இந்து திருமணச் சட்டத்தில், என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து செய்யலாம் என சில செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று திருமணமான தம்பதியரிடையே ஒருவர் வேற்று மதத்திற்கு மாறிவிட்டால் அதன் காரணமாகக் கூட, மற்றவர் விவாகரத்து கோரலாம்.
தம்பதியரில் ஒருவர், 'மத மாற்றம் காரணமாக விவாகரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க மற்றவரிடம் தான் மதம் மாறப் போவதைச் சொல்லி அதன் பின் மதம் மாறினாலும் கூட, மற்றவர் அதே காரணத்தைச் சொல்லி விவாகரத்துக் கோரலாம் என கேரள வழக்கொன்றில் முடிவானது.(Suresh Babu Vs V.P.Leela AIR2007(NOC)285(Ker)(D.B)இங்கே மத மாற்றம் என்பது எப்போதுமே விவாகரத்திற்கான காரணங்களில் மாற்றப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆக தம்பதியரில் மற்றவரின் அனுமதியுடன் மதமாற்றம் நடந்திருந்தாலும் அது விவாகரத்திற்கான காரணமாகலாம்.
அதே போலவே, இந்து திருமணச் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியரில் ஒருவர் திருமணத்திற்குப் பின் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவராக மாறி விடுகிறார். இந்நிலையில், அவர் மதம் மாறியதைக் காரணம் காட்டி மற்றவர் விவாகரத்து பெற முடியும். ஆனால், அவர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறி விடுகிறார். அதாவது, இந்து திருமணச் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியரில் ஒருவர் கிறிஸ்தவராகவும், இன்னொருவர் இஸ்லாமியராகவும் மாறி விடுகின்றனர்.சரி.
இந்நிலையில் விவாகரத்து செய்ய இயலுமா? இவர்கள் இன்றைய சட்டப்படி விவாகரத்தே செய்ய இயலாது. இங்கே ஒருவர் மட்டும் மதம் மாறி இருந்தால் அதைக் காரணம் காட்டி மற்றவர் அவர்களுக்குத் திருமணம் நடந்த இந்து திருமணச்சட்டத்தின் படி விவாகரத்து பெற்றிருக்கலாம்.
ஆனால், மற்றவரும் மூன்றாவதான ஒரு மதத்திற்கு சென்றுவிட்டபடியால் இந்து திருமணச்சட்டத்தின் படி விவாகரத்து பெற இயலாது. ஏனெனில், இப்போது அவள் இஸ்லாமியப்பெண்.
அதே போலவே, அந்த ஆணும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டபடியால் அவனுக்கு கிறிஸ்தவச் சட்டமே பொருந்தும். கிறிஸ்தவ மணமுறிவுச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய மணமுறிவுச் சட்டத்தினால் மாற்றி அமைக்கப்பட்ட பிரிவு 10(1)(ii) ன் படி (has ceased to be Christian bu conversion to another religion: or)**கிறிஸ்தவ தம்பதியரில் இருவரில் ஒருவர் கிறிஸ்தவரிலிருந்து பிரிந்து வேறு மதம் போனால்தான் அவர்களுக்கிடையே திருமணம் கலைக்கப்படும். ஆனால், மனைவியோ இந்துவிலிருந்து இஸ்லாத்திற்கு சென்றவர்.
எனவே இந்த சட்டத்தின் படியும் மண முறிவு பெற இயலாது.இந்து தம்பதி இருவரும் திருமணத்திற்குப் பின் வெவ்வேறு மதங்களுக்கு மாறினாலும், அம் மத மாற்றாத்தினால் விவாகம் ரத்தாக முடியாது.
Section 10 in THE DIVORCE ACT 186910 Grounds for dissultion of marriage.(1)Any marriage solemnized, whether before or after the commencement* of the Indian Divorce (Amendment)Act,2001, may on a petition presented to the District Court either by the husband or the wife, be dissolved on the ground that since the solemnization of the marriage, the respondent(i)has committed adultery: or(ii)has ceased to be Christian bu conversion to another religion:
or
ஒரு இந்துப் பெண் இஸ்லாமியரை மணப்பதன் மூலம் இஸ்லாமியரான பின், தன் சாதிச் சான்றிதழில் கணவனின் சாதியான லெப்பை என சாதிச்சான்றிதழ் பெற விண்ணப்பித்தார்.
ஆனால், அவர் மதம் தான் மாற முடியுமே தவிர சாதி மாறியதாக விண்ணப்பிக்க இயலாது என முடிவு கூறப்பட்டது.இஸ்லாமிய லெப்பை எனும் ஜாதிப் பிரிவைச் சார்ந்த முகமது ஆசாத் என்பவரை இந்து செங்குந்தர் ஜாதியைச் சேர்ந்த பிரேமாவதி திருமணம் செய்து கொண்டார்.
இஸ்லாமிய முறைப்படி தன் பெயரை ஏ.பாத்திமா என மாற்றிக் கொண்டார்.இதைத் தொடர்ந்து கணவரின் ஜாதிப் பிரிவான இஸ்லாமிய லெப்பை எனும் பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் கோரி காஞ்சிபுரம் துணை தாசில்தாரிடம் விண்ணப்பித்து சான்றிதழும் பெற்றார். பின்னர், ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பதவிக்காக நடத்திய தேர்வில் கலந்து கொண்டார்.
ஆனால், என்.டி.எஸ்.சி. இவரை சான்றிதழின்படி பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் சேர்க்காமல் இதர பிரிவில் சேர்த்துள்ளனர். இதை எதிர்த்தும். பிற்படுத்தப்பட்டோர் என சாதி சான்றிதழோடு வேலை வாய்ப்பும் வேண்டும் என என்.டி.எஸ்.சி க்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அவர்களின் உத்தரவானது: திருமணம் காரணமாக தன் மதத்தை மாற்றிக்கொள்ளலாமே ஒழிய சாதியை மாற்றிக்கொண்டு வேலை வாய்ப்புகளைப் பெற முடியாது என ஏற்கனவே உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, காஞ்சிபுரம் தாசில்தாரிடமிருந்து பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிச் சான்றிதழ் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.இதன் படி, மதம் மாறலாம் சாதி மாற முடியாது.இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடக்க வேண்டுமெனில் ஆண்,பெண் இருவருமே இஸ்லாமியராக இருக்க வேண்டும்.
மாற்று மதத்தினராயின், அவர் இஸ்லாமியராக மாறிய பிறகே இஸ்லாமியரை மணக்க முடியும். இஸ்லாமிய ஆண் ஒருவர் சிலை அல்லது தீ வழிபாடு செய்பவரை மணந்து கொள்ள முடியாது. அப்படியும் மணந்து கொண்டால் அது “ஃபாசிட்” எனப்படும். இஸ்லாம் சட்டப்படி இத்திருமணம் செல்லத்தக்கதில்லை.
ஆனால், இத்திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் முறைமணப்பிறப்பாகவே கருதப்படும் என்று கேரளா உயர்நீதி மன்றம் இரண்டாம் மேல்முறையீட்டுத் தீர்ப்பு ஒன்றில் தீர்ப்புரைத்தது.
இஸ்லாமிய ஆண் வேற்று மதப்பெண்ணை மணக்க இயலாது. அப்படி மணந்தால் அத் திருமணம் செல்லத்தக்கதல்ல.இது வரை மதமும் சட்டமும் பகுதியில் ”மத மாற்றமும் சட்டமும்” சில வழக்குகளின் துளிகளைப் பார்த்தோம். இவை கொஞ்சம் அடிபப்டையை அறிய மட்டுமே உதவும். இனி அடுத்தடுத்த கட்டுரைகளில், மத சட்டங்களும் பெண்களும், பொது சிவில் சட்டம் என இன்னும் பலவற்றைக் குறித்து பார்க்கவிருக்கிறோம்.
- ஹன்ஸா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக