திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எண்களுடன் பட்டியல் அமைக்க: நாம் டாகுமெண்ட்களை வேர்ட் புரோகிராமில் அமைக்கும் போது, எண்களுடன் கூடிய பட்டியல் வரிசைகளை உருவாக்குகிறோம். எடுத்துக் காட்டாக, கட்டுரை ஒன்றை அமைக்கையில், ஒவ்வொரு புதிய தகவலும் ஓர் எண்ணுடன் அமைக்கிறோம். வேர்ட் புரோகிராமில், இந்த செயல்பாடு மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. எண்களுடன் பட்டியல் வரிசை அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. உங்களுடைய பட்டியலை டைப் செய்திடவும். ஒவ்வொரு தகவல் அமைப்பின் முடிவிலும் என்டர் அழுத்தவும். ஒரு குறிப்பிட்ட தகவல், ஒரு வரிக்கும் மேலாக இருந்தால், ஒவ்வொரு வரி முடிவிலும், என்டர் அழுத்த வேண்டாம். அதில் உள்ள டெக்ஸ்ட் தானாக மடக்கப்பட்டு அடுத்த வரிக்கு வருமாறு அமைக்கவும்.
2. இனி, அனைத்து குறிப்புகள் அல்லது தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பாராகிராப் குரூப்பில், numbered list என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
5. இனி தானாக, எண்களுடன் கூடிய பட்டியலாக, உங்கள் தகவல்கள் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக