விண்டோஸ் 7 ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை நீக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. முதலில் விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். இதில் கண்ட்ரோல் பேனல் டேப் அழுத்தி, அதனைப் பெறவும். பின்னர், Programs and Features செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள பிரிவில் Turn Windows Features on off என்ற ஆப்ஷன் இடது பக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்து அந்த புரோகிராமினை இயக்கவும். இங்கு View installed updates என்பதில் கிளிக் செய்திடவும்.
இதில் Microsoft Windows என்பதன் கீழ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Uninstall. என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அன் இன்ஸ்டால் ஆன பின்னர், சிஸ்டத்தினை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.
உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உங்கள் சிஸ்டத்தில் மறைக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் எப்போதும் தன்னுடைய விண்டோஸ் அம்சங்களை நீக்கிட அனுமதிப்பதில்லை. அத்தகைய அம்சங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் ஒன்றாகும். அதனால் தான், அதனை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்திட இயலாது.
இதனை, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எப்படி நீக்குவது என்பதனையும் பார்க்கலாம். இதற்கு சற்று வேறு மாதிரியான நடவடிக்கைகள் தேவை. விண்டோஸ் பட்டன் அழுத்தி, "Turn Windows" என டைப் செய்திடத் தொடங்கவும். உடன் கிடைக்கும் பட்டியலில் "Turn Windows Features on or off" என்பதில் கிளிக் செய்திடவும். சில பதிவுகளில், இப்போது உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கேட்கப்படலாம். அப்போதுதான் தொடர்ந்து இயங்க முடியும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டினை முடக்கி வைக்க, Internet Explorer என இருக்கும் இடத்தின் இடது பக்கம் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். மீண்டும் Yes என்பதில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். தொடர்ந்து ரீ ஸ்டார்ட் என்பதில் கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக