யாழ். வட்டுக்கோட்டை தெற்கு, முதலி கோவிலடியில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இதில் பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரி (வயது 34) என்பவரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவராவார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
2012ம் ஆண்டு விபத்தில் குறித்த பெண்ணின் கணவர் விபத்தில் உயிரிழந்தார் என்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தை கூட உயிரிழந்தது.
இதன் பின்னர் குறித்த பெண் 24 வயதுடைய வாலிபனை காதலித்துள்ளார். எனினும் குறித்த இளைஞன் வீட்டில் பெற்றோர்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களது காதலை மறுத்தனர்.
அதனால் இருவரும் 3 நாட்களுக்கு முன்னர் ஓடிப்போக தீர்மானித்து பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால் இளைஞன் வீட்டு உறவினர்கள் அவர்களை தேடிப்பிடித்தனர்.
நேற்றும் இதேபோல குறித்த குடும்பப் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது தாயும், உறவினர்களும் அவளைத் தேடிய பொழுது குறித்த குடும்பப் பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் பொன்னாலை, கொத்தித்துறை மயானத்தில் இறந்து கிடந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக