எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், நாம் குறித்து வைக்கும் இணையத் தளங்களுக்கான லிங்க் முகவரிகள், “Favorites” என அழைக்கப்படுகின்றன. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர்களில் இவை “Bookmarks” எனக் காட்டப்படுகின்றன. எந்தப் பெயரில் அழைத்தாலும், இவை ஒன்றையே குறிக்கின்றன. எட்ஜ் பிரவுசரில், பேவரிட் தளங்கள் குறித்த குறிப்பு எங்கு பதியப்படுகின்றன என்று தெரிந்தால், அவற்றை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.
இதற்கு பைல் எக்ஸ்புளோரரைத் திறக்கவும்.
பின்னர், கீழே காட்டப்பட்டுள்ள வழியாகச் செல்லவும். அல்லது அப்படியே காப்பி செய்து, பைல் எக்ஸ்புளோரரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டவும்.
C:\Users\username\AppData\Local\Packages\Microsoft.MicrosoftEdge_8wekyb3d8bbwe\AC\MicrosoftEdge\User\Default
இங்கு காட்டப்படும் பக்கத்தில் Favourite என்னும் போல்டரைத் தேடிக் கண்டறிந்து திறக்கவும். இதில் உங்களுடைய பேவரிட் தளங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கும்.
அவற்றை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.
இந்த தொகுப்பு முழுவதையும் பாதுகாப்பாக பேக் அப் எடுத்து வைத்திட, மேலே காட்டப்பட்டுள்ள வழியினை (Path) அப்படியே காப்பி செய்து, கம்ப்யூட்டரில் வேறு ஒரு டைரக்டரி அல்லது போல்டரில் போட்டு வைக்கலாம். மீண்டும் அதே கம்ப்யூட்டரிலேயே அல்லது வேறு ஒரு கம்ப்யூட்டரில் இவை வேண்டும் என்றால், மீட்டு, பழைய இடத்தில் அல்லது புதிய கம்ப்யூட்டரில் இதே டைரக்டரியில் போட்டு வைக்கலாம். உங்களுக்கு இன்னொரு போனஸ் டிப் தருகிறேன்.
நீங்கள் டவுண்லோட் செய்த இணையப் பக்கங்கள், கோப்புகள், படங்கள் மற்றும் பிற டாகுமெண்ட்ஸ் அனைத்தும் எட்ஜ் பிரவுசரில், கீழ்க்காணும் முகவரியில் கிடைக்கும்.
C:\Users\username\AppData\Local\Packages\Microsoft.MicrosoftEdge_8wekyb3d8bbwe\AC\MicrosoftEdge\User\Default\DownloadHistory

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக