இணையத்தில் செயல்படும் அனைவரும், தங்களின் மின் அஞ்சலாக, கூகுள் தரும் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அஞ்சல் தளத்தினைத் தாங்கள் விரும்பும்படி அமைத்திட கூகுள் வழி தந்துள்ளது. பல படங்கள், கட்டமைப்புகளை இதற்கென வழங்குகிறது.
எப்படி மாற்றி அமைப்பது? என்ற கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.
உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கவும். ஸ்டார்ட் மெனு அல்லது டாஸ்க் பாரில் உள்ள இதன் ஐகானில் டபுள் கிளிக் செய்திடவும்.
பின்னர், உங்கள் கூகுள் மின் அஞ்சல் கணக்கிற்கான தளம் செல்ல, www.mail.google.com என்ற தளம் சென்று, அத்தளம் கேட்கும் உங்கள் பயனாளர் முகவரி (யூசர் மெயில் முகவரி) யையும், அதற்கான பாஸ்வேர்டையும் தரவும்.
இவற்றைத் தருகையில், கேப்ஸ் லாக் இயக்கப்படாமல் இருப்பதனை உறுதி செய்திடவும்.
இயக்கப்பட்டிருந்தால், பயனாளர் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் தவறாக உள்ளீடு செய்யப்படும்.
நீங்கள் சரியாக இவற்றை உள்ளீடு செய்தவுடன், உங்களுடைய அஞ்சல் இன் பாக்ஸிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
தொடர்ந்து இதன் மேலாக, வலது பக்கம் உள்ள சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும்.
இதனைக் கிளிக் செய்து கிடைக்கும் தளத்தில், இதன் இறுதியில் தரப்படும் கீழ் விரி பட்டியலில் “themes” என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் பக்கத்தில், மெனு விண்டோ கிடைக்கும்.
இங்கு இரண்டு வகை தோற்றத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை “Light” (இந்த வகையில் அஞ்சல் உள் பெட்டி சற்று மிதமான வண்ணத்தில் இருக்கும்.) இன்னொன்று “Dark” (இது சற்று அழுத்தமான வண்ணத்தில் இருக்கும்). இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். பின் நாளில், எப்போது வேண்டுமானாலும், இதனை மாற்றிக் கொள்ளலாம்.
இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், ஒரு சிறிய விண்டோ எழும்.
இது “Select your background image” என்ற தலைப்பில் இருக்கும்.
நீங்கள் உங்களால் தயாரிக்கப்பட்ட அல்லது கூகுள் வழங்காத இமேஜ் ஒன்றை, உங்கள் அஞ்சல் தளத்தில் வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டால், இடது புறமாக உள்ள, “Upload photos” என்பதில் கிளிக் செய்திடவும்.
அல்லது “My photos” என்பதில் கிளிக் செய்து, உங்களுடைய Google+ தன் அமைப்பில் (Profile) இருந்து படத்தினை எடுத்து அமைக்கலாம்.
இணைய தளம் ஒன்றிலிருந்து படம் எடுத்து அமைக்க, அத்தளத்தின் இணைய முகவரியினை அமைக்க வேண்டும்.
இதற்கு “Paste a URL” என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்கள் மொபைல் போனில் இதனை மேற்கொண்டால், “Photos from phone” என்று உள்ளதில் கிளிக் செய்து, போனில் உள்ள படத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
இவை எதுவும் தேவை இல்லை என நீங்கள் கருதினால், “themes” தேர்ந்தெடுத்தவுடன் தரப்படும் பக்கத்தில் பார்க்கலாம்.
இதில் பலவகையான படங்களும் தரப்படும். இங்கு கிடைக்கும் படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கவும். கிடைக்கும் அனைத்தையும் பார்த்து ரசிக்கவும்.
இதில் உங்களை அதிகம் கவரும் படத்தில் கிளிக் செய்திடவும்.
அவ்வளவுதான்! நீங்கள் தேர்ந்தெடுத்த படம் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் அமைக்கப்பட்டுவிடும்.
குறிப்பு !
ஜிமெயில் பின்புலத்தில் நீங்கள் அப்லோட் செய்த படத்தினை நீக்க வேண்டுமா?
உங்களுடைய Google+ தன் அமைப்பு பக்கம் செல்லவும்.
இதற்கு, கூகுள் பக்கத்தில், வலது மேல் பக்கத்தில் உள்ள உங்கள் பெயரில் கிளிக் செய்திடவும்.
Home ஐகானில், மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும்.
அடுத்து, Photos என்பதில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் அப்லோட் செய்திட்ட போட்டோவில் கிளிக் செய்திடவும்.
அதன் பின்னர், அப்பக்கத்தின் மேலாக உள்ள குப்பைத் தொட்டி (Trash) ஐகானில் கிளிக் செய்திடவும்.
உங்கள் படம் மறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக