ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல்பாட்டினை ஒத்ததே இவை.
இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் இயங்குவதன் மூலம், அடிப்படையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறிய அளவில், இயக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இயலும். மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர், தன் வாடிக்கையாளர்கள், ஆக்டிவ் எக்ஸ் புரோகிராம்களை அணுக ஓர் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
ஆனால், இவை இயங்குவதில் சிக்கல் உள்ளது. இந்த புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் தாக்கும் அளவிற்கு இடம் அளிக்கும் வகையில் இயங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழையும் மால்வேர் புரோகிராம்களின் வழியை “drive-bys”என அழைக்கின்றனர். மேலும் தூரத்தில் இருந்தே நம் கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுபவர்களுக்கும் இவை வாகாக அமைகின்றன.
அப்படியானால், இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கலாமே என்று நீங்கள் எண்ணலாம். அதனையும் நாம் மேற்கொள்ள வழி உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Internet Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இடையே Network and Internet என்ற விண்டோவினைப் பெறவும்.
இங்கு Internet Options என்ற பிரிவில், Manage Browser Add-ons” என்ற ஆப்ஷனைப் பார்க்கலாம்.
இந்த விண்டோவிற்குச் சென்றவுடன், “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
இங்கு நம் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திட, ஒரு ஸ்லைடர் பார் ஒன்று தரப்பட்டிருக்கும்.
இதில் High என்பதில் செட் செய்தால், ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் அனைத்தும் தடுக்கப்படும்.
இதில் என்ன பிரச்னை ஏற்படும் என்றால், சில இணைய தளங்கள், இவற்றைத் தடை செய்துவிட்டால், சரியாக இயங்காது.
இதற்குப் பதிலாக, நம் பிரவுசர்கள், இந்த தளம் வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கும் தளங்களுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக