திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 2

இந்து மத வழக்கப்படி இந்து தர்ம சாஸ்திரங்களின் படிதிருமணம் செய்வதாக இருந்தால் முன்பு, நிச்சயதார்த்தம், ஹோமம், சப்தபதி இம்மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும்எனும் நியதி இருந்தது.பின்பு, 1955 -ல் அந்த இந்து திருமணச் சட்டத்தில், அதன்பிரிவு 7 திருமணச் சடங்குகளை வலியுறுத்துகிறது.



ஆனால்இன்ன வகையில்தான் சடங்குகள் இருக்க வேண்டும்என்றில்லாமல், ஆண்/பெண் இருவரின் எந்த ஒருவரின்வழக்கப்படியும் அமையலாம் என்கிறது.சப்தபதி எனும் ஹோம அக்னியை ஏழு முறை சுற்றிவரும்வழக்கம் இருப்பின் அதுவே திருமணம் நடந்ததற்கான முற்றுஎன சட்டம் சொல்கிறது.ஆனால், அந்த வழக்கம் இல்லாத குடும்பம் எனில், அந்தகுடும்பத்தில் எது திருமணம் முடிந்ததற்கான முற்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதையே திருமணமாக சட்டம்ஏற்கவே செய்கிறது.

ஒவ்வொரு வகுப்பிலும் திருமணம்பூர்த்தியாவதற்கு அடையாளமாக எந்த நிகழ்வுகொள்ளப்படுகிறதோ அதை சட்டம் ஏற்கிறது.இதைப் போலவே இஸ்லாம் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், இந்துவிலிருந்து இஸ்லாமியராக மாறிய குஜராத், கட்ச்பகுதியில் இருந்த மேமன்கள் ஆகிய இவர்கள்வாழும்பொழுது இஸ்லாமியராகவும் இறந்த பின் இந்துசட்டத்தின் மிதாஷர முறைப்படி சொத்துப் பகிர்வும் நடைமுறையில் இருந்தது.

ஆனால், அதன் பின் ஷியா, சன்னி இஸ்லாமியர்களுக்குப்பொருந்தும் விதமாக 1937 -ல் ஷரியத் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயான இனச்சட்டம் ஆகும்.இஸ்லாமியத் திருமணங்கள் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே.இந்து திருமணத்தைப் போல புனிதத்தன்மைபோற்றப்படுவதில்லை.

எனவே, இஸ்லாமிய திருமணங்களில்சடங்குகள் அதிகம் இல்லை.இந்த சட்டத்தின் 250 -ம் பிரிவு “நிக்காஹ் என்பதுகுழந்தைப் பிறப்பு மற்றும் அக்குழந்தைகளுக்கு சட்டத்துக்குநிலையளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒருஒப்பந்தமே” என்கிறது.

இதுவே அப்துல் காதிர் எதிர் சலிமாஎனும் வழக்கிலும் கூறப்பட்டது.இஸ்லாமிய நிக்காஹ்களில் மற்ற ஒப்பந்தங்களைப்போலவே சம்மதமா(concent) எனப் புரிவுரை(proposal) கேட்பது, சம்மதமெனில் ஏற்பது(acceptance) என நிக்காஹ்நடக்கிறது. மணமகளோ அல்லது அவளதுமுகவரோ(Agent) மணமகனோ, அவரது முகவரோ இருசாட்சிகள் முன்னிலையில் இசைவு தெரிவிக்க வேண்டும்.பர்தா முறை இருப்பதால், மணமகனின் முகவர் இருசாட்சிகளுடன் மணமகள் வீட்டிற்குச் சென்று ” மணமகன்இவ்வளவு மஹர் தொகை கொடுத்து உன்னை திருமணம்செய்து கொள்கிறார்.

உனக்குச் சம்மதமா?”என சாட்சிகள்காதில் விழுமாறு கேட்பார். சம்மதம் எனில், அவர்கள்முல்லாவின் முன் வந்தமர்வார்கள். அதே கேள்விமணமகனிடமும் கேட்கப்பட்டு, மஹர் தொகை உறுதிசெய்யப்பட்டு, நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் மணமக்கள்சாட்சிகளுடன் கையொப்பமிட்டு நிக்காஹ் நிறைவுறும்.இது ஒப்பந்தம் என்பதால், முனைவு ஒரு சமயத்திலும், ஏற்புமற்றொரு சமயத்தில் நடந்தால் அது ஏற்கக்கூடியது அல்ல.

கிறித்தவ திருமணங்களில், ஆண்/பெண் இருவரும்கிறித்தவர்களாயின் இந்திய கிறித்தவ திருமணச் சட்டம்1872-ல் குறிப்பிட்டபடி மட்டுமே நிகழ வேண்டும்.இச்சட்டத்தில் திருமணத்தை நடத்தி வைக்க அதிகாரம்பெற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளவர்களாலேயே (பிரிவு 5) திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும்.தாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை மதஅமைச்சருக்கு விண்ணப்பித்தால், அவர் அதனை, அனைவரும் பார்க்கும்படியாக தேவாலயத்தில்ஒட்டிவைப்பார்.திருமணம் தேவாலயத்தில் அல்லாமல் வேறு இடத்தில்நடக்கும் எனில் அதை மாவட்ட திருமணப்பதிவாளருக்கு(கிறித்தவ) அனுப்பி வைப்பார்.

அதை அவர்தன் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படிஒட்டி வைப்பார்.அந்தத் திருமணத்திற்கு சட்டப்படியான ஒப்புஇருதரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது என்பதை தரப்பினர்விளம்புதல்(Declaration) வேண்டும்.அதன்பின், மத அமைச்சர் சர்டிஃபிகேட் வழங்கியதிலிருந்துஇரண்டு மாத கால அவகாசத்திற்குள் திருமணம் நடந்தேறவேண்டும்.இந்து திருமணங்கள் பூர்வ ஜென்ம தொடர்பில் விளைபவைஎனும் கருத்தைக் கொண்டு, நிறைய சடங்குகளைக்கொண்டு நிறைவேற்றப்படுபவை. இஸ்லாமியத் திருமணங்கள் ஒப்பந்தங்கள். அவைதரப்பினரின் கருத்தை மட்டும் கணக்கில் கொண்டுசெயல்படுபவை.கிறித்தவர் திருமணங்கள் சமூகத்தின் ஏற்பை எதிர்பார்த்துநிகழ்பவை.அதே போல மணமுறிவு, தத்தெடுப்பு, என பலவற்றிலும்வெவ்வேறு மத முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்து திருமணங்கள் பூர்வ ஜென்ம பந்தம் என முன்புநினைக்கப்பட்டமையால் அங்கே விவாகரத்து பண்டையகாலங்களில் ஏற்கப்படவில்லை. ஆனால், 1955 -ல் வந்தஇந்து திருமணச் சட்டத்தினாலும், அந்த சட்டத்தில் ஏற்பட்டபல சீர்திருத்தங்களாலும், விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இஸ்லாத்தில் அது ஒரு ஒப்பந்தமே என்பதால், இணைந்தேவாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்காமல் விவாகரத்தைஏற்கிறது.கிறித்தவமானது ஒரு திருமணத்திற்கு சமூக அந்தஸ்தை, மதஏற்பைக் கோருவதால் அங்கே விவாகரத்துஏற்கப்படவில்லை. ஆனால், இந்திய கிறித்தவர்கள் இந்தியவிவாகரத்து சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறத் தடையேதும்இல்லை.இந்து திருமணச் சட்டம் 1955 -ல் திருமண தீர்வழிகள்சிலவற்றைச் சொல்கிறது.

அவையாவன:

1. தாம்பத்திய உறவு உரிமைகளை மீண்டும் கோரல்(பிரிவு 8)

2. நீதிமுறைப்பிரிவு (பிரிவு10)

3. இல்லாநிலை மற்றும் தவிர்த்தகு திருமணம்(பிரிவுகள் 11 7 12)

4. மண முறிவு (பிரிவு13)இஸ்லாத்திலும் மண முறிவுக்கான வகைகள்குறிப்பிடப்பட்டுள்ளன.

1. தலாக் அஸ் சுன்னத்: ஒரே ஒரு முறை தலாக்சொல்லிப் பிரிதல். மனைவியின் இரு மாதவிடாய்தீட்டுக்கு இடைப்பட்ட நாட்களில் ஒரு முறைதலாக் சொல்லி, அடுத்தடுத்து வருகின்ற இரண்டுதீட்டு காலங்களில் இருவரும் இணையாதிருந்துஅவ்விதம் இருக்கும் காலம் 'இத்தா' காலம்எனப்படுகிறது. அந்த கடைசி நாளன்று தலாக்முற்றுப் பெறும்.
அதாவது, அந்த கணவனின் கருஇவள் வயிற்றில் இல்லை என்பதை நிச்சயித்துக்கொள்வதாக அமைகிறது இந்த தலாக் முறை. இந்த தலாக்கை உடனேயே திரும்பப் பெறவும்முடியும்.

2. தலாக் ஹஸன்: மனைவியின் இரு அடுத்தடுத்ததீட்டுக் காலங்களுக்கு இடையே தலாக் சொல்லி, அதே போல மூன்று முறை அடுத்தடுத்ததீட்டுக்காலங்களுக்கிடையே சொல்லப்பட்டு, மேற்கண்டவாறே இணையாதிருந்தால், நான்காவது தீட்டுக்காலம் முடிந்த உடனேயேதலாக் முற்றுப் பெறும்.

3. தலாக் அல் பித்தத் மற்றும் தலாக் - அல்-பாய்ன்:கணவன் மனைவியிடம் ஒரே ஒரு முறை ”உன்னைமுத்தலாக் சொல்லிவிட்டேன்” என்றாலோ, மூன்றுமுறை தலாக் தலாக் தலாக் எனச் சொல்லிவிட்டாலோஅப்போதே மணமுறிவு ஆகிவிடும். ஆனால், இது குறித்துவெவ்வேறு கருத்துகள் இருந்த போதிலும், இஸ்லாமியசட்டத்தின் 322(3)-வது பிரிவு இதை அங்கீகரிக்கின்றது.இந்த தலாக்கை திரும்பப்பெற இயலாது.

4. தலாக் தஃபீஸ்:கணவனின் முகவராக இன்னொருவர் தலாக்சொல்வதை இஸ்லாமிய சட்டத்தின் பிரிவு 314(1), 314(2) ஏற்கிறது.

5. குலா:கணவனும் மனைவியும் சேர்ந்து செய்யும்உடன்படிக்கையின் வாயிலாகவும் மணமுறிவுபெறலாம்.இதில் மனைவியின் முன்னெடுப்பில்மணமுறிவு கோரப்படுகிறது. கணவன் மணமுறிவிற்குசம்மதிக்க வேண்டுமாயின், அதற்கு ஈடாகமனைவியானவள் அவளுக்குச் சேர வேண்டிய மகர்தொகையை விட்டுத்தரச்சொல்லி கணவன் கோரலாம்.அல்லது வேறு நிபந்தனைகளும் விதிக்கலாம். இதற்குமனைவி ஏற்றால், மணமுறிவு அளிக்கப்படுவதுடன், கணவனுக்கு அவனின் கோரிக்கையை நிறைவேற்றாஅவள் கடமைப்பட்டவளாகிறாள். அந்தத் தொகையைஅவன் நீதிமன்றம் சென்றும் கூட வசூலித்துக்கொள்ளலாம்.

6. முபாராத்:இந்த முறையில் இருவருமே மணமுறிவுக்கு விரும்பிஒப்பந்தம் செய்து கொண்டு பிரிவது.கிறித்தவத்தின் மணமுறிவு என்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், கிறித்தவ தம்பதியர்மணமுறிவினை இந்திய விவாகரத்துச் சட்டத்தின் கீழ்பெறலாம்.இந்த மூன்று மதங்களிலுமே, தம்பதியர் பிரிந்த பின், சுயசார்பு அற்ற ஒருவருக்கு மற்றவர் ஜீவனாம்சத்தொகை தர வேண்டும் என்கிறது சட்டம். இஸ்லாத்தில்மணப்பெண்ணுக்கு திருமண சமயத்திலேயே மஹர்தொகை தரப்பட்டுவிடுகிறது அல்லது தருவதாகஒப்பந்தம் இடப்பட்டு விடுகிறது.

ஆனால், அந்தத்தொகை, குலா போன்ற பெண்ணால்முன்மொழியப்படும் விவாகரத்தாக இருந்தால், கணவன்விரும்பினால் அந்தத் தொகையை திரும்பப்பெறுவதைஅல்லது மஹர் தொகை தருவதாகச் சொன்னதைதிரும்பப்பெறுவதை ஒரு பிரதிபலனாக முன்வைக்கலாம்.

ஆதலால், சுய சார்பற்ற பெண்ணாகமனைவி இருக்கும்பட்சத்தில் இஸ்லாமியப் பெண்களும், விவாகரத்திற்குப் பின் ஜீவனாம்ச தொகையைகணவனிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்பிரிவு 125ன் கீழ்(The Criminal Procedure Code 1973) பெறலாம். இந்தப் பிரிவின் கீழ் மனைவி, குழந்தைகள், பெற்றோர் என அண்டி இருப்பவர்கள் எவரும்ஜீவனாம்சம் பெற முடியும்.ஒவ்வொரு மதமும் ஆண்/பெண் இணைப்பை, திருமணத்தை பூர்வ ஜென்மபந்தமாகவோ, ஆண்/பெண்ஒப்பந்தமாகவோ, சமூக அங்கீகாரமாகவோபார்க்கின்றன. அதற்கேற்றார் போலவே அவற்றின்விதிகளும், அமைகின்றன.

- ஹன்ஸா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல