இரண்டு நிலைகளும், ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation), ஏறத்தாழ ஒரே செயல்பாட்டினையே தருகின்றன. இவை இரண்டும் இயக்கப்படுகையில், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன சேவ் செய்யப்படுகின்றன.
மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும்போது, எந்த நிலையில் விட்டு சென்றீர்களோ, அதே நிலைக்கு மீண்டும் வருவீர்கள்.
ஆனால், இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க எண்ணினால், நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்திற்கேற்ப முடிவு செய்திடலாம். ஸ்லீப் நிலையை தற்காலிக நிறுத்தம் (Suspend) என்றும் கூறுவார்கள். இந்நிலையில், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருந்த தகவல்கள் அனைத்தும் ராம் மெமரியில் சேவ் செய்யப்படுகிறது. இதற்கென குறைந்த அளவே மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குகையில், அவை உடனே கிடைக்கும்.
ஆனால், ஹைபர்னேட் (Hibernate) தேர்ந்தெடுக்கையில், அவை அனைத்தும், உங்கள் ஹார்ட் ட்ரைவில் சேமிக்கப்படுகிறது. சேமித்து முடித்தவுடன், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறது. வெகு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், ஹைபர்னேட் நிலையையும், குறைந்த நேரமே எனில், ஸ்லீப் நிலையையும் தேர்ந்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக