ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்ஃ­பு­ளு­வென்சா! கர்ப்­பிணித் தாய்­மார்கள் அவ­தானம்!

இன்ஃ­பு­ளு­வென்சா (Influenza) எனப்­ப­டு­வது ஃபுளூ எனப் பொது­வாக அழைக் ­கப்­படும் பற­வை­க­ளிலும், பாலூட்­டி­க­ளிலும் காணப்­படும் ஒரு ­வ­கைத்­தொற்று நோயாகும். ஆர்த் ­தோ­மிக் ­சோ­வி­ரிடே குடும்பத்தைச் சேர்ந்த

ஆர்.என்.ஏ தீ நுண்மத்­தினால் (virus) உண்­டாவது. இந்நோய் தற்­போது இலங்­கையில் மிகவும் வேக­மாக பரவி வரு­கின்­றது. குறிப்­பாக கர்ப்­பிணித்தாய்­மார் கள், சிறு­வர்கள், முதி­ய­வர்கள், இளம் வய­தினர் என அனை­வ­ரையும் தாக்கும் இந்நோய் மர­ணத்தை விளை­விக்­கக்­கூ­டி­யது என சுகா­தார கல்விப்பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.



பொது­வா­கவே கர்ப்­பி­ணி­களை அதிகம் தாக் கும் என அச்­ச­ம­டை­யக்­கூ­டிய இந் நோய், கர்ப்­ப­கா­லத்தில் அதிகம் பாதிப்­புக்­க­ளையும் சிக்­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்­த­லா­மென கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதா­வது நீரி­ழிவு, இத­யநோய், ஆஸ்­துமா, இரத்­தச்­சோகை போன்ற நோய்­க­ளை­யு­டைய கர்ப்­பி­ணி­க­ளுக்கே இத்­தாக்கம் அதி­க­மாக ஏற்­ப­டு­கின்­றது எனவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஒரு கர்ப்­பி­ணியை இன்ஃ­பு­ளு­வென்சா தாக்கும் பட்­சத்தில் தாக்­கப்­பட்­ட­வ­ருக்கு இரு­ம­லுடன் கூடிய வழ­மைக்கு மாறான காய்ச்சல், தொண்­டை­வலி, மூக்­கு­வ­டிதல், தலை­யிடி, உடல்­வலி, அல்­லது தசைநார் வலி போன்ற அறி­கு­றிகள் தென்­ப­டலாம். ஆகவே, இவ்­வா­றான அறி­கு­றிகள் தொடர்ந்து தெரியும் பட்­சத்தில் உட­ன­டி­யாக சிறந்த மருத்­து­வரை அணு­குதல் அவ­சியம்.

மேலும் இன்ஃ­பு­ளு­வென்சா தொற்று ஏற்­பட்ட ஒரு கர்ப்­பிணித் தாய்க்கு கருச்­சி­தைவு, குறைப்­பி­ர­சவம், சிசுக்­களில் சுவா­சப்­பி­ரச்­சினை போன்­ற­வையும் ஏற்­ப­டலாம்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஒரு கர்ப்­பிணிப் பெண் உட­ன­டி­யாகத் தகுதி வாய்ந்த வைத்­தி­யரை அணுகி வைத்­திய ஆலோ­சனை மற்றும் பரி­சோ­த­னையை பெற்­றுக்­கொள்­ளுதல் அவ­சி­ய­மாகும். இன்ஃ­பு­ளு­வென்சா ஏற்­பட்­டுள்­ள­தாக மருத்­துவ பரி­சோ­த­னையில் கண்­டு­பி­டிக்­கப்­படின் கட்­டா­ய­மாக அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட வேண்டும்.

நோய் தீவி­ர­ம­டையும் பட்­சத்­திலோ அல்­லது சிக்­கல்கள் ஏற்­படும் பட்­சத்­திலோ தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டுவார்.

கர்ப்­ப­கா­லத்தில் ஒரு கர்ப்­பி­ணி க்கு பெரும்­பாலும் பாது­காப்­பான மற்றும் சத்­துக்கள் நிறைந்த மாத்­ தி­ரை­களே வழங்­கப்­ப­டு­கின் ­றன. ஆகவே, கர்ப்­ப­கா­லத்தில் இன்ஃ­பு­ளு­வென்சா ஏற்­பட் டுள்­ளது என உறு­தி­ செய்­யப் ­பட்டால் தகுந்த சிகிச்­சை­க­ ளுடன் வைத்­தி­யரின் ஆலோ­ச­னையின் பின், மருந்­துகள் எடுத்­துக்­கொள்­வது சிறந்­தது. வைத்­திய ஆலோ­ச­னை­யின்றி எடுத்­துக்­கொள்ளும் மருந்து­க ளால் கரு­வி­லுள்ள குழந்­தை க்கு ஏதேனும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். ஆகவே, வைத்­திய அறி­வு­ரையின் கீழ் 24 மணித்­தி­யா­லமும் போதி­ய­ளவு மருந்­துகள் கையி­ருப்பில் இருத்தல் அவ­சியம் எனவும் சுகா­தா­ரப்­ பி­ரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

கர்ப்­பி­ணித்தாய் இன்ஃ­பு­ளு­வென்சா தொற்­று­டை­ய­வ­ரென்றால் அவ­ரு­டைய குடும்­பத்­தினர் அவ­ருக்­கான தனி­யா­ன­தொரு பகு­தி­யொன்றை ஒதுக்கி கொடுக்க வேண்டும் (for infected or suspected mothers) எனவும், சமத்­து­வ­மாக வழக்­க­மான முறையில் கவ­னிக்­கப்­ப­ட ­வேண்­டு­மெ­ன­ சுகா­தார கல்விப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

பிர­ச­வத்தின் போது, ஒரு சாதா­ரண இன்ஃ­புளு­ெவன்சா தொற்று அற்ற தாய்க்கு இன்ஃ­பு­ளு­வென்சா தொற்­று­டை­யவர் பிர­சவத்தை கையாள்­வதை தவிர்க்க வேண்டும். மேலும் தாய்க்கு இன்ஃ ­பு­ளு­வென்சா நோய்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­படும் பட்­சத்தில் தாயையும் சேயையும் வேறாக்க வேண்டாம் எனவும் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

காரணம், தாயா­னவர் தனக்கு பிறந்­தி­ருக்கும் புதிய குழந்­தையை பத்து மாதம் சுமந்து ஆசை யாய் குழந்­தையின் வரு­கையை எண்ணி மகிழ்ந்­தி­ருப்பாள். திடீ­ரெனப் பிறந்த குழந்­தையை தாயி­ட­மி­ருந்து பிரிக்கும் பட்­சத்தில் தாய் உள ரீதி­யாக பாதிக்­கப்­ப­டலாம் எனவும் தாய் தாரா­ள­மாக தாய்ப்

பாலூட்­டலாம் எனவும் சுகா­தா­ரப்­பி­ரி­வினர் தெரி­ விக்­கின்­றனர்.

ஆனால், பாலூட்­டலில் ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மாக இருந்தால் அல்­லது தாய்க்கு இய­ல­வில்லை என்றால் தாயின் பாலை பீய்ச்சி எடுத்து கரண்­டி­யாலோ அல்­லது குழாயின் மூலமோ பருக்­கலாம். இதனை EBM (express Breast Milk) முறை என்று கூறுவர். ஆனால், தாய் தற்­கா­லி­க­மாக முகத்­திற்கு கவசம் அணிந்து (Mask) குழந்­தைக்கு பாலூட்­டுதல் அவ­சி­ய­மாகும். மேலும் பாலூட்­டு­வ­தற்கு முன்னும் பின்னும் கைகளை சவர்க்­காரம் இட்டு நன்கு கழு­வுதல் அவ­சி­ய­மாகும். தாய்க்கு தேவை­யெனில் வைரஸ் எதிர்ப்பு (Antiviral) மருந்து வழங்­கலாம் எனவும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இவ்­வாறு வைரஸ் எதிர்ப்பு மருந்தை பாவிப்­பதன் மூலம் குழந்­தையை பாது­காக்­கலாம் எனவும் தெரி­விக்­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட தாய்­மாரின் குழந்­தை­க­ளுக்கு இன்ஃ­பு­ளு­வென்சா அறி­கு­றிகள் ஏற்­ப­டு­கின்­றதா? என்று உன்­னிப்­பாக அவ­தா­னிக்க வேண்டும். உதா­ர­ண­மாக குழந்­தைக்கு காய்ச்சல், வேக­மாக மூச்­செ­டுத்தல், நீல் வாதை, நீண்ட நேரம் தூங்­குதல், சோம்­ப­லாக இருத்தல், பால் குடிக்க மறுத்தல், உடல் வறட்­சி­யாக இருத்தல் போன்ற அறி­கு­றிகள் தெரி­கின்­றதா என அவ­தா­னிக்க வேண்டும் என எச்சரிப்பதுடன் இன்ஃபுளுவென்சா நோய்த்

தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் முழு மையாக குணமடைந்த பின்னரே வைத்தியசாலை யிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இன்ஃ­பு­ளு­வென்சா தொற்­றினால் பாதிக்­கப்­ப ட்டு அவர் பாதி­யி­லேயே சிகிச்­சையை முடித்­துக் ­கொண்டு வைத்­தி­ய­சா­லையை விட்டு வெளி­யே­று­வா­ராக இருந்தால் அவ­ரி­ட­மி­ருந்து பல­ருக்கு இன்ஃ­பு­ளு­வென்சா தொற்று பர­வக்­கூடும். அதனால்

முழு­மை ­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொண்டு வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­று­வது அவருக்கும்

அவரை சூழவுள்ள அனைவருக்கும் பாதுகாப்பானது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல