ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஓய்­வுக்குப்பின் ஓரங்­கட்­டப்­படும் முதி­யோர்கள்

சுருங்­கிய தோள், மங்­கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வய­துக்கு பின்­னரும் ஓய்­வெ­டுக்க முடி­யாமல் பசிக்­காக உழைத்­துக்­கொண்­டி­ருக்கும் சிரேஷ்ட பிர­ஜைகள் எனப்­படும் முதி­யோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்­பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்­டுகள் குடும்­பத்­துக்­கா­கவும் குழந்­தை­க­ளுக்­கா­கவும் நிர்­வா­கத்­துக்­கா­கவும் உழைத்து களைத்து போகின்­றனர். உழைப்பின் பின் இளைப்­பாற இவர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான ஒரு இருப்­பிடம் கூட இல்­லா­துள்­ள­மையே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.


மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில், அநேகர் பெருந்­தோட்­டங்­களில் பணி புரிந்­த­வர்கள். அவர்கள் பணி புரியும் காலம் நிறை­வுற்று ஓய்வு பெறும் வயதை அடைந்­ததும் அவர்­களை குடும்­பமும் தோட்ட நிர்­வா­கங்­களும் கண்­டு­கொள்­வ­தில்லை. அரச ஊழி­ய­ராக இருக்கும் பட்­சத்தில் மாதாந்தம் அவர்­க­ளுக்­கான ஓய்­வூ­திய சம்­ப­ளப்­பணம் சாகும் வரை வந்­து­கொண்­டி­ருக்கும்.

மலை­ய­கத்தை பொறுத்­த­வரை அரச ஊழி­யர்­க­ளாக இருந்து ஓய்­வூ­தியம் பெறு­ப­வர்கள் மிகக்­கு­றைந்த அள­வி­ன­ரே­யாகும். பெரும்­பா­லானோர் தனியார் துறை அதுவும் தேயிலை தோட்­டங்­க­ளி­லேயே பணி புரிந்­த­வர்­க­ளாக உள்­ளனர். அவர்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் இருக்கும் ஒரே சேமிப்பு ஓய்­வூ­திய நிதி­கள்தான் (EPF/ETF) அது அவர்­க­ளுக்கு இலட்­சக்­க­ணக்கில் இருக்கும். ஆனால், அத்­தொகை மாதாந்தம் இல்­லாது ஒரே தட­வையில் பெறும் நிலையே உள்­ளது. அவர்கள் அதை அப்­ப­டியே பிள்­ளை­க­ளுக்கு தாரை­வார்த்­து­வி­டு­கின்­றனர். அல்­லது பிள்­ளையின் திரு­மணம், வாகனம் பெறல், முத­லா­ன­வற்­றுக்கு வழங்­கி­வி­டு­கின்­றனர். ஆனால் அவர்­களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்­பது அவர்­க­ளுக்கே புரி­யாத புதி­ரா­கி­வி­டு­கி­றது. பணம் கிடைக்கும் போது பிள்­ளை­களின் முகத்தில் தெரியும் புன்­மு­றுவல் போக போக மறைந்­து­வி­டு­வதும் வேத­னைதான்.

பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை

தனது குழந்­தையை பரா­ம­ரிக்­கவே முதி­ய­வர்­க­ளான தமது தாய், தந்தை உள்­ளனர் எனும் எண்­ணத்தில் இருக்கும் நாளைய முதி­ய­வர்­க­ளான இன்­றைய குடும்­பஸ்­தர்கள் தாம் அவர்­களை பரா­ம­ரிக்க வேண்டும் எனும் எண்­ணப்­பாட்டை பெரும்­பாலும் கொண்­டி­ருப்­ப­தில்லை.
அதனால் உழைத்து ஓய்ந்த பின்­னரும் இன்றும் வியா­பார நிலை­யங்­க­ளிலும் செல்­வந்­தர்­களின் வீடு­க­ளிலும் கொழும்பு போன்ற இடங்­க­ளிலும் தள்­ளாத வயதில் தொழில் செய்ய வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது. சிலர் பாதை­யோ­ரங்­களில் பிற­ரிடம் கையேந்தும் நிலையில் யாசகம் செய்­வ­துதான் வேத­னையின் உச்சம். அத்­தோடு வீட்டை காக்­கவும், வேலை­களை செய்­யவும் என வீடு­களில் வேலைக்­கா­ரர்­க­ளா­விட்ட முதி­யோர்கள் மன­த­ளவில் பாரிய பாதிப்பை எதிர்­கொள்­கின்­றனர். சிலர் நடந்­து­செல்ல முடி­யாத நிலையில், கால்­நடை வளர்ப்பில் ஈடு­ப­டு­வதும் ஒரு பக்கம் வேத­னை­தரும் விட­ய­மா­கி­றது.

கண்டு கொள்­ளாத பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள்

தமது நிறு­வ­னத்­துக்­காக இத்­தனை காலம் கஷ்­டப்­பட்டு உழைத்த முதி­ய­வர்கள் வீடு­களில் அனு­ப­விக்கும் வேத­னை­யையும் கொடு­மை­க­ளையும் அறிந்தும் அவர்­க­ளுக்கு மாற்­றீ­டொன்றை வழங்க தோட்ட நிர்­வா­கங்கள் முன்­வ­ரு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. குறிப்­பாக தோட்­டத்தில் ஓய்­வூ­தி­யத்­துக்கு பெயர் கொடுத்து முடிந்த அடுத்த கணமே அவர்­க­ளுக்கும் தோட்­டத்­துக்கும் உள்ள பந்தம் ,உறவு முடிந்­து­வி­டு­வ­தாக நினைக்­கின்­றது நிர்வாகம். ஆனால், சில நிறு­வ­னங்கள் அவர்­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்கும் வகையில் முதியோர் கழ­கங்கள், சங்­கங்கள் அமைத்து அவர்­களை மகிழ்­விக்கும் பொருட்டு கலை நிகழ்­வு­க­ளையும், விளை­யாட்டு போட்­டி­க­ளையும் நடத்­தி­னாலும் அது ஒரு வரை­ய­றைக்குள் இடம்­பெ­று­கி­றதே தவிர, முதி­யோ­ருக்கு வாழ்நாள் முழு­வதும் மகிழ்ச்­சி­ப்ப­டுத்தும் தீர்­வாக அது அமை­யாது.
சில தோட்­டங்­களில் நிர்­வா­கங்கள் அவர்­க­ளுக்கு தேயிலை தூள் வழங்­குதல் உள்­ளிட்ட சில அடிப்­படை சலு­கை­களைக் கூட வழங்க மறுக்­கின்­றன. அத்­தோடு சில சிரேஷ்ட பிர­ஜைகள் ஓய்­வூ­தியம் பெற்ற பின்­னரும் தொழி­லுக்கு அமர்த்தப் படு­கின்­றனர். அதா­வது வய­தெல்லை தாண்டி, ஓய்வு பெறும் வயதை அடைந்­ததும் ஓய்வை பெறும் இவர்கள் தினக்­கூலி (கைகாசு) தொழிலில் அமர்த்­தப்­ப­டு­கின்­றனர்.

ஆனால் அவர்­க­ளுக்­கான முதியோர் இல்­லங்­களோ, பொழுதை கழிப்­ப­தற்­கான கட்­டி­டங்­களோ, அவர்­க­ளுக்­கென தனித்­துவம் வாய்ந்த இடங்­களோ அமைக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதே உண்மை. குறிப்­பாக சில விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய இடங்­களில் மாத்­தி­ரமே குறித்த செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கொத்­மலை பிர­தேச எல்­பிட்­டிய பெருந்­தோட்ட நிறு­வ­னத்­துக்­குட்­பட்ட மடக்­கும்­பர தோட்­டத்தில் அறிந்த வகையில் இவ்­வா­றா­ன­தொரு முதியோர் கூடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. வேறெங்கும் அமைக்­கப்­பட்­ட­தா­கவோ, நிர்­வா­கத்தால் அத்­த­கைய செயற்­பாட்­டுக்கு அடி­கோ­லி­டப்­பட்­ட­தா­கவோ அறிய முடி­ய­வில்லை. அப்­படி எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்­பதே உண்­மை­யாகும். எனவே இவ்­வா­றான செயற்­பா­டுகள் எல்லா தோட்­டங்­க­ளுக்கும் பரவ வேண்டும் என்­பதே எதிர்­பார்ப்­பாகும்.

முதியோர் தினத்தில் மட்டும் பேச்சு

குழந்தை மனம் கொண்­ட­தாலோ என்­னவோ சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வரு­கி­றது. ஒக்­டோபர் முதலாம் திகதி கொண்­டா­டப்­படும் முதியோர் தினத்­தன்று மாத்­திரம் முதி­யோர்கள் பற்றி எல்லா இடங்­க­ளிலும் கருத்து பகி­ரப்­ப­டு­கி­றது. அத்­தி­னத்தில் முதியோர் என்­பவர் யார்? அவர்கள் எவ்­வாறு பாது­காக்­கப்­பட வேண்டும்? எதிர்­கா­லத்தில் எவ்­வாறு அவர்கள் பரா­ம­ரிக்­கப்­பட வேண்டும்? அவர்­களை பரா­ம­ரிக்க வேண்­டிய பொறுப்பு யாரு­டை­யது? அவர்­க­ளுக்கென புதிய சில திட்­டங்கள். என ஏகப்­பட்ட விட­யங்கள் இருக்கும் மறு­நாளே எல்லாம் காணாமல் போய்­விடும். பலத்து ஒலித்த விட­யங்கள் புஸ்­வா­ன­மா­கி­விடும். அன்றே சிறுவர் தினமும் கொண்­டா­டப்­ப­டு­வதால் பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் அத்­தி­னத்தை அனு­ப­விக்க முடி­யாத நிலை­கூட இவர்­க­ளுக்கு தோன்­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

சமூக தொண்டு நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு

இம் முதி­யோர்­களை குடும்­பமும் நிர்­வா­கமும் கண்­டு­கொள்­ளாத நிலையில், தொண்டு நிறு­வ­னமும் அரசும் அதி­க­மாக நோக்­காமை வேத­னை­யான விட­ய­மாகும். குறிப்­பாக, சமூக தொண்டு நிறு­வ­னங்­களும் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை பல்­வேறு வய­துப்­பி­ரி­வி­ன­ருக்கு மேற்­கொள்­கி­றது.

சிறுவர்,இளைஞர்,யுவதி ,தொழி­லா­ளர்கள்,பெண்கள் என எல்லா வய­தி­ன­ருக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்­கி­றது. பல அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளையும் சமூக தனியார் நிறு­வ­னங்கள் முன்­னெ­டுக்­கின்­றன. அதில் ஒரு பிரி­வாக முதி­யோர்­க­ளுக்­கான வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால், குறு­கிய கால அல்­லது குறித்த சில நாட்­க­ளுக்­கென முன்­னெ­டுக்­கப்­படும் இவ் வேலைத்­திட்டம் நீடித்து நிலைக்கும் படி­யா­ன­தாக இல்லை. முதி­யோர்­க­ளுக்கு என முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை நிறு­வ­னங்கள் நீடிக்­கவும் பெரும்­பாலும் விரும்­பு­வ­தில்லை. குறு­கிய கால செயல்­திட்­டங்கள் தற்­கா­லி­க­மாக அமை­யுமே தவிர, அவர்கள் வாழ்வில் வளம்­பெற நிரந்­த­ர­மா­ன­தாக அது அமை­வ­தில்லை. ஒரு விளை­யாட்டு போட்டி, கலை­நி­கழ்வு என அது குறு­கி­ய­கால செயற்­பா­டாக அவர்­களை மகிழ்­விப்­பது மாத்­தி­ரமே. அத்­தோடு அது தவிர இதர செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் நிகழ்ச்சி திட்­டமும் அவர்­க­ளிடம் இல்லை. அதை உரு­வாக்­கவும் முடி­வ­தில்லை காரணம் அவர்கள் ஒரு கட்­டுக்குள் செயற்­பட வேண்­டிய நிலை­யிலும் குறு­கி­யால செயல்­திட்­டங்­க­ளோடு குறித்­த­ளவு நிதியை கொண்டு பய­ணிக்­கின்­றனர்.

அரசின் பங்­க­ளிப்பு

அர­சாங்கம் சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் , நிதி உதவி முத­லான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தாலும் மலை­ய­கத்தில் அதன் செயற்­பா­டுகள் குறித்த வளர்ச்­சியை இன்னும் அடை­ய­வில்லை என்றே கூற வேண்டும். தற்­போது அர­சாங்­கத்தால் 70 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு மாதாந்தம் 2000 ரூபா பணம் வழங்கும் நிகழ்வு குறித்த பிர­தேச கிராம அலு­வ­ல­ரூ­டாக விண்­ணப்பம் நிரப்­பப்­பட்டு, கூப்பன் வழங்­கப்­பட்டு அக்­கூப்­பனை கொண்டு சென்று தபா­ல­கத்தில் செலுத்தி குறித்த பணத்தை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.
சில இடங்­களில் குறித்த திட்டம் நடை­முறை கோவை­யோடு சீராக இடம்­பெ­று­வ­தில்லை. பல்­வேறு இடங்­களில் இது சிக்கல் நிறைந்­த­தா­கவே காணப்­ப­டு­கி­றது. எல்லா முதி­ய­வர்­களும் இதில் பதி­யப்­ப­டாமை, அத்­தோடு பதி­யப்­ப­டா­த­வர்கள் கேட்டால் ஒருவர் இறந்தால் உங்கள் பெயரை சேர்க்­கிறோம் என்­பது, பணம் வழங்க குறித்த தினம் நிர்­ண­யிக்­கப்­ப­டாமை, பிர­தேச அடிப்­ப­டையில் வழங்­காமல் அனை­வரும் ஒரே தினத்தில் கால்­க­டுக்க நிற்க வேண்­டிய நிலை. என ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள், நடை­முறை சிக்­கல்கள் இதில் இருக்­கத்தான் செய்­கின்­றன. எனவே வழங்­கப்­படும் ஒரு சில திட்­டங்­களும் திருப்­தி­கொள்­ளத்­தக்­க­தாக இல்லை.

எதிர்­காலம் என்ன

சில காலங்­களில் மர­ணத்தை எதிர்­நோக்க இருக்கும் தற்­கால முதி­ய­வர்களை தகுந்த முறையில் பாது­காக்க வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும். இன்றைய இளைஞர், யுவதிகளான நாம் நாளைய முதியவர்கள் எனும் எண்ணத்தில் தற்கால முதியவர்களை கரிசனையொடு பார்க்க வேண்டும்.

சில நாடுகளில் அவர்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்தின் போது கட்டணம் அறவிடாமை முதலானவை. ஆனால் எமது நாட்டில் இருக்கும் திட்டங்களும் சரியாக பயன்பாட்டில் இல்லை. அவர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இன்றைய சிறுவர்கள் தமது தாத்தா, பாட்டியான முதியோர்களை மதிக்கும் செயற்பாட்டிற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதை குடும்பமும் கல்வி கூடங்களும் பழக்கப்படுத்த வேண்டும்.
அனுபவம் வாய்ந்தவர்களின் படிப்பினைகள் அவசியம் என்பதை இளைஞர் சமுதாயம் உணர வேண்டும். அவர்களை மதித்து அரசும் பெருந்தோட்ட நிறுவனங்களும் பல்வேறு வசதியேற்பாடுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். நல்ல பல செயல்திட்டங்களை சமூக நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல