பஞ்சாபி சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2கிலோ
தயிர் -3/4கப்
இஞ்சி விழுது-1tbsp
பூண்டு விழுது-1tbsp
மிளகாய் தூள்-1tbsp
அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம்-3[நடுத்தரம்]
தக்காளி-3
கிராம்பு-2
மிளகு-5
ஏலக்காய்-3
மல்லித்தூள்-1tbsp
இவை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
*கழுவி சுத்தம் செய்யப்பட்ட கோழியுடன்,தயிர்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் வைக்கவும்.
*இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து,5 tbsp எண்ணெய் விட்டு,அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.மசாலா நன்கு வதங்கிய பின்,கோழியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
*பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு,கோழி வெந்ததும் இறக்கி வைத்து,சிறிது பச்சை கொத்தமல்லி இலையைப் போடவும்.
*சப்பாத்தி ,பரோட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சிக்கன் கட்லெட்....
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் ½ கிலோ
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கரம் மசாலா ¼ டீஸ்பூன்
உருளைக்கிழங்கு 100 கிராம்
முந்திரி சிறிது
சோளமாவு 25 கிராம்
எண்ணெய் 200 கிராம்
மல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக்கி கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேகவைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
வெந்த சிக்கனை கையால் பிசைந்து உதிர்த்துக் கொள்ளவும்.
அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய், கரம் மசாலா உப்பு, மல்லித்தழை போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெயை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் உருண்டைகளை எடுத்து வட்டமாகத் தட்டி நடுவில் ஒரு முந்திரியைப் பதித்து சோளமாவில் இருபுறமும் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும்.
கட்லட் பொரிந்ததும் புரட்டிப் போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
இதை மாலை சிற்றுண்டியாக செய்து சாப்பிடலாம். செய்வது மிகவும் எளிது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மங்லோரியன் சிக்கன்..........
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
வரமிளகாய் – 4
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள்,
புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து,
நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக