விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவின் கீழாக, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் எளிதாகக் கிடைத்த கண்ட்ரோல் பேனல் தரப்பட்டுள்ளது. இதனை Settings app என அழைக்கின்றனர்.
இதில்தான், டிஸ்பிளே, டிவைசஸ், நெட்வொர்க் கனெக் ஷன்ஸ் போன்றவை கொண்ட கண்ட்ரோல் பேனல் உள்ளது. இதில் சென்று, கண்ட்ரோல் பேனலில் உள்ள பல அமைப்புகளின் தன்மையை மாற்றலாம். ஆனால், முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இருந்த கண்ட்ரோல் பேனலில் கிடைத்த Default Programs, AutoPlay and the Device Manager ஆகியவற்றை இதில் பெற முடியாது. அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10ல், கார்டனா மூலம், அதில் டைப் செய்து பெறலாம்.
எளிதாகவும், விரைவாகவும் கண்ட்ரோல் பேனல் பெற ஒரு வழியும் உள்ளது.
ஸ்டார்ட் மெனு பட்டனில், ரைட் கிளிக் செய்திடவும்.
அதில் பாப் அப் ஆகி வரும் மெனுவில், கண்ட்ரோல் பேனல் என்பதில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனலைப் பெறலாம்.
அத்துடன் விண்டோஸ் மற்றும் X கீகளை ஒரு சேர அழுத்தியும் கண்ட்ரோல் பேனலைப் பெறலாம்.
இங்கேயே, Device Manager, Task Manager, Power Options, Command Prompt மற்றும் File Explorer போன்றவற்றைப் பெற வழி தரப்பட்டுள்ளது.
கண்ட்ரோல் பேனல் பிரிவினை ஒரு டைலாக (கட்டமாக) அமைத்துக் கொள்ளலாம்.
சர்ச் பாக்ஸில், “Control Panel” என டைப் செய்தால், கண்ட்ரோல் பேனல் எனக் கிடைக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் மெனுவில், “Pin to Start.” என்பதில் கிளிக் செய்திடவும்.
ஸ்டார்ட் மெனுவில் இது தோன்றியவுடன், அதனை அப்படியே மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று, டைல்கள் உள்ள இடத்தில் விட்டுவிடலாம்.
அதன் பின்னர், அந்த டைலில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனலைப் பெறலாம்.
---------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக