அதனாற்றான் ஆசிரியர்களாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், டியூட்டரிகள் எங்கும் பணி செய்து பேரெடுக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு இதுகால வரை இல்லாத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் இவர்களுக்கு அள்ளித் தரும் புத்துணர்வு ஆண்டாக மலர்ந்திருக்கிறது. குறிப்பாக மகர, மீன, கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை முக்கியமான காரியங்கள் கைகூட முட்டுக்கட்டையாகவிருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிலும் விட்டு விடுதலையானதொரு ஆசுவாச மனோ நிலை உருவாகும். இதர ராசிகளில் பிறந்த 4ஆம் எண்காரர்களுக்கு ஏதோவொரு விதத்தில் ஏற்றம் தரும் குறிப்பிடத்தக்க ஆண்டாக புத்தாண்டு விளங்கும். ஆகவே, நாலாம் எண்காரர்கள் எவராயினும் இதுவரை தாமதித்து வந்த முயற்சிகளிலோ அன்றேல் புதிய முயற்சிகளிலோ துணிந்து இறங்கலாம். காலம் அதற்கு உத்தரவாதம் தருகிறது.
பொறியியல், கணிதம், கணனித்துறை மாணவர்கள் ஏற்றம் பெறுவர். பலருக்கு வெளிநாட்டுக் கல்வி சித்திக்கும். வீடமைத்தல், கட்டடங்கள் நிர்மாணம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்துத்துறை சார்ந்தோர் புதிய ஒப்பந்தங்கள் பெறவும் ஆதாயம் பெறவும் காலம் கனிந்துள்ளது. சில வீடுகளில் கெட்டிமேளம் முழங்கும். சில வீடுகளில் குவா குவா சத்தம் கேட்கவும் வழி பிறக்கும். இப்படி மகிழ்வான மங்கலங்களால் சூழப்படுவார்கள்.
இவர்களுக்கு அடுத்தாற்போல் இப்புத்தாண்டில் நன்மையான பலன்களை அனுபவிக்கப் போகிறவர்கள் 1ஆம், 10ஆம், 19ஆம், 28 ஆம் திகதிகளில் பிறந்த முதலாம் எண் காரர்களே. அரசியலால் சிறப்போர் எட்டாம் எண்காரர்களென்றால் நிர்வாகத்திறனால் கீர்த்தி பெறுவோர் முதலாம் எண்காரர்கள். நடைமுறை வாழ்வை உற்று நோக்கினால் இந்த 8ஆம், 4ஆம், 1ஆம் எண்காரர்களுக்கிடையே ஓர் ஒற்றுமை இருப்பதை உணரலாம். வள்ளுவர் குறிப்பிட்டது போல் உடுக்கை இழந்த போது ஓடிச்சென்று இடுக்கண் களையும் நட்பு என்பது இந்த எண்காரர்களுக்கிடையே தான் உண்டு. காதலிலும் சொல்லப்போனால் ரோமியோ - ஜூலியட், தேவதாஸ் -பார்வதி அமரக்காதலையும் இந்த மூவகை ஆண் பெண்களிடையே தான் ஒப்பிட முடியும். எந்த கஷ்ட நஷ்டத்திலும் விட்டு விலகிப் போகாத வியாபாரப் பங்காளிகளும் இம்மூவகை எண்காரர்களிடையேதான் உள்ளனர்.
ஆற்றல் மிகுந்த எந்திரிகள், கணக்காளர்கள், அரசதுறை, தனியார்துறை நிர்வாகிகள் செயலாளர்கள் முதலாம் எண்காரர்களில்தான் அதிகமுள்ளனர். வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்களும் பெரும்பாலும் இவர்களே. காடு, மலை சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் குளுகுளுப்பான பிரதேசங்களை தங்கள் வசிப்பிடங்களாக கொண்டு ரசனையோடு வாழ்பவர்களும் இவர்களே. இவ்வாண்டில் நாலாம் எண்காரர்களுக்கு சொல்லப்பட்ட நன்மையான பலன்களே இவர்களுக்கும் காட்டப்படுகின்றன. அரசியலிலும் கட்சித்தலைவராக, செயலாளராக, பொருளாளராக இருந்து நிர்வாகத்திறன் மற்றும் சமயோசித புத்தியால் கட்சியின் கட்டுக்கோப்புக் கலைந்து விடாமல் காப்பதோடு கட்சியை மேலும் வளர்த்துப் பெயரெடுப்பவர்களும் இவர்களே. ஆனால் ஒரு விடயம் நான் என்ற கர்வத்தில் ஓங்கி நிற்பவர்கள் இவர்கள். அதே சமயம் புகழ்ச்சிக்கும் முகஸ்துதிக்கும் எளிதில் அடிமையாகிப் போகிறவர்களும் இவர்களே. இவையிரண்டும் தக்க தருணங்களில் இவர்களைக் காலை வாரி விடுவது தவிர்க்க முடியாதது.
இதுவரை திருப்பமும் அதிர்ஷ்டமும் ஏற்படும் எண்கள் பற்றி பார்த்தோம். இவைகளையும் தாண்டி இவ்வாண்டில் வாழ்வில் சாதகமான சூழல் நிலவக்கூடிய மற்றொரு எண்காரர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் தான் 6, 15, 24 திகதிகளில் பிறந்த ஆறாம் எண்காரர்கள்.
ஏழாம் எண்ணுக்குரிய (கேது) சென்ற ஆண்டில் மூன்றாம் எண்காரர்கள் (வியாழன்) சாதகமான பலன்களை அனுபவித்தார்கள்.
இவ்வாண்டில் அது தலைகீழாக மாறி விட்டது. எட்டாம் எண்ணுக்குரிய சனி இந்த ஆண்டில் 6ஆவது எண்காரர்கள் (சுக்கிரன்) ஏதோவொரு விதத்தில் நயமடையப் போகின்றார்கள். அசுபரான சனியும் சுபரான சுக்கிரனும் ஒன்றுக்கொன்று நட்புக்கொண்ட கிரகங்கள். சோதிடப்படி பார்க்கப்போனால் சனியின் சொந்த வீடுகளான மகர, துலா, லக்கினங்களுக்கு சுக்கிரனும் சுக்கிரனுடைய ஆட்சி வீடுகளான இடப, துலா இலக்கினங்களுக்கு சனியும் முறையே ஒரு கேந்திரமும் ஒரு கோணமும் பெறுவதால் யோகம் செய்யும் தன்மை கொண்டவை. அதனால் தான் இடப, துலா இலக்கினங்களில் பிறப்போருக்கு மாத்திரம் இனி பாரபட்சம் காட்டி சகல சம்பத்துக்களையும் அள்ளி வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு சோதிடத்திலுண்டு. நடைமுறையில் பார்க்கப்போனால் இந்த 8 – 6 எண்காரர்களுக்கிடையே காதலுறவும் தாம்பத்தியமும் ஏற்பட்டால் அக்குடும்பத்தில் அந்நியோன்னியம் நிலவுகிறதோ இல்லையோ பல வழிகளிலும் வசதிவாய்ப்புக்கள் பெருகுவதை அவதானிக்கலாம்.
அதுபோல 8 ஆம் 6ஆம் எண்காரர்கள் வியாபார பங்காளிகளானால் இந்த 8ஆம் எண்காரர்கள் மூலம் 6ஆம் எண்காரர்கள் இலாபம் காண்பதையும் கவனிக்கலாம். அதேவேளை ஆறாம் எண்காரர்களின் சுயநல மிகுதியால் 8ஆம் எண்காரர் நம்பிக்கை மோசம் போவதுமுண்டு. 6ஆம் 4ஆம் எண்காரர்களின் இணைப்பிற்கும் இது பொருந்தும்.
சரி எல்லோருக்கும் நன்மையெனில் தீயபலன்கள் பெறுகின்றவர்களே இவ்வாண்டில் இல்லையா? ஏனில்லாமல்? அவர்களும் இருக்கின்றார்கள். 3ஆம், 12ஆம், 21ஆம், 30ஆம் திகதிகளில் பிறந்த 3ஆம் எண்காரர்களும் 9ஆம், 18ஆம், 27ஆம் திகதிகளில் பிறந்த 9ஆம் எண்காரர்களும்தான் ஆவார்கள்.
இவ்வாண்டில் புதிய முயற்சிகள் மேற்கொள்வது இவர்களுக்கு பொருத்தமாயிராது. மாமூலான கருமங்களை அன்றாடம் அவதானத்துடன் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. முக்கியமாக பொலிஸ், இராணுவம் மற்றும் மின்சாரம், கட்டிட நிர்மாணம், மருத்துவம் போன்ற துறைகளில் பணிபுரிவோர் திடீர் பிரச்சினைகளிளோ வியாதி விபத்துக்களிலோ சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. குறிப்பாக மேட, சிங்க, தனு ராசிக்காரர்கள் வழிபாடுகள் கிரக சாந்திகள் செய்தும் மௌனப்பிச்சைக்காரர்கள், ஏழை எளியவர்கள், அங்கவீனமானவர்கள், விதவைகளுக்கு தானதர்மம் வழங்கியும் தீர்த்த யாத்திரை செய்தும் காலநிலையின் இறுக்கத்தை குலைத்து ஆசுவாசம் பெறலாம்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக