விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த பிரவுசர் கிடைக்கும். 'ஸ்பார்டன்' என்பது புதிய பிரவுசரின் குறியீட்டுப் பெயர் தான். இந்த பெயரிலேயே பிரவுசர் கிடைக்கலாம். அல்லது வேறு பெயரில் கிடைக்கலாம்.
தற்போது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு, அண்மையில் ஸ்பார்டன் பிரவுசரின் சோதனைப் பதிப்பும் கிடைக்கிறது. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். விண் 10 மற்றும் ஸ்பார்டன் இரண்டுமே சோதனைப் பதிப்பு தான்.
சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்த வகையில், ஸ்பார்டன் பிரவுசர், வேகமாக, உண்மையிலேயே அதி வேகமாக இயங்குகிறது. இதன் முகப்பு தோற்றம், பிரிவுகள் அமைப்பு அனைத்தும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐக் காட்டிலும் எளிமையாகவும், வசதியாகவும் உள்ளது.
நாம் திறக்கும் ஒவ்வொரு இணையப் பக்கத்திற்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ளது போல, சதுர டேப்கள் தரப்படுகின்றன. இதில் உள்ள எக்ஸ் ('x') அடையாளத்தினை கிளிக் செய்தால், தளங்கள் மூடப்படுகின்றன. '+' அடையாளத்தினைக் கிளிக் செய்தால், புதிய டேப்கள் திறக்கப்படுகின்றன. இடது புறம் மேலாக, முன் மற்றும் பின் சென்ற இணைய தளங்களைப் பெறுவதற்கான அம்புக் குறிகள் (Forward and Back) தரப்பட்டுள்ளன.
கூடவே, ஒரு ரெப்ரெஷ் பட்டனும் தரப்பட்டுள்ளது. பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினை, மீண்டும் தரவிறக்கம் செய்து பார்க்க. இங்கு கிடைக்கும் பாரில் கிளிக் செய்தால், தேடலுக்கான கட்டமும், இணைய தள முகவரிக்கான கட்டமும் கிடைக்கிறது.
வலது மேற்புறம் உள்ள ஸ்டார் பட்டனில் கிளிக் செய்தால், பேவரிட் தளங்களை இணைக்கலாம்; அல்லது ரீடிங் லிஸ்ட்டில் தேவையானவற்றைச் சேர்க்கலாம். அத்துடன், ஓர் இணைய தளக் கட்டுரையைப் பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால், அதற்கான ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது.
ஏதேனும் இணைய தளப் பக்கத்தினை பேவரிட்ஸ் பிரிவில் இணைத்தால், அதற்குத் தனியாக ஒரு பெயர் கொடுத்து, போல்டர் ஒன்றில் ஒதுக்கி வைக்கலாம்.
இதில் வேடிக்கையான ஒன்றாக அல்லது புதிய ஒன்றாக எனக்குப் பட்டது இதில் காணப்படும் கடிகார ஐகான் தான். இதனைக் கிளிக் செய்தால், பிரவுசரின் ஹிஸ்டரி கிடைக்கிறது. கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், நாம் அண்மையில் டவுண்லோட் செய்தவை பட்டியலிடப்படுகின்றன.
பேனா மற்றும் பேப்பர் போல உள்ள ஐகானில் கிளிக் செய்தால், இணைய தளத்தில் ஏதேனும் எழுதி வைக்கலாம். கடைசி ஐகானாக மூன்று புள்ளிகள் உள்ள ஐகான் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், செட்டிங்ஸ் மற்றும் சார்ந்த வேலைகளை மேற்கொள்ளலாம். இன்னும் நிறைய சொல்லலாம். இவை எல்லாம். தற்போது இருப்பவற்றிலிருந்து மாறுபட்டவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக