திங்கள், 8 ஆகஸ்ட், 2016

விண்டோஸ் 10 சில புதிய விநோதங்கள்

விண்டோஸ் 10ல், மைக்ரோசாப்ட், மக்கள் விரும்பும் அனைத்தையும் மீண்டும் கொண்டு வந்துள்ளது. அத்துடன் பல புதிய வசதிகளையும் அளித்துள்ளது. அந்தப் புதிய வசதிகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.



ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க் டாப் விண்டோக்கள்: விண்டோஸ் இயக்கத்தில் ஒரே ஒரு விண்டோவில் நாம் செயல்பட்டு வருகிறோம். திரையில் ஒரு வேளையில், ஒரு விண்டோ கிடைக்கும். இதுவே பின் நாளில், சிறியதாக விண்டோக்களை மினிமைஸ் செய்து இயக்கிக் கொண்டிருந்தோம். விண்டோஸ் 10, 'விர்ச்சுவல் டெஸ்க்டாப்' என்ற வசதியைப் புதியதாகத் தந்துள்ளது. ஒரே திரையில், நாம் செயல்பட கூடுதலாக இடம் இதனால் கிடைக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ். எக்ஸ் இயக்க முறைமையிலும் இதே போல் வசதி உள்ளது. ஆப்பிள் அதனை Spaces என அழைக்கிறது. விண்டோஸ் 10ல் தற்போது இது தரப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் டெஸ்க்டாப் ஒன்றை உருவாக்க, "Task View" ஐகான் மீது கிளிக் செய்திட வேண்டும். இந்த ஐகான், டாஸ்க் பாரில், இடது பக்கமாக விண்டோஸ் ஐகான், அடுத்து சிறிய வட்டமாக கார்டனா ஐகான் ஆகியவற்றை அடுத்து நீள் சதுர கட்டத்தில் கைப்பிடி அமைந்தது போல் இருக்கும். இது காணப்படவில்லை என்றால், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Show Task View Button என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடன் இந்த ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், தொடர்ந்து, "+ New desktop" என்ற ஐகான் வலது கீழ் மூலையில் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், தற்போது இருக்கும் விண்டோ டெஸ்க்டாப் திரையுடன் கூடுதலாக இன்னொரு விண்டோ டெஸ்க் டாப் தரப்படும். இதில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷனை இழுத்துச் சென்று விட்டு, பயன்படுத்தலாம். ஏற்கனவே நீங்கள் ஒரு டெஸ்க்டாப்பில், மூன்று அப்ளிகேஷனப் பயன்படுத்தி இருந்தால், அவை மொத்தமாகக் காட்டப்படும். இதிலிருந்தும் ஓர் அப்ளிகேஷனை இழுத்துப் புதிய விர்ச்சுவல் டெஸ்க்டாப்பில் அமைத்து இயக்கலாம். இது போல பல விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோக்களை "+ New desktop" என்பதில் கிளிக் செய்து பெற்று இயக்கலாம்.

திரைக் காட்சியைப் படம் பிடிக்க: பல நேரங்களில் நமக்கு, நாம் இயங்கிக் கொண்டிருக்கும் திரையில் தோன்றும் காட்சியைப் பட பைலாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். விண்டோஸ் இயக்கத்தில் இதற்குப் பல வழிகள் உள்ளன. எளிதான இரண்டு வழிகளை நாம் அனைவரும் அறிவோம். விண்டோஸ் 10ல் இதற்கான வழிகள் எளிமையாக உள்ளன. இதில் முதலாவதாக, Windows + Prt Scn ஆகிய கீகளை அழுத்தலாம். அல்லது Prt Scn கீயை மட்டும் அழுத்தலாம். Windows + Prt Scn கீகள் அழுத்தப்படுகையில், திரைக் காட்சி முழுவதுமாகக் காட்சியாகப் பிடிக்கப்பட்டு, Pictures போல்டரில் உள்ள Screenshots போல்டரில் பதியப்பட்டு வைக்கப்படுகிறது. Alt + Prt Scn அழுத்துகையில், காட்சி பிடிக்கப்பட்டு, கிளிப் போர்டில் வைக்கப்படுகிறது.
இதனை நாம் இமேஜ் எடிட்டர் செயலி (Photoshop அல்லது Paint) ஒன்றில் பேஸ்ட் செய்து, நாம் விரும்பும் பைல் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ள Snipping Tool இந்த காட்சியை நாம் விரும்பும் வகையில் அமைத்திட கூடுதல் வசதிகள் தந்து உதவுகிறது. செவ்வக அளவில், குறிப்பிட்ட விகித அளவில் மற்றும் முழு விண்டோவாக எனப் பல அளவுகளில், காட்சியைப் பட பைலாக அமைத்துக் கொள்ளலாம். யு ட்யூப் விடியோ காட்சிகளைப் படமாக எடுக்கையில், அதன் கட்டுப்பாடு அமைப்புகள் மறையும் வரை காத்திருந்து படமாகப் பதியும் வசதியும் தரப்பட்டுள்ளது.

விண்டோவினை மினிமைஸ் செய்திட: இது ஒரு வித்தியாசமான வசதி. செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ ஒன்றினை, டாஸ்க் பாரில் மினிமைஸ் செய்திட, நாம் வழக்கமாக, வலது மூலையில் உள்ள சிறிய கட்ட ஐகானில் கிளிக் செய்திடுவோம். செயல் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ தவிர, மற்றவற்றை மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் 10 வழி கொண்டுள்ளது. விண்டோஸ் 1-0ல், அந்த விண்டோவின் டைட்டில் பாரில், மவுஸால் அழுத்திப் பிடித்து சிறிது வலது இடமாக அசைத்தால், மற்ற அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் ஆகிவிடும்.

விண்டோவை இழுத்து அமைக்க: விண்டோவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அதனைத் திரையில் நாம் விரும்பும் ஒரு மூலையில் இழுத்துச் சென்று வைக்கலாம். இதன் மூலம், மானிட்டர் திரையின் முழுப் பகுதியைப் பல வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இது எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம். ஒரு விண்டோவை, இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால், அது பாதியாக மாறும். இதையே ஒரு மூலைக்கு இழுத்தால், அது நான்கில் ஒரு பங்காக மாறும். ஒவ்வொரு மூலையிலும் சரியாக அமையும்படி அது அமைக்கப்படும். இதே விண்டோவினை மேலாக இழுத்தால், அது முழு திரையாகக் காட்டப்படும்.

கார்டனாவுடன் பேசலாம்: விண்டோஸ் 10ல் வழங்கப்பட்டுள்ள கார்டனா என்னும் நம் உதவியாளர் செயலி, மிகவும் பயனுள்ளதாக, கம்ப்யூட்டரில் அரிய பல செயல்களை மேற்கொள்வதாக உள்ளது. இதனை நம் குரல் மூலமும் இயக்கலாம்; டெக்ஸ்ட் மூலமும் இயக்கலாம். எடுத்துக் காட்டாக, "find photos from last August" என்று கட்டளை கொடுத்தால், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கப்பட்டு, பதிந்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்களை எடுத்துக் காட்டும். நீங்கள் விண்டோஸ் காலண்டரில் உங்கள் நிகழ்வுகளைப் பதிந்து வைத்தால், என்ன என்ன வேலைகள் பாக்கி உள்ளன என்று கார்டனா காட்டும். Do I have any appointments next week? என்று கேள்வி கேட்டால் போதும்.

பேட்டரி சேவர்: இந்த உதவிக் குறிப்பு லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கே. மேலும் சர்பேஸ் போன்ற ஒன்றில் இரு சாதன இயக்கங்களைக் கொண்டுள்ள சாதனங்களுக்கு மட்டுமே. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் உள்ள பேட்டரி சேவர் போல இது செயல்படுகிறது. விண்டோஸ் 10ல், இதனை இயக்கிவிட்டால், பின்புலச் செயல்பாடு சுருக்கப்படும். அல்லது நிறுத்தப்படும். நோட்டிபிகேஷன்ஸ் எனப்படும் திடீர் அறிவிப்புகள் நிறுத்தப்படும். லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள மின் சக்தி 20% அளவிற்குச் செல்கையில், பேட்டரி சேவர் தானாக இயக்கப்படும். இதில் முழுமையான பயனை அடைய, எந்த எந்த செயலிகள், பின்புலத்தில் இயக்கப்பட வேண்டும் என்பதை அமைக்கலாம். இதனை இயக்க Settings > System > Battery saver என்று சென்று இயக்கி வைக்கலாம்.
மேலே சொல்லப்பட்ட குறிப்புகள், விண்டோஸ் 10 இயக்கத்தினை விரும்பி அமைக்க திட்டமிடுபவர்களுக்கு உற்சாகத்தினைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள எண்ணுபவர்களின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல