டாக்டர்.சுதா தீப், M.D., D.G.O., மகப்பேறு மருத்துவ நிபுணர்
குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். கருவில் குழந்தை தோன்றியப் பின், அந்த பெண்ணுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைபோல வேறு ஏதும் இல்லை என்றே சொல்ல முடியும். குழந்தை
வயிற்றில் இருக்கும் போது, அப்பெண் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிவை என்னென்ன என்கிற கேள்விகளுடன் தாஜ் மருத்துவமனையின் டொக்டர். சுதா தீப் அவர்களைச் சந்தித்தோம்.
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது மிகவும் குறைந்துக்கொண்டிருக்கிறதே, அதன் காரணம்?
பல காரணங்களை குறிப்பிடலாம். மருத்து வர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களும் இதற்கு காரணமாக இருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் தற்போது இணையதள வசதிகளை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் அதிக விழிப்புணர்வு பெருகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான், ஆனால் இணைய தளத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் துல்லியமானவை என்றோ, சரியானவை என்றோ, அனைவருக்கும் பொருந்தக்கூடியது என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே மருத்துவர்களிடம் அவர்கள் அதிக கேள்வி கேட்டு தங்களின் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவேண்டும்.
அதை தவிர்த்து மருத்துவர்கள் மீது கோபப்படக்கூடாது.. அதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் தாய், சேய் என இரண்டு உயிர் களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பல சிக்க லான முடிவுகளை பல தருணங்களில் எடுக்க நேரிடும். இதற்கு கர்ப்பிணிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். ஒரு சில விடயங்களில் சிசேரியன் செய்வதை தவிர்த்து வேறு வழி யிருக்காது. கர்ப்பிணிகளுக்கு பிரச்சினை இருக்க கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல் நாங்களும் செயல்படுகிறோம்.
சிலருக்கு சுகபிரசவம்தான் ஆகும் என கணிக்க முடியும், ஆனால் அவர்கள் அவசர அவசரமாக சிசேரியன் செய்வதற்கான காரணம் என்ன?
சிலர் எங்களுடைய குழந்தை நாங்கள் குறித்துள்ள நல்ல நேரத்தில் தான் பிறக்க வேண்டு மென்று எண்ணுவர், எனவே தங்களுக்கு என்று குழந்தை பிறக்க வேண்டுமென்று மருத்துவரிடம் கூறி அவர்களை கட்டாயப்படுத்தி சிசேரியன் செய்துகொள்வார்கள். சிலர் அவற்றுக்கு ஒப்புக்
கொள்வார்கள், நாங்கள் அவற்றுக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். முக்கியமாக சித்திரை மாதம், ஆடி மாதங்களில் இது போன்றவர்கள் அதிகமாக வருவார்கள், நாங்கள் அவர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தி, குழந்தையின் ஆரோக்கியம் குறித்து எடுத்துரைப்போம். சிலர் புரிந்துக் கொள்வார்கள், சிலர் தங்கள் எடுத்த முடிவிலிருந்து மாறாதிருப்பார்கள்.
"ப்ரீச் டெலிவரி" என்றால் என்ன?
ப்ரீச் என்றால் 'கால் மாறி'. பிரசவத்தின் போது முதலில் குழந்தையின் தலை தான் வெளியில் வரும், ப்ரீச் டெலிவரியில் குழந்தையில் இடுப்பு பகுதி தான் முதலில் வெளியில் வரும். இது போன்ற பிரசவத்தில் பிரச்சனைகள் அதிகமிருக்கும். ஆனால் நாங்கள் அதை சிக்கலில்லாமல் செய்வோம்.
சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டால் குழந்தையைப் பாதிக்கும் என்று மக்களிடையில் பரவலாக ஒரு கருத்துள்ளது, அதைப் பற்றி?
மரபணு முறையில் பார்த்தால் ஒரே ரத்தம் தான். எனவே அவர்கள் சொந்தத்துக்குள் மீண்டும் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளும் போது, ஒரே மரபணு தான் பரி மாற்றம் செய்யப்படுகிறது. நம்முடைய உடலில் Recessive Genes, Dominent Genes என இரண்டு வகையுண்டு. Recessive Genes நாம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் வெளிப்பட தெரியாது. நாம் தொடர்ந்து ஒரே மரபணு சார்ந்து திருமணம் செய்துக்கொண்டால் அது Dominent ஆக மாறி விடுகிறது. பல தலைமுறைகளாக சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது இது நோயாக மாறி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் தெரிகிறது.
கருவில் வளரும் குழந்தை நல்ல ஆரேக்கி யத்துடன் இருக்க பெண்கள் வீட்டில் வேலைகள் செய்ய வேண்டியது அவசியமா?
இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய உடல் நிலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய ஊட்டசத்துகள் மிக முக்கியம். அதேப்போல் மன நிலையில் மிக ஆரோக்கிய
மாக இருக்கவேண்டும். இதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட் டுப்பாட்டை அவசியம் கடை பிடிக்கவேண்டும்.
இன்று 30%க்கு மேற்பட்ட பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படு வதற்கு என்ன காரணம்?
குழந்தையின்மைக்கு இன்று பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது மனஅழுத்தம். இன்று பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை பார்க்கிறார்கள், இரவும் பகலும் கண்விழித்து படிக்கிறார்கள்.
எனவே, அவர்கள் திருமணம் செய்துக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது. மனஅழுத்தம் காரணமாக மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருக்கும். அதேபோல் ஆண்களுக்கும் மனஅழுத்தம், சரியான தூக்கமில்லாமல் வேலை பார்ப்பது இவையனைத்தும் ஆண்களில் விந்தணுவின் தரம் குறைத்துவிடும் இயல்புடையது. இதனாலும் குழந்தையின்மை ஏற்படும். இதை தவிர்த்து இன்றைய திகதியில் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாக அமைகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு என்ன?
சரியான உடற்பயிற்சி அதிக நேரம் உட்கார்ந்தே வேலைப்பார்க்க கூடாது. உணவும் வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டும், சரியான நேரத்தில் தூக்கம் இவை அனைத்தும் மிக முக்கியம். அதே சமயத்தில் குழந்தைப் பேற்றிற்கான தாம்பத்தியம் என்பது வேறு என்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தங்களின் மன அழுத்தத்தை குறைத்துக்கொண்டு மகிழ்ச்
சியான தருணத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளவேண்டும் எனில் தொடர்பு கொள்ளவேண்டிய அலை பேசி எண்: + 0091 9894242543.
- சந்திப்பு: பரத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக