ஞாயிறு, 10 ஜூலை, 2016

தாம்பத்ய வாழ்வில் பிளவு ஏற்படுவதேன்? ஓர் இல­கு­வான கைரேகை விளக்கம்

கையில் இதர ரேகைகள் பிழை­பட்­டி­ருந்­தாலும் ஐக்­கிய ரேகை சிறப்­பாக அமைந்­தி­ருக்கக் காணப்­பட்டால் மாத்­தி­ரமே பரி­கா­ரங்கள் செய்­வதால் பலன் கிடைக்கும்.
புத்தி ஜீவிகள் என்­றொரு சாரார் அல்­லது சாதியார் இன்று நம்­மி­டையே தோன்­றி­யுள்­ளனர். இவர்கள் புத்­திக்கு மட்­டுமே வேலை கொடுத்து வாழ்க்­கையை நடத்­து­ப­வர்கள். அன்பு, பாசம், புரிந்­து­ணர்வு, தியாகம் என்­ப­தெல்லாம் இவர்­க­ளது அக­ரா­தியில் கிடை­யாது போல் தோன்­று­கி­றது. ஏனென்றால் ஒன்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்ள இந்தச் சாதி­யாரின் நட­வ­டிக்­கை­களால் தான் இன்று நம் சமூ­கத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்­ற­வை­யெல்லாம் அதி­க­ம­தி­கமாய்த் தோன்­றி­யுள்­ளன.


முன்பு யுத்தம் என்­பது அபூர்­வ­மான ஒரு விடயம். கொலை என்­பது எப்­போ­தா­வது ஒரு முறை நடந்து சனங்­களால் நெடு­நாட்­க­ளுக்கு வியப்­போகும் அதிர்ச்­சி­யோடும் பேசப்­படும் மற்­றொரு விடயம். கல்­வியும் நாக­ரி­கமும் பெருகி, விஞ்­ஞானம் பல விந்­தைகள் புரிந்­துள்ள இந்தக் காலத்தில் யுத்­தமும் கொலையும் வன்­மு­றையும் தினம் தினம் நாம் பார்க்­கிற கேள்­விப்­ப­டு­கிற விட­யங்­க­ளாகி விட்­டன. இதே­தொ­டர்பில் கல்­வியும் நாக­ரி­கமும் ஆண், பெண்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­யுள்ள இயல்பை மீறிய இறு­மாப்பும், ‘நான்’ என்ற கர்­வ­முமே காலங்­கா­ல­மாக நாம் கட்­டிக்­காத்­து­வந்த ஒழுக்கம், பண்­பாடு, கலா­சா­ரங்­க­ளையும் மீறி அன்பை முத­லாக்கி புரிந்­து­ணர்வில் கொண்­டு­போகக் கூடிய மண­வாழ்வில் பிணக்­கையும் பிள­வு­க­ளையும் ஏற்­ப­டுத்த முயல்­கின்­றனர்.

இந்த விட­யத்தை விவ­கா­ர­மாக்கி விவாதம் புரி­வது இக்­கட்­டு­ரையின் நோக்­கத்­திற்கு பொருத்­த­மா­யி­ராது. எனவே பொருள் முதல்­வாதம், அறி­வியல் வாதங்­களை முன்­வைத்து வாழ்க்­கையை நோக்கும் புத்­தி­ஜீ­வி­களை அருள் அல்­லது அன்­பு­முதல் வாதத்தை முன்­வைத்து உங்கள் குடும்­பத்தைப் பாருங்கள் என்று கூற­வி­ழை­கிறேன்.

தம்­ப­தி­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் ரேகைக்­கு­றிகள் சில­வற்றை இக்­கட்­டு­ரையில் அறி­மு­கப்­ப­டுத்­து­வது நல்­ல­தென்று நினைக்­கிறேன். எதிர்­கா­லத்தில் ஒரு­வ­ருக்கு நேரக்­கூ­டிய நன்மை தீமை­களை சோதி­ட­மூலம் முன்­கூட்­டியே அறி­வது அல்­லது அறி­விப்­பது அஞ்சி நடுங்கி நாளும் பொழுதும் நலிந்து போவ­தற்­கல்ல. நன்­மையை வர­வேற்­பது போல தீமை­யையும் அதற்­கேற்ப முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் எதிர்­கொள்ள எம்­மைத்­தயார் படுத்­து­வ­தற்கே வழி­பா­டு­களால் பரி­கா­ரங்­களால் அவற்றைக் கூடி­ய­வரை தவிர்ப்­ப­தற்கே!

ஒவ்­வொ­ருவர் கையிலும் பற்­பல விதங்­களில் ரேகை அமைந்­தி­ருப்­பதால் ஒரு ரேகைக்கும் மற்­றொரு ரேகைக்­கு­முள்ள சம்­பந்­தத்தைப் பொறுத்து (Combination) பலன் மாறு­பாடு அடை­யலாம். நல்­ல­தொரு ஐக்­கிய ரேகை அமைந்­துள்ள ஆண் அல்­லது பெண்ணின் கையில் (A) இரு­த­ய­ரேகை சனி மேட்­டுக்குக் கீழே இரு கிளை­க­ளாகப் பிரிந்து அதி­லொரு கிளை புத்­தி­ரே­கையை நோக்கி வளைந்து காணப்­பட்­டாலும்(B) மற்­றொரு கிளை குரு­மேட்டை அடைந்­தாலும் (C) புத்­தி­ரே­கை­யி­லி­ருந்து ஒரு கிளை தோன்றி ஆயுள் ரேகையைத் தாண்டி செவ்வாய் மேட்டை அடைந்­தாலும் (D) இரு­தய புத்­தி­ரே­கை­க­ளுக்­கி­டையில் இடை­வெளி மிகக்­கு­றுகிக் காணப்­பட்­டாலும் மன­மொத்து மங்­க­ள­க­ர­மாக நடந்த திரு­ம­ணத்­திற்குப் பிறகு சில ஆண்­டு­களோ சில மாதங்­களோ சென்ற பின்னர் தம்­ப­தி­க­ளி­டையே திடீ­ரென சில கருத்து முரண்­பா­டுகள் தோன்றி கண­வனும் மனை­வியும் பிரிந்து வாழ வேண்­டிய நிலை அல்­லது மீண்டும் இணை­யவே முடி­யா­த­படி பிளவு ஏற்­ப­டு­கிற நிலை உரு­வாகி பெருத்த மனக்­க­வ­லையைக் கொடுக்கும்.

இத்­த­கைய பிரி­வி­னையை மேற்­சொன்ன ரேகை அமைப்பு முன் கூட்­டியே காட்­டி­விடும். ஏனெனில் (1) நல்­ல­தொரு ஐக்­கிய ரேகை அமைப்பால் நல்­ல­தொரு இடத்தில் நற்­கு­ண­முள்ள ஒரு­வரை மணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்­படும். (2) சனி மேட்­டுக்குக் கீழே இரு­தய ரேகை கிளை­யாக பிரிந்­தி­ருப்­பதால் இணைந்து வாழ்ந்த அத்­தம்­ப­தி­க­ளி­டையே விதி­வ­சத்தால் மனக்­க­சப்பு ஏற்­பட்டு பிரி­கிற சூழ்­நிலை ஏற்­படும் (3) புத்­தி­ரே­கை­யி­லி­ருந்து ஒரு கிளை ரேகை தோன்றி ஆயுள்­ரே­கையை வெட்டிக் கொண்டு செவ்வாய் மேட்­டிற்குச் செல்­வதால் (D) நன்கு ஆலோ­சித்து பல­ர­றி­யவும் வாழ்த்­தவும் திரு­மணம் செய்­து­கொண்டு அன்­புடன் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்­கை­யிலே ஆய்ந்­தோய்ந்து பாராத அவ­சர புத்­தி­கா­ர­ண­மாக பிரச்­சினை உரு­வாகி பிரி­வினை ஏற்­ப­டு­கிற நிலையும் உண்­டாகும். (4) இரு­தய புத்­தி­ரே­கைகள் ஒன்­றை­யொன்று நெருங்கிச் செல்­வதால் சுய­நலம் சந்­தேகம் குறு­கிய புத்தி போன்­ற­வை­களால் தாம்­பத்­தி­யத்­திற்கே மேன்­மை­தரும் பரஸ்­பரம் விட்­டுக்­கொ­டுக்கும் மனப்­பான்­மைக்கு இடம்­கொ­டாமல் பிரி­வி­னைக்கு வித்­திடும் வாய்ப்பு உண்­டாகும்.

இந்­தப்­பி­ரி­வி­னைக்கு பரி­காரம் இல்­லையா? ஏன் இல்லை?

பாச­மா­னாலும் நட்­பா­னாலும் காத­லா­னாலும் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு முதற்­கா­ரணம் நம்­முள்ளே நம்மை மீறி எழு­கின்ற கோப­தாப உணர்ச்­சி­க­ளே­யாகும். நமக்­குள்ள அறி­வாற்­றலால் சிந்­திக்கும் திற­மையால் பொறு­மையால் கோப­தா­பங்­களை ஆத்­திர அவ­ச­ரங்­களை கட்­டுப்­ப­டுத்தி ஆற அமர சிந்­தித்துப் பார்க்க முடிந்தால் இது போன்ற எவ்­வ­ளவோ குடும்பப் பிரச்­சி­னை­களை தவிர்க்க முடியும்.

மண­வாழ்வில் வரு­கிற பிரச்­சி­னை­க­ளுக்­கெல்லாம் செவ்வாய்க் கிர­கத்­தையும் கதிர்­கா­மக்­கந்­த­னையும் அர்ச்­ச­னை­செய்து ஆரா­தித்தால் பரி­காரம் கிடைக்­கு­மென சோதி­டர்கள் கூறு­கின்­றனர். அத்­துடன் விதி­வ­சத்தால் ஏற்­ப­டு­கிற சங்­க­டங்­க­ளுக்கு கார­ண­மான சனி­ப­க­வா­னையும் அறி­வாற்­றலைத் தரு­கின்ற குரு­ப­க­வா­னையும் கூட கிர­கப்­பி­ரீதி செய்து வழி­ப­டு­வதால் தம்­ப­தி­க­ளி­டையே பிரிவு நீங்கி ஒற்­றுமை ஓங்க வழி­யேற்­ப­டு­மென அவர்கள் மேலும் கூறு­கின்­றனர்.
இதில் முக்­கி­ய­மாகக் கவ­னிக்க வேண்­டி­யது யாதெனில் இதர ரேகைகள் பிழை­பட்­டி­ருந்­தாலும் சின்னி விரலின் கீழுள்ள புதன்­மேட்டின் பக்­க­வாட்டில் சிறு ஒற்றைக் கோடாய் அமைந்­துள்ள ஐக்­கிய ரேகை சிறப்­பாக அமைந்­தி­ருக்கக் காணப்­பட்டால் (A) மாத்­தி­ரமே பரி­கா­ரங்கள் செய்­வதால் பயன் கிடைக்கும் ஆனால் ஐக்­கிய ரேகை­யிலும் குறை­பாடு காணப்­பட்டால் என்ன தான் பரி­கா­ரங்கள் செய்­தாலும் சரி பிர­யத்­த­னங்கள் செய்­தாலும் சரி பல­னில்­லாமல் போகும்.
இரா­ஜ­யோகம்

உள்­ளங்­கையில் காணப்­படும் பிர­தான ரேகை­க­ளான ஆயுள், புத்தி, இரு­தய ரேகைகள் ஒன்­றை­யொன்று தொடாமல் வில­கி­யி­ருந்தால் அத்­த­கை­ய­வ­ருக்கு இரா­ஜ­யோகம் ஏற்­படும்.
இரா­ஜ­யோகம் என்றால் அர­ச­னாக முடி­சூ­டிக்­கொள்­வது என்று அர்த்­த­மல்ல. தமக்கு இயல்­பா­கவே ஆர்­வ­முள்ள துறை­களில் அல்­லது தான் ஆர்­வத்­துடன் ஈடு­ப­டு­கிற துறை­களில் முன்­னேறி ஓர் அர­ச­னுக்கு நிக­ரான அந்­தஸ்தை பெறு­வ­தாகும். உதா­ர­ண­மாக அர­சி­யலில் ஆர்வம் கொண்டு ஈடு­ப­டு­பவர் எம்.பியாக, அமைச்­ச­ராக கால­க­தியில் மாறுவார். வியா­பா­ரத்தில் ஆர்­வத்­துடன் ஈடு­ப­டு­பவர், கம்­ப­னிக்கு முத­லா­ளி­யாக ஏற்றம் பெறுவார். உத்­தி­யோகம் பார்ப்­பவர் விரைவில் உயர் பத­வியை அடைவார். ஓர் எழுத்­தா­ள­ராயின் நாட­ளா­விய ரீதியில் பல­ராலும் புக­ழப்­ப­டு­கிற ஒரு படைப்­பா­ளி­யாக பரி­ம­ளிப்பார்.

அதே­வேளை விதி­ரே­கையும் (E) சூரி­ய­ரே­கையும் (F) ஆரோக்­கிய ரேகையும் (G) மேற்­படி இரு­தய, புத்தி, ஆயுள் ரேகை­களை தொட்டுக் கொண்டோ ஊடு­ரு­வியோ சென்றால் இரா­ஜ­யோ­கத்­துடன் நிபு­ணத்­துவ யோகமும் ஏற்­படும். இரா­ஜ­யோகம் பெற்ற அர­சி­யல்­வா­திக்கு நிபு­ணத்­துவ யோகமும் சேர்ந்தால் பல அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்று திறம்­பட நிர்­வ­கிப்­பதும் முக்­கிய பிரச்­சி­னைகள் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொண்டு தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்­பதும் இந்த ஆறு ரேகை­களும் ஒன்­றோடு ஒன்று தொடர்புபடு­வதால் ஏற்­ப­டு­கிற விளைவின் பய­னாக அமையக் கூடி­யது.

ஒரு நடிகர் நடிப்­ப­தோடு மாத்­திரம் நில்­லாமல் பாடியும் ஆடியும் இயக்­கியும் இசை­ய­மைத்தும் பல்­சுவை வேந்­த­னாக காட்­சி­த­ரு­வது உண்­டல்­லவா? அது மேற்­படி ஆறு ரேகை­களும் இணைந்து முக்­கோ­ண­மா­வதால் உண்­டா­கிற அதிர்ஷ்­டத்­தினால் ஏற்­ப­டு­வ­தாகும். இத்­த­கைய ரேகை­களின் அமைப்பால் ஏற்­ப­டு­கிற முக்­கோ­ணக்­குறி, சது­ரக்­குறி போன்­ற­வை­களைக் கொண்டு ஒரு­வரின் திற­மையை, ஆரோக்­கிய நிலையை, செல்வச் செழிப்பை அள­விட்டுக் கூற முடியும். இந்த ரேகை­க­ளுக்­கி­டையே ஏற்­ப­டு­கின்ற வளைவு நெளி­வுகள் மற்றும் செவ்வாய், சுக்­கிர, சந்­திர மேடு­க­ளி­லி­ருந்து வரு­கிற செல்­வாக்கு ரேகை­க­ளினால் ஏற்­ப­டு­கிற முக்­கோண, சதுர அமைப்­புகள் ஆகி­ய­வை­களும் மேற்­படி யோகங்கள் ஏற்­பட அல்­லது ஏற்­ப­டா­ம­லி­ருக்க முக்­கிய கார­ணங்­க­ளாக அமை­கின்­றன. ஆரோக்­கிய ரேகையும் சூரி­ய­ரே­கையும் புத்­திர ரேகை­யுடன் சேர்ந்து ஏற்­ப­டுத்­து­கின்ற முக்­கோ­ணக்­கு­றி­யா­னது (H) அவ்­விதம் கையில் அமைந்­த­வரை சிறந்த எழுத்­தா­ள­ராக்­கு­கி­றது. அல்­லது அவர் நடிப்­புத்­தி­ற­மை­யு­டை­ய­வ­ராக இருந்தால் சங்­கீதப் புலமை மிக்­க­வ­ரா­யி­ருந்தால் அத்­து­றை­களில் ஈடு­பட்­டுள்ள இதர கலை­ஞர்­களை விட புகழ் பெறு­வ­தற்கும் இது வகை செய்­கி­றது.

இத்­த­கைய அமைப்பின் மூலம் முக்­கி­ய­மான மூன்று அம்­சங்­களை நாம் அறிந்து கொள்ள முடியும். 1. கலைத்­து­றையில் மேம்­பாட்டை சூரிய ரேகையும் 2. சிறந்த முறையில் புக­ழ­டையும் வித­மாக அந்தத் துறையில் ஆழ்ந்த புலமையை பெறத்தக்க அறிவினைத் தருகின்ற புத்திரேகையும் 3. அத்தகைய கலைஞர்கள் தங்களது தொழிலை வியாபார ரீதியில் செய்து பெரும்பொருளீட்டவும் எக்காலமும் நின்று நிலைக்கின்ற புகழைத் தருகின்ற நிலையை ஏற்படுத்தவும் காரணமான ஆரோக்கியரேகை எனப்பட்ட புதன் ரேகையும் ஒன்று கூடுவதன் மூலமே இந்நிலை உருவாகிறது. எவ்வித குற்றம் குறைகளுமில்லாமல் சீராகவும் நேராகவும் அமைந்த இத்தகைய முக்கோணத்தை உடையவர்கள் கண்டிப்பாக உன்னத நிலைக்கு வந்தே தீருவார்கள். இதனை “இராஜயோக முக்கோணம்” எனலாம்.

சுக்கிர மேட்டிலிருந்து வருகிற ஒரு செல்வாக்கு ரேகை இந்த முக்கோணத்திலுள்ள சூரிய ரேகையுடன் இணைந்தால் (J) நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரால் இந்த ரேகைக் குறியை உடைய நபர் இந்த இராஜயோகத்தை அடைகிறார் என்று பொருள். இப்படிப்பட்ட அமைப்பு ஒருவருக்கு இருந்தும் அவர் முன்னுக்கு வரவில்லை என்றால் அவர் முயற்சி செய்யும் அளவுக்கு வெற்றியை தருவதற்கு அவரது விதி ரேகை (E) சரியாக அமையவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.

 திரு­வோணம்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல