ஞாயிறு, 7 ஜூன், 2015

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு ஒரு வர­லாற்று தொடர்­க­தையா...?

முஸ்­லிம்கள் மீது அடா­வ­டித்­தனம் கார­ண­மாக உலகில் மதிப்­பி­ழந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றிக் கொண்­டது. மீண்டும் மியன்மார் எனும் பெயரும் மாற்றம் பெறுமோ?என்ற சந்­தேகம் எழு­கி­றது

உல­கி­லுள்ள சிறு­பான்மைச் சமூ­கங்­களில் அதி உச்­சக்­கட்ட துன்­பங்­களை அனு­ப­விக்கும் சிறு­பான்மை சமூ­க­மென்றால் மியன்மார் முஸ்­லிம்­கள்தான்



மியன்­மாரில் பெரும்­பான்­மை­யி­ன­ராக பௌத்த மக்கள் வாழ்­கின்­றனர். மொத்த சனத்­தொ­கையில் 6 சதவீதம் முதல் 10சதவீதம் வரை முஸ்­லிம்கள் 1000 ஆண்­டு­க­ளுக்கு மேல் வாழ்ந்து வரு­கின்­றனர். முஸ்­லிம்கள் குறித்து துல்­லி­ய­மான மதிப்­பீ­டுகள் இல்லை.

மியன்­மாரில் 3 சதவீத­மான முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். தன்­ன­செரில் மாகா­ணத்தில் வாழும் முஸ்­லிம்கள் பஷுஷ் என அழைக்­கப்­ப­டு­கி­றார்கள். இவர்கள் சீன மற்றும் தாய்­லாந்து பூர்வீகத்தை கொண்­டுள்­ளனர். மியன்­மாரின் தெற்கில் வாழும் முஸ்­லிம்கள் பான்தாய் என அழைக்­கப்­ப­டு­கி­றார்கள். இவர்கள் பர்­மிய பூர்­வீ­கத்தை கொண்­டுள்­ளனர். இவ்­விரு வித­மான முஸ்­லிம்கள் குடி­யு­ரி­மை­யுடன் வாழ்­கின்­றனர். இவர்­களை மியன்மார் தனது நாட்டுப் பிர­ஜை­க­ளாக கரு­து­கின்­றது. மூன்­றா­வது வித­மான முஸ்­லிம்கள் அரக்கான் மாநி­லத்தில் வாழ்­கின்­றனர். இவர்­கள்தான் ரோஹிங்யா முஸ்­லிம்கள் என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். இவர்கள் இந்­திய பூர்­வீ­கத்தை கொண்­டுள்­ளனர். இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஒன்­றாக இருந்­த­போது அரக்­கா­னுக்கு குடி­யே­றி­ய­வர்கள்.

அரக்­கானில் வாழும் ரோஹிங்யா முஸ்­லிம்­களே இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் கிட்­டத்­தட்ட எட்டு இலட்­சத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள்.

ரோஹிங்யா முஸ்­லிம்கள் வாழும் அரக்கான் மாநிலம் ஒரு காலத்தில் இஸ்­லா­மிய சுதந்­திர குடி­ய­ர­சாக செயற்­பட்டு வந்­துள்­ளது. 1784 ஆம் ஆண்டில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் வாழ்ந்­து­வந்த அரக்கான் பகுதி படை­யெ­டுப்பு கார­ண­மாக பர்­மா­வோடு இணைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்டு அந்த அடிப்­ப­டையில் பர்­மாவின் ஒரு பகு­தி­யாக ரோஹிங்யா இன மக்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். 1824 ஆம் ஆண்டு முதல் ஆங்­கி­லே­யர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் இருந்த பர்மா, 1948 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 4 ஆம் திகதி சுதந்­தி­ர­ம­டைந்­தது. முத­லா­வது பிர­தமர் யூ நூ ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் பர்­மாவின் குடி­மக்கள், இந்த மண்ணில் அனைத்து இனங்­க­ளுக்கும் உள்ள உரி­மைகள் அவர்­க­ளுக்கும் உண்டு என 1951 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் அறி­விப்பு செய்தார். ஆனால் இன்று நிலைமை இவ்­வா­றில்லை. ரோஹிங்யா முஸ்­லிம்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்டு கேவ­ல­மான நிலை­மைக்கு ஆளாக்­கி­யுள்­ளார்கள் மியன்மார் அர­சாங்­கத்­தினர். கொடு­மை­யிலும் கொடுமை!

அரக்கான் பகுதி பர்­மா­வுடன் இணைக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து இன்­று­வரை ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது தீவிர பௌத்த மதப் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டது. பௌத்­தத்­திற்கு மதம் மாற வேண்டும் அல்­லது நாட்­டி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும் என அந்­நாட்டின் சர்­வா­தி­கார இரா­ணு­வத்­தினர் பய­மு­றுத்­தினர்.

ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் ஏன் இந்த நிலைமை வர­வேண்டும் என்­பதை அல­சுவோம். 16 ஆம் நூற்­றாண்டில் ஷாஜஹான் மன்­னனின் மகன் ஷா சுஜா எனும் இள­வ­ரசன் முறை­யில்­லாது அர­ச­ராக வர முயன்றான். முயற்சி தோல்­வி­ய­டைந்­ததால் உயி­ருக்கு அஞ்சி, அரக்­கானில் ஆட்சி செய்த சண்ட துத்­தம்மா எனும் மன்­ன­னிடம் அடைக்­கலம் புகுந்தான். 1660களில் அவ­னுக்கு அடைக்­கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனை­வி­யாக்கிக் கொள்ள ஆசைப்­பட்டு பெண் கேட்கப் போனான். ஆனால் இதனை சம்­ம­திக்க மறுத்­து­விட்டான் ஷா சுஜா. இதனால் கோப­முற்ற மன்னன் சண்ட துத்­தம்மா அனைத்து முக­லா­யர்­க­ளையும் வெட்டிக் கொல்­லும்­படி உத்­த­ர­விட்டான். அதன்­படி அனை­வரும் கொல்­லப்­பட்­டனர். இதனை கேள்­விப்­பட்ட முக­லாய சாம்­ராஜ்­யத்­தினர் சண்ட துத்­தம்­மா­விடம் போர் தொடுத்­தனர். இதனால் அரக்கான் மன்­னனின் கட்­டுப்­பாட்டில் இருந்த சித்­தாங்கொங்க் பகு­தியை முக­லா­யர்­க­ளிடம் இழக்க நேரிட்­டது. இன்றும் சித்­தாங்கொங்க் பங்­க­ளாதேஷ் நாட்டின் ஒரு பகு­தி­யா­கவே இருக்­கி­றது. இன்றும் சித்­தாங்­கொங்க்கில் வாழும் பெரும்­ப­கு­தி­யினர் பர்­மிய மொழி பேசும் பௌத்­தர்­க­ளா­கவே இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

சுஜாவின் மகள் கிடைக்­கா­த­தி­னாலும் சித்­தாங்கொங்க் பகு­தியை பறி­கொ­டுத்­த­தி­னாலும் ஏற்­பட்ட அவ­மா­னத்­தினால் மன்னர் சண்ட துத்­தம்மா பழி­வாங்கும் முக­மாக வர­லாறை தவ­றாக எழு­தினான். ரோஹிங்யா முஸ்­லிம்கள் மிகத் தாழ்த்­தப்­பட்ட சாதி­யென்றும் பௌத்­தத்தின் தூய்­மைக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர்கள் என்றும் மியன்­மாரை சூறை­யா­டு­கின்­ற­வர்கள் என்றும் உள்ளூர் மக்­களை ஏமாற்­று­கின்­ற­வர்கள் என்றும் குறிப்­பிட்டான். இந்த விட­யங்கள் மியன்­மாரின் தேசிய வர­லாற்று கையேட்டில் காணப்­ப­டு­கி­றது.

1660 களில் இருந்து இன்­று­வரை பௌத்த மக்கள் மன்னன் சண்ட துத்­தம்­மாவின் பொய்ச் செய்­தி­களை கேட்டு ரோஹிங்யா முஸ்­லிம்­களை கொடு­மைப்­ப­டுத்தி வரு­கின்­றனர். அன்று தொடக்கம் இன்­று­வரை திட்­ட­மிட்டு இனச்­சுத்­தி­க­ரிப்பில் மியன்மார் பௌத்­தர்கள் ஈவி­ரக்­க­மின்றி ஈடு­ப­டு­கின்­றனர். 1871, 1911, 1990, 1996, 2014, இன்றும் பெரிய அளவில் அரச, இரா­ணுவ ஆத­ரவில் மியன்மார் பௌத்­தர்கள் பௌத்­தத்­திற்கு அப்­பாற்­பட்ட விட­யங்­களில் கொடூ­ர­மாக ஈடு­ப­டு­கின்­றனர். புத்த பெருமான் இன்­றி­ருந்தால் கண்ணீர் வடிப்பார். அந்­த­ள­விற்கு கொடூ­ர­மான முறையில் இனச்­சுத்­தி­க­ரிப்பு அரங்­கே­று­கி­றது. இது­வரை இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள். அயல்­நா­டு­களில் தஞ்சம் புகுந்­தி­ருக்­கி­றார்கள். தப்­பி­யோ­டும்­போது பலர் கடலில் வீழ்ந்து இறந்­தி­ருக்­கி­றார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் எரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. பாலியல் வல்­லு­றவு, பள்­ளி­வா­சல்­களை அகற்­றுதல், சொத்­துக்­களை சூறை­யா­டுதல் தொடர்ந்­த­வண்ணம் உள்­ளன. இவற்­றை­யெல்லாம் பார்த்­துக்­கொண்டு அமை­தி­யாக இருக்­கிறார் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரிசு பெற்ற ஜன­நா­யக போரா­ளி­யென மேற்கு நாடு­களால் புக­ழப்­பட்ட ஆன்சாங்க் சூகி . இவர் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரிசு பெறு­வ­தற்கு தகு­தி­யா­ன­வரா என உலகம் ஆச்­ச­ரி­ய­மாக கரு­து­கி­றது.

பௌத்த மக்­க­ளுக்கு மனி­தா­பி­மா­னத்தை எடுத்­துச்­சொல்ல வேண்­டிய அசின் விராது தேரர் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு தலைமை தாங்­கு­கிறார். வேலியே பயிரை மேய்­கி­றது. ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அன்று தொடக்கம் இன்­று­வரை திட்­ட­மிட்ட படு­கொலை, பாலியல் வல்­லு­றவு, சொத்­துக்கள் சூறை­யாடல், சமய விட­யங்­களில் இடையூறு, பல அக்­கி­ர­மங்கள் அரங்­கே­றி­யதால் உலகில் பர்­மாவால் பௌத்த மதத்­திற்கு இழுக்கு ஏற்­பட்­டது. உலகின் உயர்­பீட பௌத்த தேரர்­களின் ஆலோ­ச­னைக்­க­மைய பர்­மாவின் பெயரை 1989 இல் மியன்மார் என மாற்­றிக்­கொண்­டனர். குற்றம் செய்­த­வர்கள், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­வர்கள் தங்­க­ளது பெயரை மாற்றி நாட்டில் வலம் வரு­வார்கள். அதே­போன்று ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அடா­வ­டித்­தனம் புரிந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றி உலகில் வலம் வரு­கி­றது. தொடர்ந்தும் இனச்­சுத்­தி­க­ரிப்பு அரங்­கே­று­வதால் மியன்­மாரின் பெயரும் மாற்­ற­ம­டையும் நிலைமை தோன்­று­கி­றது.

அமெ­ரிக்­காவின் ஜனா­தி­பதி ஒபாமா மியன்மார் நாட்­டிற்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்டார். சர்­வ­தே­ச­ளவில் மக்கள் எதிர்­பார்த்த விடயம் என்­ன­வெனில் மனித உரிமை மீறல்கள், ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லைகள் பற்றி அர­சுடன் கதைத்து அழுத்தம் கொடுப்பார் என்­பதே. ஆனால் பராக் ஒபா­மாவோ மண்ணை வாரி­விட்டார். மியன்­மாரில் உள்ள இயற்கை வளங்­க­ளுக்­காக வரிந்­து­கட்டும் சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் போட்­டி­யாக மூன்றாம் சக்­தி­யா­கவே ஒபாமா அங்கு சென்றார்.

மியன்­மாரில் என்ன நடக்­கி­றது என்­பது உலகம் அறிந்த விடயம். அமெ­ரிக்­காவும் ஐரோப்­பிய நாடு­களும் ஏன் அமைதி காக்­கின்­றன? பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் முஸ்­லிம்கள் என்­ப­த­னா­லேயா? சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, ஆசிய மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் ஆகி­யன ரோஹிங்யா முஸ்­லிம்­களின் பாதிப்­புகள் பற்றி உருப்­ப­டி­யான விட­யங்­களில் ஈடு­ப­டாமல் இருப்­பது ஏன்?

உலகில் 65 முஸ்லிம் பெரும்­பான்மை நாடு­க­ளையும் 160 கோடி மக்­க­ளையும் கொண்ட இஸ்­லா­மிய உலகு மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்கள் பற்றி இது­வரை உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கைகள் எடுத்­த­தாகத் தெரி­ய­வில்லை. அனைத்து 65 நாடு­களும் ஒன்­று­சேர்ந்து ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீண்டும் குடி­யு­ரிமை பெற்று மியன்­மாரில் நிம்­ம­தி­யாக சுய­ம­ரி­யா­தை­யுடன் தங்­க­ளது வாழ்க்­கையை வழி­ச­மைக்க உத­வ­வேண்டும் என்­பதே உலக முஸ்­லிம்­களின் எதிர்பார்ப்பாகும். அல்லாஹ் அருள் செய்வானாக! ஆமீன்!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல