திங்கள், 18 மே, 2015

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு


கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு – கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.


புங்குடுதீவு9ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (19) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை புரிந்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

நேற்றையதினம்( May 15, 2015 ) பாடசாலை விட்டு திரும்பிய மாணவி வீடு திரும்பவில்லை. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையில் இருந்த சிறிய பற்றைக்காடு போன்ற பகுதியில்த்தான் அவர் கடத்தப்பட்டு, வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், அந்த சமயத்தில் இதனை யாரும் பெரிய விடயமாக பொருட்படுத்தவில்லை. மகள் மாலை மங்கியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர், நெடுந்தீவு பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

முறையிட சென்ற தந்தையை எகத்தாளமாக பார்த்த பொலிசார், காதலித்த பொடியனுடன் ஓடியிருப்பாள். காலமை வந்திடுவாள் என கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிசாரின் இந்த பொறுப்பற்ற நடத்தையும் கொலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டதென்பதே மக்களின் கொதிப்பாக உள்ளது.
மறுநாளாகியும் மகள் வராதநிலையில் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். இந்த சமயத்தில்த்தான், அவர்களது வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலிருந்த காட்டுபகுதியில் கொல்லப்பட்ட மாணவியின் கால் செருப்பை சிலர் கண்டுள்ளனர்.

விடயம் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த அலரிமரத்தில் மாணவியின் கால்கள் அகலமாகக் கட்டப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் சம்பவ இடத்திலேயே காணப்பட்டன.

அங்கு மாணவி பலமணிநேரமாக கடத்தி வைத்திருக்கப்பட்டு சித்திரவதை அல்லது திட்டமிட்ட பலமணி நேர வல்லுறவு நிகழ்ந்திருக்கிறதென கூறுகிறார்.

மாணவியின் உடலிலும் கொடூரமான சித்திரவதைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அவர் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக காமகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை சேர்ந்த பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளைகளான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, மற்றும் அவரது சகோதரரான கொழும்பில் தொழில் புரியும் செந்தில், மற்றும் இவர்களது இன்னொரு சகோதரரான சின்னாம்பி என்பவரும், மற்றும் ரவியின் கூட்டாளியான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த கிருபா என்பவரும் பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

முதலில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூபாலன் சரோசா தம்பதிகளின் பிள்ளையான “பத்தாயிரம் ரூபாவுக்கு கொலை செய்யும்” கூட்டத்தை சேர்ந்த ரவி, கைது செய்யப்பட்டு அவனை “விசாரிக்க வேண்டிய முறையில்” பொலிசார் விசாரித்ததுடன், அவர்களின் வீட்டையும் சோதனையிட்ட போது அங்கு இரத்தத்துடன் இருந்த சேட் ஒன்றையும் கைப்பற்றி, அதன் சூத்திரதாரியான அவனது தம்பியான கொழும்பில் தொழில் புரியும் செந்தில் என்பவரும் , அதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல