காதலருடன் தனியாக பொழுதைக் கழித்த போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட 19 வயது யுவதியொருவருக்கு பெருமளவு பொதுமக்கள் முன்னிலையில் 50 பிரம்படிகள் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
சுமாத்ரா பிராந்தியத்தில் பண்டா ஏக் பிரதேசத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட யுவதி மீது, மத சட்டத்தை மீறும் வகையில் 21 வயது இளைஞர் ஒருவருடன் தனித்து பொழுதைக் கழித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி பிராந்தியத்தில் மது பாவனை உள்ளடங்கலான மத சட்டத்தை மீறும் குற்றச்சாட்டுகளின் கீழ் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்ட 18 பேரில் மேற்படி யுவதியும் அவரது காதலரும் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் அந்த பிராந்தியத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலிருந்த மேடையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத பாரம்பரிய ஆடை அணிந்து மேடை யில் மண்டியிட்டு அமர்ந்திருந்த குறிப்பிட்ட யுவதிக்கு பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டதும் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவருக்கு அங்கிருந்து செல்வதற்கு உதவி செய்கின்றனர். தொடர்ந்து யுவதியின் காதலர் உட்பட ஏனையவர்களுக்கு பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்தோனேசிய மத சட்டங்களின் பிர காரம் திருமணமாகாத பெண்கள் உறவின ரல்லாத ஆண் ஒருவருடன் தனித்து காணப் படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக