"பிள்ளையை அரசாங்கத்திலேயே வைச்சு அவங்களே படிப்பிச்சு பாத்துக்கினமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்டினா சரியாம், இது எங்களுக்கும் கஷ்டமில்லாத வேலை தானே" என்றார் சிறுமியின் தந்தை.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
கடந்த முதலாம் திகதி கொடிகாமம் பாலாவி வடக்கு வாகையடியைச் சேர்ந்த மகேஸ்வரன் நிரஞ்சினி என்ற 15வயது சிறுமி ஆலயத்திற்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தையால் கொடிகாமம் பொலிஸில் இரவு 7.30 மணிக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, நிகழ்கால நிலைமைகளை உணர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக என். பண்டார த.ைலமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சிறுமியின் தாயும் தந்தையும் குடும்பப் பிரச்சினை காரணமாக நீண்டகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றமை தெரியவந்தது.
இந்நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகளான 15 வயதான மகள் மற்றும் 11 வயதான மகன் ஆகியோரை தந்தையே வளர்த்து வந்துள்ளார். தற்போது சிறுமியின் தாய் மன்னார் சிலாபம் மீன்வாடியில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கொடிகாமம் பொலிஸார் சிறுமி தனது தாயாரிடம் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இச் சிறுமி தொடர்பாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு இருக்கையில், மறுநாள் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு காணாமல் போன சிறுமி திருகோணமலையில் இளம் தம்பதிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் பரிசோதகர் ஜஸ்மின் காணி என்பவருக்கு தகவல் ஒன்று கிடைத்திருந்ததுடன், குறித்த தம்பதிகளால் சிறுமியின் தந்தைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்து. இதனையடுத்து, அச் சிறுமி திருகோணமலைப் பொலிஸாரின் உதவியுடன் சிறுமியின் தாயார் சென்று பாதுகாப்பாக மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்திருந்தார்.
அத்துடன், திருகோணமலைப் பொலிஸில் குறித்த சிறுமியை ஒப்படைத்த தம்பதியினர் இச் சிறுமி திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் இடமறியாது தனித்து நின்ற போது தாம் அழைத்து சென்றதாகவும் பின்னர் சிறுமியிடம் அவரது தந்தையின் தொலைபேசி இலக்கத்தை பெற்று அவருக்கு தொடர்பு கொண்டு இவ் விடயத்தை தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தனர். அச் சிறுமியும் இவ்வாறே தெரிவித்திருந்தார்.
இருந்த போதிலும் தம்பதிகளின் வாக்கு மூலத்திலும் சிறுமியின் பேச்சிலும் சந்தேகம் கொண்ட கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக சிறுமியிடம் உண்மைகளை கண்டறியுமுகமாக விசாரணையை மேற்கொண்டார்.
இவ் விசாரணையின் போதே பல அதிர்ச்சி தகவல்களையும் சம்பவத்தின் உண்மையையும் அச் சிறுமி தெரியப்படுத்தியிருந்தார்.
இதன் படி..
சிறுமியின் தாயும் தந்தையும் குடும்பச் சண்டை காரணமாக பிரிந்திருந்த நிலையில் இச்சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்துள்ளதுடன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தனது நண்பிகளிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை "நீ தற்கொலை செய்ய வேண்டாம் உனது அம்மாவிடம் செல்" என நண்பிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று காலை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தந்தை மகளை பார்த்து" நீ எங்கையாவது போய் தொலை என கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஏற்கனவே மனதளவில் விரக்தியுற்றிருந்த சிறுமி நண்பிகளின் ஆலோசனையின் பிரகாரம் தாயிடம் செல்லத் திட்டமிட்டு ஆலயத்திற்கு செல்வதாக தந்தையிடம் பொய் கூறிவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாள்.
வீட்டை விட்டு சென்ற சிறுமி மிருசுவில் பகுதியிலுள்ள தனது நண்பி ஒருவரது வீட்டில் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தாயிடம் செல்லும் சிந்தனையில் வவுனியா செல்லும் பேரூந்தில் ஏறியுள்ளாள்.
பேரூந்தில் சிறுமி இருந்த இருக்கைக்கு அருகில் இளைஞன் ஒருவனும் இருந்து பயணம் செய்துள்ளான். இதன் போது இளைஞன் சிறுமியுடன் உரையாடியபோது, சிறுமி தனது குடும்ப நிலையையும் அதனால் தனக்கேற்பட்ட மனப் பாதிப்புக்களையும் தெரிவித்துள்ளாள். இந் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த இளைஞன், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் பலதைக் கூறி அம்மாவிடம் செல்ல வேண்டாம் என்றும் தன்னோடு வரும்படியும் அழைத்துள்ளான்.
தாய் தந்தையருடைய சண்டையால் இருவரையும் பிரிந்து இருவரதும் போதிய அரவணைப்பும் பாசமும் பாதுகாப்பும் இல்லாது மன விரக்தியிலிருந்த சிறுமி அந்த வஞ்சகனுடைய ஆசை வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு அவனோடு செல்ல சம்மதித்திருந்தாள். அத்துடன், சிறுமியின் கைகளிலும் கழுத்திலும் அணிந்திருந்த மாலைகளையும் நூல்களையும் கழற்றி வீசுமாறு தெரித்துள்ளான். அவனின் சூழ்ச்சியை அறிந்திராத சிறுமி அவன் சொன்னதை அவ்வாறே பின்பற்றியுள்ளாள்.
சிறுமி மீது வேறொருவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு சிறுமியை இரண்டாம் திகதி அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள தாய் வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளான். அங்கு அவ் இளைஞனின் தாய், சிறுமியை பதினெட்டு வயதிற்கு பின்பே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் அது வரை தமது மதம் தொடர்பாக இவளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், தான் குறித்த மதத்தை கற்க மாட்டேன் என சிறுமி நிரஞ்சினி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞனின் தாய் அப்படியாயின் இவளை இங்கே வைத்திருக்க வேண்டாம் எனவும் எங்காவது கூட்டிச் செல்லுமாறும் தன் மகனுக்கு தெரிவித்துள்ளார்.மேலும் அவன் திருமணமான விடயத்தை குறித்த சிறுமி அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில், இளைஞனும் வேறு வழியின்றி திருகோணமலையிலுள்ள தனது மனைவி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளான். இங்கு தான் இறைவன் சிறுமியின் பக்கமிருந்துள்ளான். ஏனெனில் அவ் இளைஞன் சிறுமியை தனது மனைவி வீட்டுக்கு அழைத்து சென்றதன் காரணம் அவனது மனைவி வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக செல்ல கொழும்பு சென்றிருந்தமையினால் வீட்டிலே யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தான் நினைத்ததைப் போன்று சிறுமியை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தீய நோக்கத்துடனேயே கூட்டிச் சென்றுள்ளான். ஆனால் சிறுமியின் நல்ல நேரம் அவ் இளைஞனின் மனைவி வெளிநாடு செல்லவிருந்த திட்டம் எதோ காரணத்தால் தடைப்படவே அவள் வீடு திரும்பியுள்ளாள்.
இதன் போது வீட்டில் தன் கணவன் வேறொரு சிறுமியை அழைத்து வந்திருப்பது தொடர்பாக அதிர்ச்சியுற்ற அவள், கணவனிடம் வினாவியபோது அவன் மனைவிக்கு உண்மையை கூறியுள்ளான்.
எனவே, தனது கணவனை குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிறுமியே வழிதவறி திருகோணமலை வந்ததாகவும், அதன் போதே தாம் சிறுமியை காப்பாற்றியதாகவும் பொலிஸில் வாக்குமூலம் அளித்திருந்ததுடன் அவ்வாறே சிறுமியையும் கூறுமாறு கட்டாயப்படுத்தி மிரட்டியும் உள்ளனர்.
இத் தகவல்கள் அனைத்தையும் சிறுமியிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், சிறுமி நிரஞ்சினியை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது தான் தனது தாய் தந்தை யாருடனும் இருக்க மாட்டேன் என அச் சிறுமி தெரிவித்திருந்தாள். இதன் அடிப்படையில் நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் சிறுமி நிரஞ்சினியை அரச பொறுப்பில் வைத்து கற்பிக்கவும் பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த 25 வயதான இளைஞன் என்பதுடன் வவுனியாவில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அத்துடன் குறித்த இளைஞன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 7ஆம் திகதி மதியம் திருகோணமலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி டி.எம்.சிந்தக என்.பண்டார தெரிவித்துள்ளதாவது,
சிறுமியின் தந்தை முறைப்பாட்டை மேற்கொண்ட 24 மணி நேரத்துக்குள் சிறுமியை எங்களால் மீட்க முடிந்ததால் அச் சிறுமியின் எதிர்காலமும் உயிரும் காப்பாற்றப்பட்டது. ஏனெனில் சிறுமியும் இளைஞனும் நீண்ட நேரத்தை பேரூந்து பயணத்திலேயே கழித்திருந்தனர். இதனால் அந் நபரால் சிறுமியை எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையெனில் அண்மைக் காலமாக நாட்டில் நடப்பதை போன்று சிறுமியை என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு எங்காவது கொலை செய்தும் எறிந்திருக்கலாம். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் குறிப்பாக பெண் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
இச் சம்பவத்தில் அச் சிறுமி வஞ்சகனின் பிடியில் சிக்குவதற்கு பிரதான காரணம் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தாயினதும் தந்தையினதும் அரவணைப்பு கிடைக்காமையே ஆகும். குறிப்பாக இச் சிறுமி பருவமெய்திய கட்டிளமை பருவப் பெண். இவ்வாறான நிலையில் தாயினுடைய கரிசனையென்பது பிள்ளைக்கு எவ்வளவு முக்கியமென்பதை அத் தாய் கூட உணர்ந்திருக்காத நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரது பூரண ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அறிவுரையும் அவசியமான இக்காலப்பரப்பில் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளாள்.
ஏதோ பிள்ளையை பெற்றோம் வளர்த்தோம் என்பதற்கு அப்பால் அப் பிள்ளையை சரியாக வளர்த்தோமா? தாய் என்ற ரீதியிலும் தந்தையென்ற ரீதியிலும் சரியாக எமது கடமையை செய்தோமா? என்பதே முக்கியமானதாகும்.
ரி.விரூஷன்
வீரகேசரி
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
டி.எம்.சிந்தக என்.பண்டார
தாய் தந்தைக்கு இடையிலான பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் குடும்பத்தில் இச் சிறுமி பருவமெய்திய வயதில் தனக்கு கிடைக்கவேண்டிய அன்பும் பாசமும் பாதுகாப்பும் கிடைக்காத விரக்தியினால் செய்வதறியாது இருந்த சந்தர்ப்பத்தில், ,வஞ்சகனின் பிடியில் சிக்கி தன் எதிர்காலத்தையே தொலைக்கப்பார்த்த சம்பவம் ஒன்று அண்மையில் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் அச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,கடந்த முதலாம் திகதி கொடிகாமம் பாலாவி வடக்கு வாகையடியைச் சேர்ந்த மகேஸ்வரன் நிரஞ்சினி என்ற 15வயது சிறுமி ஆலயத்திற்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தையால் கொடிகாமம் பொலிஸில் இரவு 7.30 மணிக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, நிகழ்கால நிலைமைகளை உணர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக என். பண்டார த.ைலமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சிறுமியின் தாயும் தந்தையும் குடும்பப் பிரச்சினை காரணமாக நீண்டகாலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றமை தெரியவந்தது.
இந்நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகளான 15 வயதான மகள் மற்றும் 11 வயதான மகன் ஆகியோரை தந்தையே வளர்த்து வந்துள்ளார். தற்போது சிறுமியின் தாய் மன்னார் சிலாபம் மீன்வாடியில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கொடிகாமம் பொலிஸார் சிறுமி தனது தாயாரிடம் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இச் சிறுமி தொடர்பாக அறிவித்திருந்தார்.
இவ்வாறு இருக்கையில், மறுநாள் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு காணாமல் போன சிறுமி திருகோணமலையில் இளம் தம்பதிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் பரிசோதகர் ஜஸ்மின் காணி என்பவருக்கு தகவல் ஒன்று கிடைத்திருந்ததுடன், குறித்த தம்பதிகளால் சிறுமியின் தந்தைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்து. இதனையடுத்து, அச் சிறுமி திருகோணமலைப் பொலிஸாரின் உதவியுடன் சிறுமியின் தாயார் சென்று பாதுகாப்பாக மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்திருந்தார்.
அத்துடன், திருகோணமலைப் பொலிஸில் குறித்த சிறுமியை ஒப்படைத்த தம்பதியினர் இச் சிறுமி திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் இடமறியாது தனித்து நின்ற போது தாம் அழைத்து சென்றதாகவும் பின்னர் சிறுமியிடம் அவரது தந்தையின் தொலைபேசி இலக்கத்தை பெற்று அவருக்கு தொடர்பு கொண்டு இவ் விடயத்தை தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தனர். அச் சிறுமியும் இவ்வாறே தெரிவித்திருந்தார்.
இருந்த போதிலும் தம்பதிகளின் வாக்கு மூலத்திலும் சிறுமியின் பேச்சிலும் சந்தேகம் கொண்ட கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக சிறுமியிடம் உண்மைகளை கண்டறியுமுகமாக விசாரணையை மேற்கொண்டார்.
இவ் விசாரணையின் போதே பல அதிர்ச்சி தகவல்களையும் சம்பவத்தின் உண்மையையும் அச் சிறுமி தெரியப்படுத்தியிருந்தார்.
இதன் படி..
சிறுமியின் தாயும் தந்தையும் குடும்பச் சண்டை காரணமாக பிரிந்திருந்த நிலையில் இச்சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்துள்ளதுடன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தனது நண்பிகளிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை "நீ தற்கொலை செய்ய வேண்டாம் உனது அம்மாவிடம் செல்" என நண்பிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று காலை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தந்தை மகளை பார்த்து" நீ எங்கையாவது போய் தொலை என கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஏற்கனவே மனதளவில் விரக்தியுற்றிருந்த சிறுமி நண்பிகளின் ஆலோசனையின் பிரகாரம் தாயிடம் செல்லத் திட்டமிட்டு ஆலயத்திற்கு செல்வதாக தந்தையிடம் பொய் கூறிவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாள்.
வீட்டை விட்டு சென்ற சிறுமி மிருசுவில் பகுதியிலுள்ள தனது நண்பி ஒருவரது வீட்டில் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தாயிடம் செல்லும் சிந்தனையில் வவுனியா செல்லும் பேரூந்தில் ஏறியுள்ளாள்.
பேரூந்தில் சிறுமி இருந்த இருக்கைக்கு அருகில் இளைஞன் ஒருவனும் இருந்து பயணம் செய்துள்ளான். இதன் போது இளைஞன் சிறுமியுடன் உரையாடியபோது, சிறுமி தனது குடும்ப நிலையையும் அதனால் தனக்கேற்பட்ட மனப் பாதிப்புக்களையும் தெரிவித்துள்ளாள். இந் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த இளைஞன், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் பலதைக் கூறி அம்மாவிடம் செல்ல வேண்டாம் என்றும் தன்னோடு வரும்படியும் அழைத்துள்ளான்.
தாய் தந்தையருடைய சண்டையால் இருவரையும் பிரிந்து இருவரதும் போதிய அரவணைப்பும் பாசமும் பாதுகாப்பும் இல்லாது மன விரக்தியிலிருந்த சிறுமி அந்த வஞ்சகனுடைய ஆசை வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு அவனோடு செல்ல சம்மதித்திருந்தாள். அத்துடன், சிறுமியின் கைகளிலும் கழுத்திலும் அணிந்திருந்த மாலைகளையும் நூல்களையும் கழற்றி வீசுமாறு தெரித்துள்ளான். அவனின் சூழ்ச்சியை அறிந்திராத சிறுமி அவன் சொன்னதை அவ்வாறே பின்பற்றியுள்ளாள்.
சிறுமி மீது வேறொருவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு சிறுமியை இரண்டாம் திகதி அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள தாய் வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளான். அங்கு அவ் இளைஞனின் தாய், சிறுமியை பதினெட்டு வயதிற்கு பின்பே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் அது வரை தமது மதம் தொடர்பாக இவளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், தான் குறித்த மதத்தை கற்க மாட்டேன் என சிறுமி நிரஞ்சினி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞனின் தாய் அப்படியாயின் இவளை இங்கே வைத்திருக்க வேண்டாம் எனவும் எங்காவது கூட்டிச் செல்லுமாறும் தன் மகனுக்கு தெரிவித்துள்ளார்.மேலும் அவன் திருமணமான விடயத்தை குறித்த சிறுமி அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில், இளைஞனும் வேறு வழியின்றி திருகோணமலையிலுள்ள தனது மனைவி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளான். இங்கு தான் இறைவன் சிறுமியின் பக்கமிருந்துள்ளான். ஏனெனில் அவ் இளைஞன் சிறுமியை தனது மனைவி வீட்டுக்கு அழைத்து சென்றதன் காரணம் அவனது மனைவி வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக செல்ல கொழும்பு சென்றிருந்தமையினால் வீட்டிலே யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தான் நினைத்ததைப் போன்று சிறுமியை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற தீய நோக்கத்துடனேயே கூட்டிச் சென்றுள்ளான். ஆனால் சிறுமியின் நல்ல நேரம் அவ் இளைஞனின் மனைவி வெளிநாடு செல்லவிருந்த திட்டம் எதோ காரணத்தால் தடைப்படவே அவள் வீடு திரும்பியுள்ளாள்.
இதன் போது வீட்டில் தன் கணவன் வேறொரு சிறுமியை அழைத்து வந்திருப்பது தொடர்பாக அதிர்ச்சியுற்ற அவள், கணவனிடம் வினாவியபோது அவன் மனைவிக்கு உண்மையை கூறியுள்ளான்.
எனவே, தனது கணவனை குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிறுமியே வழிதவறி திருகோணமலை வந்ததாகவும், அதன் போதே தாம் சிறுமியை காப்பாற்றியதாகவும் பொலிஸில் வாக்குமூலம் அளித்திருந்ததுடன் அவ்வாறே சிறுமியையும் கூறுமாறு கட்டாயப்படுத்தி மிரட்டியும் உள்ளனர்.
இத் தகவல்கள் அனைத்தையும் சிறுமியிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், சிறுமி நிரஞ்சினியை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது தான் தனது தாய் தந்தை யாருடனும் இருக்க மாட்டேன் என அச் சிறுமி தெரிவித்திருந்தாள். இதன் அடிப்படையில் நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் சிறுமி நிரஞ்சினியை அரச பொறுப்பில் வைத்து கற்பிக்கவும் பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த 25 வயதான இளைஞன் என்பதுடன் வவுனியாவில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அத்துடன் குறித்த இளைஞன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 7ஆம் திகதி மதியம் திருகோணமலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி டி.எம்.சிந்தக என்.பண்டார தெரிவித்துள்ளதாவது,
சிறுமியின் தந்தை முறைப்பாட்டை மேற்கொண்ட 24 மணி நேரத்துக்குள் சிறுமியை எங்களால் மீட்க முடிந்ததால் அச் சிறுமியின் எதிர்காலமும் உயிரும் காப்பாற்றப்பட்டது. ஏனெனில் சிறுமியும் இளைஞனும் நீண்ட நேரத்தை பேரூந்து பயணத்திலேயே கழித்திருந்தனர். இதனால் அந் நபரால் சிறுமியை எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையெனில் அண்மைக் காலமாக நாட்டில் நடப்பதை போன்று சிறுமியை என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு எங்காவது கொலை செய்தும் எறிந்திருக்கலாம். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் குறிப்பாக பெண் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
இச் சம்பவத்தில் அச் சிறுமி வஞ்சகனின் பிடியில் சிக்குவதற்கு பிரதான காரணம் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தாயினதும் தந்தையினதும் அரவணைப்பு கிடைக்காமையே ஆகும். குறிப்பாக இச் சிறுமி பருவமெய்திய கட்டிளமை பருவப் பெண். இவ்வாறான நிலையில் தாயினுடைய கரிசனையென்பது பிள்ளைக்கு எவ்வளவு முக்கியமென்பதை அத் தாய் கூட உணர்ந்திருக்காத நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோரது பூரண ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அறிவுரையும் அவசியமான இக்காலப்பரப்பில் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளாள்.
ஏதோ பிள்ளையை பெற்றோம் வளர்த்தோம் என்பதற்கு அப்பால் அப் பிள்ளையை சரியாக வளர்த்தோமா? தாய் என்ற ரீதியிலும் தந்தையென்ற ரீதியிலும் சரியாக எமது கடமையை செய்தோமா? என்பதே முக்கியமானதாகும்.
ரி.விரூஷன்
வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக