திங்கள், 12 ஜனவரி, 2015

மாண­வர்­களைத் தாக்கும் மன அழுத்தம்!

பொது­வா­கவே பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்கள் - எப்­போதும் படித்­துக்­கொண்டே இருக்க வேண்டும் என எதிர்­பார்ப்­பது வழக்கம். படிக்­கா­விட்டால் அவர்கள் எதிர்­கா­லமே இருண்டு போய்­வி­டுமே என்ற எண்­ணத்­தால்தான் இத்­தனை எதிர்­பார்ப்பும். ஆனால், இப்­படி அவர்­களை இடை­வெ­ளி­யில்­லாமல், எந்தப் பொழு­து­போக்கும் இல்­லாமல் கட்­டா­யப்­ப­டுத்தி படிக்க வைத்தால் நிச்­சயம் மன அழுத்தம் ஏற்­படும். இதனால், பரீட்­சையில் தோல்­வி­ய­டை­ய­வில்லை என்­றாலும், வாழ்க்­கையில் தோல்­வியை தழு­வு­வார்கள் எனப் பல ஆராய்ச்சி முடி­வுகள் உரைக்­கின்­றன.



நல்ல பாட­சா­லையில் சேர்க்கை... நல்ல அலு­வ­ல­கத்தில் வேலை, கை நிறைய சம்­பளம்... நிறை­வான வாழ்க்கை... இப்­படி எதிர்­காலம் பிர­கா­ச­மாக அமைய வேண்டும் என்ற பெற்­றோரின் ஆசைகள் மன அழுத்தம் கார­ண­மாக நிரா­சை­யா­கவே ஆகி­விடும். சில நேரங்­களில் மன அழுத்­தத்­து­டனே விருப்­ப­மில்­லாமல் படித்து நல்ல வேலை அமைந்­தாலும் குழந்­தைகள் பிற்­கா­லத்தில் பெற்­றோரை பெரும்­பாலும் மதிக்க மாட்­டார்கள். பல தரு­ணங்­களில் குடி மற்றும் போதைப் பழக்­கங்­க­ளுக்கு ஆளா­கவும் வாய்ப்­புள்­ளது. மொத்தத்தில், அவர்­களின் ஆளு­மையே (Personality) பாதிக்­கப்­ப­டலாம்.

இதற்­காக மாண­வர்­களை படிக்க வேண்டாம் எனக் கூற­வில்லை. எந்­த­வொரு விட­யத்­தையும் ரசித்து அதன் அர்த்­தத்தை உணர்ந்து செய்தால் வெற்றி நிச்­சயம். கட்­டா­யத்தால் பிடிக்­காத பாடப்­பி­ரிவை எடுப்­ப­வர்கள், தங்கள் வாழ்க்­கையை எந்த மகிழ்ச்­சியும் இன்றி மற்­ற­வர்­களை குறை சொல்­லியே காலத்தை கழிப்­பார்கள். இப்­ப­டி­யொரு வாழ்க்கை அவ­சி­யம்­தானா?மாண­வர்­க­ளுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க பெற்­றோரின் பங்கு மிகவும் அவ­சியம். சிறு வய­தி­லி­ருந்தே குழந்­தை­க­ளுக்கு கல்­வியின் சக்­தியை சொல்­லியே வளர்க்க வேண்டும். இதற்­காக, ‘படித்­தால்தான் நல்லா சம்­பா­திக்­கலாம்’, ‘படிக்­க­லைன்னா மாடுதான் மேய்க்­கணும்’, ‘படி படி’ என்­பது போன்ற வாச­கங்­களை தவிர்க்க வேண்டும்.

மாறாக, கல்­வி­யினால் என்­னென்ன நன்­மைகள் என்­பதை நாசுக்­காக சிறு­வ­ய­தி­லேயே உண­வோடு சேர்த்து புகட்ட வேண்டும். மதிப்­பெண்­க­ளுக்­காகப் படிப்­பதைத் தவிர்த்து, எதிர்­கால வாழ்க்­கைக்­காக படிக்க வேண்டும் என உணர்த்­தி­னாலே அர்த்தம் புரிந்து ஆர்­வத்­துடன் படிப்பை நேசிக்க ஆரம்­பித்து விடு­வார்கள். அடுத்­த­தாக... தங்­க­ளு­டைய கனவு, ஆசை­களை பிள்­ளைகள் மீது திணிப்­ப­தையும் தவிர்க்க வேண்டும்.

அது அவர்­க­ளுக்கு ஊக்­கத்தை அளிக்­காது... சுமை­யா­கவே அமையும்.

இது உங்­க­ளுக்கு பொருந்­து­கிற உடையை, உங்கள் பிள்­ளை­களை அணியச் செய்­வ­தற்கு சமம்! உங்கள் குழந்­தைகள் தனித்­தன்மை வாய்ந்­த­வர்கள். தனிப்­பட்ட ஆசை, கனவு, திறன் என பல விடயம் சேர்ந்த ஆற்றல் மிக்க அற்­புத கலவை. இவ்­வு­லகில் எல்­லோ­ருக்கும் தனித்­தன்மை உள்­ளது... ஒரு­வரை இன்­னொ­ரு­வ­ருடன் ஒப்­பி­டு­வதே சாத்­தி­ய­மில்லை.

பற­வைக்கு எவ்­வ­ள­வுதான் நீச்சல் சொல்லிக் கொடுத்­தாலும் அதனால் நீந்த முடி­யாது. மீன் எவ்­வ­ளவு பயிற்சி எடுத்­தாலும் பறவை போல பறக்க முடி­யாது. அதனால், குழந்­தை­களின் ஆர்வம் மற்றும் தனித் திற­மை­யையும் பல­வீ­னத்­தையும் நன்கு புரிந்து, அதற்கு தகுந்­த­வாறு ஊக்­க­ம­ளிக்க வேண்டும். அவர்­களின் எதிர்­கா­லத்தை செதுக்கும் உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும் அவர்­க­ளி­ட­மி­ருந்து தட்டிப் பறிக்கக் கூடாது.

அதிக மதிப்பெண் வாங்க வைப்­பதை விட பிள்­ளை­களின் வாழ்க்­கையை நிறை­வா­கவும் அர்த்­த­முள்­ள­தா­கவும் ஆக்­கு­வதே உண்­மை­யான வெற்றி என்­பதை பெற்றோர் உணர வேண்டும். மாண­வர்கள் வாழ்வில் படிப்பும், பொழு­து­போக்கும் சம­மாக இருப்பின் மன அழுத்தம் இல்­லாமல் தங்­களின் முழுத் திற­மையை வெளிக்­காட்டி நல்ல மதிப்­பெண்கள் பெறலாம். பற­வை­களும் விலங்­கு­களும் குறிப்­பிட்ட கால­கட்டம் வரையே குழந்­தை­களை பாது­காக்கும். அவற்­றுக்குத் தனியே வாழும் பக்­குவம் வந்­த­வுடன், அதன் சுதந்­தி­ரத்தில் தலை­யி­டாமல் அடுத்த வேலையை பார்க்க போய்­விடும். இந்த இயற்கை நியதி மனி­த­னுக்கும் பொருந்தும். நம் நாக­ரி­கத்­திலோ, பிள்­ளை­க­ளுக்கு எவ்­வ­ளவு வய­தா­னாலும் பெற்­றோரின் தலை­யீடு தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்­படி எல்லா விட­யத்­துக்கும் தங்­க­ளையே சார்ந்­தி­ருக்­கும்­படி பெற்றோர் வளர்த்­து­விட்டு, 20 வய­தா­ன­வுடன் திடீ­ரென பிள்­ளைகள் சுய­மாக இருக்க வேண்டுமென எதிர்­பார்ப்­பார்கள்.

பள்ளி / கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு

மன அழுத்­தத்­தினால் ஏற்­படும் விளை­வுகள்

1. அறி­வுத்­தி­றனை பாதிக்கும். கவனம் செலுத்த முடி­யாது. மறதி ஏற்­படும். படிப்பில் ஆர்­வ­மின்மை உண்­டாகும்.

2. உற­வு­களை பாதிக்கும். அம்மா, அப்­பா­வுடன் சண்டை, சக மாண­வி­ய­ருடன் தக­ராறு, ஆசி­ரி­யர்­க­ளிடம் பிரச்சினை ஏற்­படும்.

3. தற்­கொலை எண்ணம் தோன்­றக்­கூடும்.

4. தன்­னம்­பிக்கை குறையும்.

5. குடி / சிகரெட் / போதைப் பழக்கம் ஏற்­படும் அபாயம் அதி­க­ரிக்கும்.

6. தோல்வி அடைந்து விடுவோம் என்­கின்ற எதிர்­மறை மனப்­பான்மை ஏற்­படும் (Fear of failure).

7. தன் திற­மையை / அறி­வுத்­தி­றனை விட குறை­வாக மதிப்பெண் எடுப்­பது வழக்­க­மாகும் (underachievers).

8. உடல், மன­நல பிரச்சி­னைகள் (வலிகள், மனச்­சோர்வு, மனப்­ப­தற்றம், பயம் மற்றும் பல...)

இது எப்­படி சாத்­தியம்?

பிள்­ளை­களின் பிரச்சி­னையை தீர்க்கும் திறனும், சுய அறிவும், முடிவு எடுக்கும் திறனும் வள­ராமல் ஆளுமை இவ்­வித வளர்ப்­பினால் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இப்­படி வளர்க்­கப்­படும் பிள்­ளைகள் தம் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே வாழப் பழ­கி­வி­டு­வார்கள். பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு நல்­லது கெட்­டதைப் புரிய வைத்து போதிய சுதந்­திரம் கொடுத்தால் அவர்­களின் ஆளுமை சிறப்­பாக செதுக்­கப்­படும். பிள்­ளை­களை சிறு வய­தி­லி­ருந்தே உற்­சா­கப்­ப­டுத்தி, ஊக்­க­ம­ளித்து அவர்கள் ஏதேனும் இலட்­சி­யத்தைத் தேர்ந்­தெ­டுக்க உறு­து­ணை­யாக இருக்க வேண்டும். இலட்­சி­ய­முள்ள பிள்­ளை­களை படிக்க சொல்லி வற்­பு­றுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர்கள் அவ­ர­வரின் வாழ்க்­கையைத் தானே ரசித்து தேர்ந்­தெ­டுப்­பார்கள். வாழ்வின் முக்­கிய முடிவுகளை தாமா­கவே எடுப்­பதால் அவர்­க­ளுக்கு பொறுப்பும் தன்­னம்­பிக்­கையும் அதி­க­ரிக்கும். வாழ்க்கைப் பாதையில் ஏற்­படும் சவால்­களை சமா­ளிக்கும் திறன் ஏற்­படும். தங்கள் வாழ்க்­கைக்கும் அவர்­களே பொறுப்­பேற்று மற்­ற­வர்­களை குறை சொல்­லாமல் சவாலை எதிர்­கொண்டு வெற்றி பெறுவர். இப்­ப­டிப்­பட்ட ஆரோக்­கி­ய­மான மாணவர்களே நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்.

– தொகுப்பு:அருணா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல