பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இரு வகையான நீரிழிவு நோயை எதிர்கொள்ளக்கூடும். அதாவது அப்பெண் கர்ப்பந்தரிப்பதற்கு முன்பிருந்தே நீரிழிவு நோயாளியாக இருத்தல் அல்லது சாதாரண ஒரு பெண்ணாக இருப்பவர்க்கு கர்ப்ப காலத்தின்போது மட்டும் நீரிழிவு நோய் தோன்றி பிரசவத்தின் பின்னர் அது மறைந்து போதல்.
இவ்வாறு இரு வகையான நீரிழிவு நோய்கள் இருப்பதால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் என்பது ஆசிய நாட்டுப் பெண்களை பொறுத்தவரையில் இது ஒரு பொதுவான முக்கிய பிரச்சினையாக உள்ளது. கர்ப்பந்தரித்த 100 பெண்களை எடுத்தால் அதில் 10 பெண்கள் ஏதோ ஒரு வகையில் நீரிழிவு நோய் உடையவர்களாக இருக்கின்றனர். இந்த கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் தாய்க்கும் சிசுவிற்கும் பலவித பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதிலும் திடீர் சிசு மரணம் முக்கியமான விடயம். இவ்வாறு கர்ப்ப காலத்திலேற்படும் நீரிழிவு நோய் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் இது பற்றி மக்கள் அறிந்திருப்பது அவசியம். அப்போதுதான் இதனைக் கண்டறிவதிலிருந்து கட்டுப்படுத்துவது வரை பெண்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நிரந்தரமான நீரிழிவு நோயுடைய பெண்கள் எவ்வாறு கருத்தரிப்பிற்கு தயாராக வேண்டும்?
நிரந்தரமாக நீரிழிவு நோயுடைய பெண்கள் கருத்தரிப்பிற்கு முன்னர் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தி இன்சுலின் ஊசி மருந்துகளை பாவிக்கத் தொடங்க வேண்டும். பின்னர் குருதியில் சீனியின் அளவை உரிய அளவில் கட்டுப்பாட்டில் வைத்தவாறு போலிக் அசிட் (Folic Acid) விற்றமின் மாத்திரைகளை பாவிக்க ஆரம்பித்து கருக்கட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். அத்துடன் அப்பெண்ணுக்கு கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை என்பன அவற்றுக்குரிய மருத்துவ நிபுணர்கள் மூலம் மேற்கொண்டு அவற்றின் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயின் தாக்கத்தினால் கண் மற்றும் சிறுநீரகம் போன்றன ஆரோக்கியமற்றதாக இருப்பின் கருத்தரித்தலை தவிர்த்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கான காரணங்கள்
கர்ப்ப காலத்தில் 10%-15% பெண்களை இந்நோய் தாக்குகின்றது. கர்ப்ப காலத்தில் சரிவர இன்சுலின் சுரக்காததாலும் உடலிலுள்ள கலங்கள் இன்சுலின் சுரப்புக்கு ஒத்துழைக்காததாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுகின்றது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகளவு இன்சுலின் தேவைப்படுகின்றது. எனவே இன்சுலின் அளவு சரிவர சுரக்கப்படாது போகும் போது கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
பெரும்பாலும் இவ்வகையான நீரிழிவு நோய் கர்ப்ப காலத்தில் மட்டுமே ஏற்படுகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின்னர் அது மறைந்து விடும்.
ஆனால் சிலருக்கு பிரசவத்தின் பின்னரும் அவர்களது வாழ் நாளில் எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
அதனைத்தடுப்பதற்கு அவர்கள் வைத்திய ஆலோசனைப்படி போதுமான நடைப்பயிற்சி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் 4 அல்லது 5 மாதங்களின் மேல் தான் நீரிழிவு நோய் தாக்க அதிகம் வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் (OGTT) குளுக்கோஸ் குடித்து குறித்த நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை அறியும் பரிசோதனைகளை செய்து நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதா ? என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயின் தாக்கங்கள்
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயானது தாய்க்கும் சிசுவிற்கும் பலவித பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
அவையாவன,
1. சிசுவிற்கு ஏற்படக்கூடிய அங்கவீனக் குறைபாடுகள்
உ+ம்.
இதயத்திலேற்படும் கோளாறுகள் முள்ளந்தண்டின் குறைபாடுகள் மற்றும் மூளை முண்ணான் வளர்ச்சிக்குறைபாடு
2. கருத்தரித்த பெண்ணிற்கு ஏற்படக்கூடிய இயற்கையான கருக்கலையும் நிலை (miscarriage)
3. கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் ஏற்படக்கூடிய சிசு மரணங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருத்தல்.
4. கர்ப்ப காலத்தின் இறுதிப்பகுதியில் ஏற்படக்கூடிய திடீர் சிசு மரணங்கள்
5. சிசுவிற்கு ஏற்படக்கூடிய அதிகூடிய வளர்ச்சியால் சிசுவின் நிறை அதிகரிக்கும். இதனால் பிரசவத்தின் போது பலவித சிக்கல்கள் மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்டக்கூடிய காயங்கள் அதிகமாக இருக்கும் .இதனால் சிசேரியன் மூலமான பிரசவத்தின் தேவை அதிகரிக்கும்.
6. நீரிழிவு நோயுடைய பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் குருதி அமுக்கம் (Blood Pressure) அதிகரிக்க வாய்ப்புள்ளது.
7. சிசுவைச்சுற்றி கர்ப்பப்பையில் உள்ள திரவத்தின் அளவு அதிகரித்து பெரிய அளவு வயிற்றை தோற்றுவிக்கும். அத்துடன் குறைமாத பிரசவ வலி ஏற்பட வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.
8. பிரசவத்தின் பின்னர் சிசுக்களின் வெல்லத்தின் அளவு குறைவடைவதுடன் குழந்தைக்கு கண்கள் மஞ்சளாகும் நிலையும் ஏற்படும் (Jaundice)
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தற்காலிக நீரிழிவு நோயை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
கர்ப்ப காலத்தில் 5-6 மாதங்கள் முடிவடையும் போது குருதியில் வெல்லத்தின் அளவைப்பரிசோதிக்க வேண்டும். இதற்காக கர்ப்பிணிப் பெண்களை 12 மணித்தியாலங்கள் நீர் ஆகாரங்கள் உட்கொள்ளாது இருந்து குருதியில் வெல்லத்தின் அளவைப் பார்க்க வேண்டும் (Fasting blood Sugar) பின்னர். 75g குளுக்கோஸ் (Glucose) உட்கொண்டு 2 மணித்தியாலத்தில் குருதியில் வெல்லத்தின் அளவைப் பார்க்க வேண்டும்.
இதன்போது வெல்லத்தின் அளவு அதிகமாக இருப்பின் இந்நோய் உறுதிப்படுத்தப்படும். சிலவேளைகளில் இப்பரிசோதனையை நேரடியாக மேற்கொள்ளாது மதிய போசனத்தின் (LUNCH) 2 மணித்தியாலங்களின் பின் வெல்லத்தின் அளவைப் பரிசோதித்து குருதியில் வெல்லத்தின் அளவு அதிகமாக இருப்பின் அதன் பின்னர் மேற்குறிப்பிட்ட பரிசோதனையை மேற்கொண்டு இந்நோயை உறுதிப்படுத்தலாம்.
தற்காலிக நீரிழிவு நோய் கூடுதலாக எவ்வாறான பெண்களில் ஏற்படுகின்றது?
கடந்த கர்ப்ப காலங்களில் இவ்வாறு தற்காலிக நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களில் இது மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
* பெண்ணின் வயது 35ற்கு கூடுதலாக இருக்கும்போதும்
* உடற்பருமன் அதிகமான பெண்களிலும்
* நெருங்கிய குடும்ப உறவினர்களில் நீரிழிவு நோய் காணப்படும்போதும்
* கடந்த தடவை எடை கூடிய சிசுவைப் பெற்றவர்களில் இவ்வாறு தற்காலிக நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான பெண்கள் கண் மற்றும் சிறுநீரகங்கள் பரிசோதிக்கப்பட்டு ஆரோக்கிய நிலைகள் அறியப்படும்.
அத்துடன் ஒழுங்காக குருதி அமுக்கத்தை அளப்பதன் மூலம் இதில் ஏற்படும் அதிகரிப்புக்கள் கண்டறியப்படும். மேலும் தாய்க்கு சிசுவின் அசைவுகள் குறித்து விழிப்பாக இருக்க ஆலோசனைகள் வழங்கப்படும். இதன்மூலம் திடீர் சிசு மரணங்கள் தவிர்க்கப்படும்.
ஒழுங்கான குருதிப்பரிசோதனைகள் உணவுப்பழக்கங்கள் மற்றும் தகுந்த வைத்திய ஆலோசனைகள் மூலம் கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி வைத்தியரின் ஆலோசனைப்படி பிரசவங்களுக்கு ஒத்துழைப்பதன் மூலம் ஆரோக்கியமான சிசுவைப்பெற்றெடுக்கலாம். இதன் மூலம் தாயினதும் குழந்தையினதும் ஆரோக்கியங்கள் உறுதிப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக