வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும்.
நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும். இது போன்ற வாக்கியங்களை சோதனை செய்து, அதில் அவை இருப்பதனை அறிந்தால், வேர்ட் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இங்கு தரப்பட்டிருக்கும் Options பட்டியலில், ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. ஸ்டைல் பிரிவில், Sentences Beginning with And, But, and Hopefully என்று இருப்பதைக் காணவும். இதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
5. தொடர்ந்து, Grammar Settings டயலாக் பாக்ஸினையும், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸையும் மூடி வெளியேறவும்.
இனி, நீங்கள் அமைக்கும் வாக்கியங்களின் தொடக்கத்தில், இணைப்புச் சொற்கள் இருப்பின், அதனை வேர்ட் சிறிய ப்ளாக் மூலம் சுட்டிக் காட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக