வாட்ஸ் அப் செயலி, ஐபோனில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போனில் இயங்கும் வாட்ஸ் அப் செயலியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் தரப்பட்டுள்ளன.
குறிப்பாக, அண்மையில் இது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பு எண் 2.17.1. இதனை https://www.whatsapp.com/download/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெறலாம்.
இங்கு ஆண்ட்ராய்ட், ஐபோன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிற்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐபோனுக்கானதை ஆப்பிள் ஸ்டோரிலும் பெறலாம்.
புதியதாக மேம்படுத்தப்பட்டுள்ள ஐபோன் வாட்ஸ் அப் செயலியில் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. தகவல்கள் அனுப்பவும், பைல்களைப் பகிர்ந்து கொள்ளவுமே வாட்ஸ் அப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தற்போது 30 போட்டோக்களை அல்லது விடியோக்களை ஒரே அனுப்புதலில் அனுப்பலாம். முன்பு பத்து போட்டோக்கள் மட்டுமே அனுப்ப முடியும்.
ஆண்ட்ராய்ட் போனில் தரப்பட்ட இன்னொரு வசதி தற்போது ஐபோனுக்கான பதிப்பில் தரப்பட்டுள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத போது, அனுப்ப வேண்டியவற்றை, வரிசையில் அமைத்து வைக்கலாம். எப்போது இணைய இணைப்பு கிடைக்கிறதோ, அப்போது அவை அனுப்பப்படும்.
மேலும் தரப்பட்டுள்ள புதிய வசதி ஸ்டோரேஜ் தொடர்புடையது. முன்பு, எத்தனை டெக்ஸ்ட், ஜிப் பைல், வாய்ஸ் மெசேஜ், தொடர்புகள் எத்தனை என்று காட்டப்படும்.
எவ்வளவு இடம் பிடித்துள்ளது என்றும் தெரிய வரும். இப்போதைய திரையில், பயனாளர்கள் இந்த தகவல் பிரிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துக் காணலாம். எடிட் செய்திடலாம். குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தினை நீக்கலாம்.
இந்த புதிய வசதிகளை Settings, Data and Storage Usage, Storage Usage, என்று சென்று, தொடர்பு ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, Clear Chat கிளிக் செய்து தகவல்களை நீக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக