ரஷ்ய மொஸ்கோ நகரில் தனது பராமரிப்பிலிருந்த 4 வயது சிறுமியொருவரை தலையைத் துண்டித்து படுகொலை செய்த குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் புதன் கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கயுல் சென்கரா பொபோகுலோவா (38 வயது) என்ற மேற்படி பெண் பராமரிப்பாளர், கடந்த திங்கட்கிழமை தனது பராமரிப்பிலிருந்த அனஸ்டாஸியா என்ற கற்றல் குறைபாடுள்ள 4 வயது சிறுமியை தலையை வெட்டி படுகொலை செய்து குழந்தையின் தலையுடன் வீதியில் நடமாடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அவர் நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்ட போது, இறைவனே தன்னை இந்தப் படுகொலையை செய்யுமாறு தனக்கு ஆணையிட்டதாக தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என்பது அறியப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த இடமான உஸ்பெகிஸ்தானில் மனநல சிகிச்சை பெற்று வந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
அவர் அங்கு கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றதையடுத்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வீதிகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக் கப்படுகிறது.
இந்நிலையில் அவரது 3 பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களின் வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக