ஞாயிறு, 7 ஜூன், 2015

யுத்தகாலத்தில் திருமலையில் இடம்பெற்ற கொடூரங்கள்...

நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை கிரா­மப்­பு­றங்­களைச் சேர்ந்த மக்கள் அனு­ப­வித்த இன்­னல்கள் ஏராளம். பலர் தங்கள் பிள்­ளை­களை பறி­கொ­டுத்­தனர். மேலும் சிலர் கட்­டா­யத்தின் பேரில் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். மேலும் பலரோ விசா­ர­ணைக்­கென அழைத்துச் செல்­லப்­பட்டு காணாமல் போன­வர்கள் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்­ளனர்.

இந்­த­நி­லையில், அவர்­களின் உற­வி­னர்கள் இன்றும் கண்ணீர் வடித்­த­வண்­ண­முள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்­களின் கண்ணீர் கதை­களே இவை...



எனது தந்தை பொறுப்­புள்­ள­வ­ராக நடந்­தி­ருந்தால் என் தாயை நான் இழந்­தி­ருக்­க­மாட்டேன். குடும்­பத்தை காப்­பாற்ற விற­கு­ வெட்ட சென்ற என் தாயை கன்­னியா நடுக்­காட்டில் வைத்து படு­பா­விகள் வெட்­டிக்­கொன்­றார்கள்.

இவ்­வாறு ஒரு கடி­தத்தை திரு­கோ­ண­மலை பிர­ஜைகள் குழு­வுக்கு எழு­தி­யி­ருந்தார் (3.4.1986) செல்­வ­நா­யக புரத்தை சேர்ந்த பத்­ம­ காந்­தி­யென்ற பெண். இப்­பெண்ணால் எழு­தப்­பட்ட அந்த கடித­த்தில் தனது தாய்க்கும் சகோ­த­ர­னுக்கும் நேர்ந்த கொடூ­ரத்தை அவர் விவ­ரித்­தி­ருந்தார்.

அன்­றைய தினம் வழ­மைபோல் எனது தாயார் நவ­மணி விறகு வெட்­டு­வ­தற்­காக காலையில் எனது மூத்த சகோ­த­ர­னுடன் புறப்­பட்டார். குடும்ப வறுமை கார­ண­மா­கவும், கண­வரின் பொறுப்­பற்ற தன்மை கார­ண­மா­கவும் குடும்­பத்தை காப்­பாற்ற வேண்­டு­மென்­ப­தற்­காக பாட­சா­லைக்கு அனுப்­ப­வேண்­டிய மூத்­த­ ச­கோ­த­ரனை பள்­ளிக்­கூடம் அனுப்­பாமல் விறகு வெட்ட அழைத்து சென்றார். கன்­னியா, ஆண்­டாங்­குளம் 6 ஆம் கட்டை ஆகிய இடங்­களில் அமைந்­தி­ருக்கும் காடு­க­ளுக்கு சென்று விறகு வெட்டி சீவியம் நடத்தி வந்தார். எனக்கு மூன்று சகோ­த­ரி­களும் ஒரு ஆண் சகோ­த­ரனும் உள்­ளனர்.

அன்­றைய தினம் 05.03.1986 காலையில் விறகு வெட்ட எனது மூத்த சகோ­த­ர­னுடன் போனவர் தான் என் தாய். மீண்டும் வர­வே­யில்லை. கன்­னி­யா­வி­லுள்ள நடுக்­காட்டில் வைத்து படு­பா­விகள் அவரை வெட்­டிக்­கொன்று விட்­டார்கள். கழுத்தில் படு­கா­யங்­க­ளுடன் தப்பி பிழைத்து வந்த எனது சகோ­தரன் மூலமே செய்­தியை அறிந்து கொண்டோம். எனது தந்­தை­யாரின் பொறுப்­பற்ற தன்மை, கசிப்­புக்கு அடி­மை­யா­கிய குணம் ஆகி­ய­வற்­றி­னா­லேயே எனது தாயை இழக்­க­வேண்டி வந்­தது. தாயை இழந்து எனது சகோ­தரர், சகோ­த­ரிகள் அநா­தை­யாக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அவர்­களின் வாழ்­வுக்கு வழி காட்­ட­வேண்­டிய பொறுப்பு என்­னிடம் விடப்­பட்­டுள்­ளது என அப்பெண் குறிப்­பிட்­டி­ருந்தார்.

1986ஆம் ஆண்டு காலப்­ப­குதி திரு­கோ­ண­மலை மாவட்டம் முழு­வ­தையும் கதி­க­லங்­க­வைத்த காலப்­ப­கு­தி­யாகும். தமிழ் கிரா­மங்கள் ஒப்­பாரி வைத்­தன; ஓல­மிட்­டன. கொலைகள், வன்­செ­யல்கள், வன்­பு­ணர்­வுகள், இடப்­பெ­யர்­வுகள் என கொடுங்­கோண்மை தலை விரித்­தா­டிய காலப்­ப­குதி. இங்கு நடப்­பவை அங்கு தெரி­வ­தில்லை. அங்கு நடப்­பவை இங்கு தெரி­வ­தில்­லை­யென்ற அள­வுக்கு சம்­ப­வங்கள் நடந்து கொண்­டி­ருந்த காலம்.

1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அந்த தாயும் அவ­ளு­டைய இரண்டு பிள்­ளை­களும் வீட்டில் தங்க முடி­யாத அச்சம் கார­ண­மாக தனது சகோ­த­ரியின் வீட்­டுக்கு படுக்­கைக்­காக சென்­றார்கள். அந்­தக்­கா­லத்தில் அவ்­வகைக் கிரா­மங்­களில் பெண்­களோ குடும்­பங்­களோ தனியே இருக்க முடி­யாத கொடு­மை­யான காலம்.

ஆண் துணை­யில்­லாத இரண்டு சகோ­த­ரி­களும் பிள்­ளை­களும் உறங்­கி­கொண்­டி­ருந்­தார்கள். இரவு 11.00 மணி ஊர்­நாய்கள் எல்லாம் சேர்ந்து ஓல­மிட்டுக் கத்­தின. பிள்­ளை­க­ளுடன் நித்­தி­ரைத் ­தூக்­கத்தில் அவர்கள் ஆழ்ந்­தி­ருந்­த­வேளை ஜன்­ன­லி­னூ­டாக டோச் ஒளி பாய்ச்­சப்­பட்­டது. இரண்டு மூன்று சீரு­டைக்­கா­ரர்கள் ஜன்­ன­லுக்கு வெளியே நிற்­பது தெரிந்­தது. வந்த சீரு­டைக்­கா­ரர்கள் வீட்­டுக்குள் உறங்­கிக்­கொண்­டி­ருந்த தங்­களை எழும்பி வரும்­படி உத்­த­ர­விட்­டார்கள். பயத்தின் கார­ண­மாக பதறி அடித்­துக்­கொண்டு அப்பெண் எழுந்­துள்ளாள். பிள்­ளை­களும் அவளும் சேர்ந்து "ஐயோ" என்ற அவ­லக்­குரல் எழுப்­பி­யுள்­ளார்கள் ஆனால் எவரும் வர­வில்லை வர­மு­டி­யாத காலம்.

வெளியே வாருங்கள் பயப்­ப­ட­வேண்­டா­மென வந்த சீரு­டைக்­கா­ரர்கள் கொச்­சைத்­த­மிழில் அழைத்­துள்­ளனர். டோச் ஒளி தொடர்ந்து முகத்­துக்கு பாய்ச்­சப்­பட்டு கொண்­டே­யி­ருந்­தது. அந்த இரு சீரு­டைக்­கா­ரரின் கடு­மை­யான தொனி அழைப்பை கேட்டு பயந்து அவளின் சகோ­த­ரியும் பிள்­ளை­களும் வெளியே ஓடி­விட்­டார்கள். அந்த கும்­மி­ருட்டில் அவர்கள் எந்த திசையை நோக்கி ஓடி­னார்கள் எனத்­தெ­ரி­யாமல் அவளும் பிள்­ளை­களும் உறைந்து போய் நின்­றார்கள். இவர்களும் ஓட முயற்­சிக்­கும்­போது அந்த தாயை ஒரு சீரு­டைக்­காரன் ஓடி வந்து அழுங்­குப்­பி­டி­யாக பிடித்தான் இரண்டு பிள்­ளை­களும் ஊரே நடுங்­கும்­படி கத்­தி­னார்கள்.

“ஐயோ" என அவள் கத்­தினாள்; கத­றினாள். கையெ­டுத்து, வந்­தி­ருந்த அந்த இரு சீரு­டைக்­கா­ரர்­க­ளையும் கும்­பிட்டாள் அந்த இரு­பிள்­ளை­களின் தாய். அந்தக் காமுக மிரு­கங்­களோ வைத்­தி­ருந்த துப்­பாக்­கியால் அவளை தாக்­கினர். அவள் வேத­னையில் கத்­தினாள்.

அந்த தாய் இரு காமு­க­வெ­றி­யர்­க­ளாலும் நிர்­வாணம் ஆக்­கப்­பட்டாள். அந்த தாய் கட்­டி­யி­ருந்த சேலையை கிழித்து வாயில் திணித்­தார்கள். அதற்கு மேலே அவளால் ஒன்றும் செய்­ய­மு­டி­ய­வில்லை. பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று அவளால் ஊகிக்­க­மு­டி­ய­வில்லை. அந்தக் கொடிய காம மிரு­கங்கள் தமது இச்­சையை தீர்த்து கொண்­டார்கள். “நாங்கள் நாளைக்கும் 10 மணிபோல் வருவோம் இங்கு நடந்­த­வற்றை யாருக்கும் சொன்னால் உன்­னையும் உனது பிள்­ளை­க­ளையும் சுட்­டுக்­கொன்­று­வி­டு­வோம்”­என்று பய­மு­றுத்தி சென்­றார்கள். வந்த இரு­வரில் ஒரு­வனை என்னால் எப்­பொ­ழுதும் அடை­யாளம் காட்­ட­மு­டி­யு­மென அந்த தாய் பிர­ஜைகள் குழு­வுக்கு முறை­யிட்­டுள்ளார். மறுநாள் அவளும் பிள்­ளை­களும் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரி­யாது.

(ஆதாரம்- பிர­ஜைகள் குழு 09.12.1986)

அதே கிரா­மத்தில் நடை­பெற்ற இன்­னு­மொரு பாலியல் வன்ம சம்­பவம் இக்­கி­ரா­மத்­தையே உலுக்­கிய சம்­ப­வ­மாகப் பேசப்­ப­டு­கி­றது. 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு ஊர் உறங்­கி­கொண்­டி­ருந்­தது. அந்த தாயும் கண­வரும் அவர்­க­ளு­டைய பிள்­ளை­களும் அலஸ் தோட்­டத்­தி­லுள்ள சிறிய ஹோட்­டலில் பாது­காப்பு கார­ண­மாக சென்று தங்­கு­வது வழக்கம். அன்­றைய தினம் தங்­கி­யி­ருந்த வேளையில் தான் அந்த அசம்­பா­விதம் நடந்­தது.

ஹோட்­ட­லுக்கு வெளி­யே­யி­ருந்த யாரோ அவளின் கண­வரின் பெயரை குறிப்­பிட்டு அழைத்­தி­ருக்­கி­றார்கள். தனது கண­வரை யாரோ அழைக்­கின்­றார்கள் என்று எண்­ணிக்­கொண்டு கதவை அந்தப் பெண் திறந்தாள். திடீ­ரென மூன்று சீரு­டைக்­கா­ரர்கள் ஆயு­த­தா­ரி­க­ளாக உள் நுழைந்­தார்கள். அதைக்­கண்டு அந்­தப்பெண் நிலை­கு­லைந்து போனாள்.

அவர்கள் அவ­ளிடம் , "உனது கண­வரை நீ கூப்­பி­ட­வேண்டாம். நீ தான் எங்­க­ளுக்கு வேண்­டு­மென்று வெறித்­த­னத்­தோடு கூறி­னார்கள். அப்­பெண்ணோ பீதி கார­ண­மாக தனது கண­வரை பீறிட்டு கத்தி அழைத்தாள். கணவன் பத­றிப்போய் ஓடி­வந்து ஆயு­த­தா­ரி­க­ளிடம் “நீங்கள் யார்?" என்று வினா­வினான். அதை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாத அந்த காமு­கர்கள் அவளின் கண­வரை அரு­கி­லுள்ள மல­சல கூடத்­திற்குள் தள்ளி பூட்­டி­னார்கள். அவனோ தனது மனை­விக்கும் பிள்­ளை­க­ளுக்கும் ஏதோ நடக்­கப்­போ­கி­றது என எண்ணி "கதவை திற­வுங்கள் திற­வுங்கள்" என கத்­தியும் எதுவும் பல­ன­ளிக்­க­வில்லை. அந்த காமு­கர்கள் எல்­லாக்­க­த­வு­க­ளையும் பூட்­டி­விட்டு அந்த அப்­பா­விப்­பெண்ணை ஒருவர் மாறி ஒருவர் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­னார்கள். இறு­தியில், அவர்கள் போகும்­போது அவ­ளிடம் இன்­னு­மொரு பெண்ணின் பெயரை சொல்லி அவளின் வீடு எங்­கே­யென்று கேட்­டி­ருக்­கின்­றார்கள்.

(ஆதாரம்- பிர­ஜைகள் குழு கடிதம்)

அந்த இன்­னு­மொரு பெண் கொடுத்த வாக்கு­மூலம் இவ்­வாறு இருந்­தது. அக­தி­க­ளாக எங்கள் குடும்பம் இந்த ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்தோம். எனக்கு வயது இரு­பத்­தைந்து. புளி­யங்­கு­ள­வா­சி­க­ளா­கிய நாங்கள் அடைக்­கலம் கோரி கடந்த நான்கு மாதங்­க­ளாக ஹோட்­டலில் வாழ்ந்து வரு­கிறோம். அன்­றைய தினம் இரவு (21.12.1986) நாங்கள் உறக்­கத்­தி­லி­ருந்த சமயம் சிலர் எனது அறைக்­க­தவை தட்­டி­னார்கள். நான் எழும்­ப­வே­யில்லை. 15நிமிடம் கழிந்த பின்னர் எனது பெயரை சொல்லி அழைத்­தார்கள் நான் பயம் கார­ண­மாக கதவை திறக்­க­வே­யில்லை.

கதவு உடைக்­கப்­படும் சத்தம் கேட்­டது. ஜன்னல் சுக்கு நூறா­கி­யது. அவர்கள் எப்­ப­டியும் உள்ளே வர முயற்­சிப்­பதை உணர்ந்த நான் என்­னுடன் இருந்த தம்­பி­யிடம் சொன்னேன் அடுத்த அறையில் இருக்கும் இஸ்­மயில் என்­ப­வரை கூப்­பி­டும்­படி எனது தம்­பியோ வாப்பா வாப்பா என அவரை சத்­த­மிட்டு அழைத்தான். வாப்பா வரும் சத்தம் கேட்­டதோ என்­னவோ வெளியில் நின்­ற­வர்கள் ஓடும் சத்தம் கேட்­டது. சில நிமி­டங்­களின் பின் வாப்பா கதவை திறக்­கும்­படி கூறினார். நாங்கள் கதவை திறந்தோம். அதன் பின்பு தான் எங்­க­ளுக்கு தெரியும் அடுத்த அறை­யி­லி­ருந்த அகதி ஒரு­வரின் மனைவி கொடூ­ர­மாக நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றார் என்று. அடுத்த அறையில் கொடுமை புரிந்த சீரு­டைக்­காரர்கள் தான் எங்கள் அறையை தட்­டி­னார்கள் என்­பது அவர்கள் போன­பின்பு தான் தெரி­ய­வந்­தது.

(ஆதாரம் -21.12.1986 பிர­ஜைகள் குழு கடிதம்)

இது ஒரு அம்­மாவின் கதை 1987 ஆம் ஆண்டு ஆனி­மாதம் 14 ஆம் திகதி (14.05.1987) நிலா­வெளி அகதி முகாமில் வாழ்ந்­து­கொண்­டி­ருந்தோம். எங்கு பார்த்­தாலும் எந்­நே­ரத்­திலும் நட­மாட முடி­யாத கொடு­மைகள் நடந்த காலம். ஊரை­விட்டு ஓடி­வந்து மக்­க­ளோடு மக்­க­ளாக ஏ. பி.சி.நிலா­வெளி அகதி முகா­மி­லி­ருந்­தோம். அன்று காலை 10.30 மணி­யி­ருக்கும் சீரு­டைக்­கா­ரர்கள் மூவர் ஆயுதபாணிகளாக முகாமுக்குள் நுழைந்தார்கள். எனது மகன் லிங்க ரட்ணம் நாகேந்திரன் நித்திரையிட்டு எழும்பாமல் தூங்கிக்கொண்டிருந்தார். எனது மகனுக்கு அருகில் சென்ற சீருடைக்காரர்கள் மகனை காலால் உதைத்து எழுப்பி “நீதானே கண்ணி வெடி வைக்க உதவியவன்”எனக்கூறி ஈவிரக்கமின்றி அடித்தார்கள், உதைத்தார்கள் என்பிள்ளை கதறியழுத காட்சியை கண்டு என்னால் பொறுக்கமுடியவில்லை.

என் பிள்ளை கெஞ்சினான் நான் ஒவ்வொரு நாளும் வந்து கேம்ப்பில் கையெழுத்துப் போடுகிறேன் எனக்கதறினான். அவர்கள் எதையுமே கேட்கவில்லை. அடித்து உதைத்துக் கொண்டு போனார்கள் சிறிது நேரத்தின் பின் வெடிச்சத்தமொன்று கேட்டது. வீதியோரத்தில் எனது மகனின் பிணம் சூட்டுக் காயங்களுடன் கிடப்பதை கண்டேன் (15.5.1987 லி.மேரிசிசிலியா பிரஜைகள் குழு கடிதம்)

இதே தினம் இதே முகா­மி­லி­ருந்த இன்னும் பலர் அழைத்து செல்­லப்­பட்­டார்கள் என்று முறைப்­பாட்­டா­ளர்­களின் கடி­தங்கள் தெரி­விக்­கின்­றன.

திருமலை நவம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல