மலையக நகரங்களில் ஏதாவது ஓரிடத்தில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அவ்விடத்தில் நிச்சயம் ஒரு சாராய தவறணை இருக்கும். அல்லது ஒரு தொழிற்சங்க காரியாலயம் இருக்கும். சாராயத் தவறணை, தொழிற்சங்க காரியாலயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இவை இரண்டுமே தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவை என்றொரு மயக்கம் பரவலாகவே உள்ளது.
இவை இரண்டையும் ஸ்தாபிப்பதில் அரசியல்வாதிகளே காரணமாக இருந்திருப்பார்கள். இவை இரண்டின் மூலமாகவும் அரசியல் வாதிகளுக்கு பெரும் இலாபம் கிடைக் கின்றது.
இன்று மலையக அரசியல்வாதிகள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏனைய கொடுப்பனவுகள் குறித்தும் அவர்களுக்கான மதிப்பு, மரியாதை என்பன முறையாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் மேடைதோறும் முழங்குகின்றார்கள். ஆனால், இதே தலைவர்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சங்கங்களில் காணப்படும் நிலை என்ன?
ஒரு தோட்டத் தொழிலாளியின் சம்பளத்தை அவர்கள் சார்பில் செய்யப்பட்ட ஒப்பந்தம் முடிவு செய்கிறது. அவனுக்கு வழங்கப்பட வேண்டிய சேமலாப நிதி, நம்பிக்கை நிதி, சேவைக் காலப்பணம் என்பன குறித்து சட்டம் வரையறுக்கின்றது. ஆனால், ஒரு தொழிற்சங்க ஊழியனின் கொடுப்பனவுகள் அனைத்துமே அத் தொழிற்சங்க தலைவனின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏதுவாகவே அமைகின்றன.
ஒரு தொழிற்சங்க ஊழியனுக்கு மதிப்பு வழங்கப்பட வேண்டுமா? மரியாதை கொடுக்கப்பட வேண்டுமா? என்று சங்கத் தலைமைகளே முடிவு செய்கின்றன.
ஒரு தொழிற்சங்கத்தின் ஊழியனாக கடமையாற்ற அவனுக்கு பல தகுதிகள் தேவைப்படுகின்றன. அவனுடைய ஆங்கில அறிவு அவனுக்கு தோட்ட அதிகாரிகளுடன் பேசவும், கடிதங்களை எழுதும் ஆற்றலையும் தருகின்றன. அவன் சிங்கள அறிவைக் கொண்டு தான் உதவி தொழில் ஆணையாளர் தொழில் நியாயச் சபை ஆவணங்களை வாசித்து அவற்றை புரிந்து கொண்டு தொழிலாளிக்கு தமிழில் விளக்குகிறான். தொழில் சட்டங்கள் குறித்து தெளிவைக் கொண்டுதான் அவன் தொழில் நியாயச் சபை மற்றும் தொழில் நஷ்ட ஈட்டு சபைகளில் வாதம் செய்து தொழிலாளிகளுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்கிறான்.
ஒரு தோட்டத் தொழிலாளியின் சம்பளத்திலிருந்து மாதா மாதம் 150 ரூபாவை அவன் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கம் பெறுகிறது. இப்படி பல தொழிலாளர்களிடமிருந்தும் பல தோட்டங்களிலிருந்தும் சந்தா பணம் போய் சங்கத்தைச் சேரும் போது அது பல இலட்சங்களாகவோ சில கோடிகளாகவோ மாற்றுருவம் அடைகிறது. இத்தொகைக்கு என்ன தான் நடக்கிறது?
தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்கும் அரசியல்வாதிகளும் அவர்களை சூழ உள்ளபடி ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் குட்டி அரசியல்வாதிகளும் இந்த தொகையை கையாடல் செய்து விடுவார்கள். அரசியல் வாதிகளுக்கு பணத்திலா குறைவு? அவர்களுக்குத்தான் சட்ட ரீதியாகவும் அதனை மீறியும் கொட்டோ கொட்டென்று காசு, பணம் என்று கொட்டுகிறதே என்கிறீர்களா? ஆசை யாரை விட்டது? ஊரான் வீட்டு நெய் என்றதும் என்னமாய்த்தான் இவர்களும் அள்ளுவார்கள்?
மலையகத்து தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்குபவர்களில் பெரும்பான்மையினர் நகரத்தைச் சேர்ந்த முதலாளிகளாவர். அதனால் தான் அவர்கள் தொழிற்சங்கங்களையும் தமக்கு பணத்தை சம்பாதித்து தரும் ஒரு வியாபார நிறுவனமாக செயற்படுத்துகிறார்கள் போலும். சம்பள அதிகரிப்பு குறித்து இவர்கள் அக்கறை கொள்வதன் காரணம் கூட அதன் வழியாக தமது ஆதாயமும் அதிகரிக்கும் என்பதால் தான்.
ஒரு தொழிற்சங்கத்தில் சேர்வதற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அப்படிவத்தில், எனது சங்கத்தின் மாதாந்த சந்தாவாக ஒரு நாள் சம்பளத்தின் 1/3 பகுதியை எனது மாதாந்த சம்பளத்தில் பிடித்து சங்கத்திற்கு அனுப்பவும், என்றுள்ளது. இதன் அடிப்படையில்தான் தொழிற்சங்கங்கள் தற்போது 150 ரூபாவை சந்தாப்பணமாக பெறுகின்றன. தொழிலாளர் சம்பளம் 1000 ரூபாவாக உயர்ந்தால் ஒரு தொழிலாளியிடமிருந்து பெறப்படும் மாத சந்தா தொகை 333 ரூபா 33 சதமாக உயரும். தொழிற்சங்க முதலாளிகளின் வருமானம் 100 வீதத்திற்கு அதிகமாக உயருமல்லவா?
தொழிலாளரே தொழிற்சங்கங்களை நடத்த வேண்டும். அப்படி ஒரு காலம் வரும் வரை தொழிலாளரின் உழைப்பிற்கேற்ப வருமானமோ, தொழிலாளரின் தேவைக் கேற்ப வருமானமோ கிடைக்காது. அப்படி தொழிலாளரே நடத்தக் கூடிய தொழிற்சங் கங்கள் உருவாகும் போதுதான் அதில் கடமை புரியும் ஊழியரின் பணியும் மதிக்கப்படும். அத்துடன், அவர் மானத்துடன் வாழும் வழியும் உருவாகும்.
முத்து இரத்தினம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக