திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 10 (கிறித்தவ மத சட்டங்கள் நெகிழக்கூடியவையா?)

இந்தியாவிற்கு மிகப் புராதானமான வரலாறு இருப்பதாலேயே, இங்கே பல இனக்குழுக்களும், மதங்களும் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பழக்க வழக்கமுடையவர்கள் அருகருகே இணைந்து வாழ வேண்டியுள்ளது. இவர்கள் தலத்தைப் பொறுத்தவரையில் ஒன்றாகவும், மத பழக்க வழக்கங்களைப் பொருத்து வெவ்வேறாகவும், இருக்க வேண்டியிருக்கிறது.



ஆக இவர்கள் தலத்தால் இணைந்தும், மதத்தால் பிரிந்தும் இருப்பதால், இந்தியா எனும் தலத்தைப் பொருத்த வரையில் ஒரே சட்டத்தின் கீழ் இவர்கள் அனைவரையும் கொண்டு வருதல் மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கிறது.


ஒரு இடத்தின், தலத்தின், நாட்டின் சட்டங்கள் அங்கிருக்கும் அனைத்து மக்களையுமே கட்டுப்படுத்தும். ஆனால், ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு தனிச் சட்டத்தைக் கொண்டிருந்தால்?


இந்தியாவில், சட்டம் மதம் சார்ந்ததாக இருக்க வேண்டுமா? தலம் சார்ந்ததாக இருக்க வேண்டுமா? எந்த அளவுக்கு மதத்தை ஒட்டியும், எந்த அளவுக்கு தலத்தை ஒட்டியும் இருக்க வேண்டும் என்பதைக் குறித்தே கடந்த சில வாரங்களாக அலசி வருகிறோம்.


இந்தப் பகுதியில் அதாவது இன்றைய இந்தியா எனும் எல்லையை அது அடையும் முன் உள்ள இந்த நிலப்பரப்பில் இந்து மதம் கோலோச்சி வந்தாலும், முதலில் இஸ்லாமும், பின் கிறித்தவமும் இப்பகுதியில் பரவ ஆரம்பித்தன. இங்கே ஏற்கனவே இந்துக்களாக இருந்தவர்களும், இந்த மதங்களைத் தழுவ ஆரம்பித்தனர். அப்படி மாறியவர்களுக்கு எந்த அளவுக்கு ஏற்கனவே இருந்த அவர்களின் வழக்காறுகள் செல்லும்? எந்த அளவுக்கு மாறிய புதிய மதத்தின் சட்டங்கள் செல்லும்? மாறியபின் மறுபடி தாய் மதம் திரும்பினால் அவர்கள் எந்த அளவுக்கு மத சட்டங்களைப் பயன்படுத்தலாம்அதற்கு எந்த அளவுக்கு மத சட்டங்களும், பொதுவான இந்திய சட்டங்களும் உதவுகின்றன? என்பதைக் குறித்தெல்லாம் பார்த்து வருகிறோம்.


இந்தியாவில் கிறித்தவர்கள் வந்த போது, கிறித்தவத்தைப் பரப்ப நினைத்த பிரிட்டிஷார், கிறித்தவரல்லாதவர் எத்தனை பேர் என கணக்கெடுக்கின்றனர். அப்படி எடுக்கையில் இந்த நிலப்பரப்பில், கிறித்தவர் அல்லாதவர்களில் இஸ்லாமியர்கள், வேறு சில மதங்கள் எல்லாம் இருக்க, இவர்கள் தவிர உள்ள மற்றவர்களை இந்துக்கள் என குறித்துக் கொண்டனர்.


அதாவது, கிறித்தவர் அல்லாதவர்களில், இஸ்லாமியர், வேறுசிலர் தவிர மற்றவர்கள் இந்துக்கள் என பதிந்து கொண்டனர்.


ஆனால், அப்படிச் சொல்லப்பட்டவர்கள் எல்லாருமே இந்துக்கள் அல்லர். வெவ்வேறு சிறு குறு இனக் கூட்டங்கள்.


இந்நிலையில் மத அரசியல் காரணங்களுக்காக, கிறித்தவர், இஸ்லாமியர் போல இவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்தால்தான் சமாளிக்க முடியும் எனும் காரணத்தாலும், ஆன்மிக தத்துவ காரண்ங்களாலும், இவர்கள் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயம் உண்டானது. இந்த சமயத்திலேயே, சைவ வைணவ இணைப்பும், அவர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்ட, பல புது கடவுளர் கதைகளும் தோன்றின.


ஆக, அன்றைய இந்திய நிலப்பகுதியில் இருந்த இஸ்லாமியர், கிறித்தவர், இன்ன பிற சிறு குழுக்கள் அல்லாதவர் தங்களை எண்ணிக்கையில் வலுப்படுத்திக் கொள்ள மொத்தமாக இந்துக்கள் என அழைத்துக் கொள்ளலாயினர்.


உண்மையில் தன் மதத்தைப் பரப்ப இவர்கள் அனைவரையும் இந்துக்கள் என பதிந்தது பிரிடிஷாருக்கு தோதாகவும், தன்னை எண்ணிக்கையில் பலப்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவருமே தன்னை இந்துக்கள் என அழைத்துக் கொள்வது தோதாகவும் இருந்தாலும் உண்மையில், இந்துக்கள் என அழைக்கப்பட்டவர் அனைவரும் இந்துக்கள் அல்ல. அது ஒரு தொகுப்புப் பெயர் என வேண்டுமானல் சொல்லலாம்.


இந்நிலையில் மெல்ல மெல்ல இந்திய நிலப்பகுதியில் கிறித்தவம் பரவலாயிற்று. இந்தியர்கள் சிலரும் மதம் மாறி கிறித்தவர் ஆயினர். அப்படி ஆனவர்கள் பிரிட்டிஷார் முறைப்படி தனிச் சட்டங்களையும், மற்ற பொது விஷயங்களுக்கு பொது சட்டங்களையும் பின்பற்றினர் என்றாலும். அவர்கள் ஏற்கனவே இந்திய இந்துக்களாக இருந்தமையால், ஏற்கனவே அவர்களிடையே புழக்கத்தில் இருந்த வழக்காறுகளும் ஏற்கப்பட்டே வந்தன.


இதற்கு சிறந்த உதாரணமாக, ஆப்ரஹாம் ஙண் ஆப்ரஹாம்(1975 ஓ.ஃ.கூ. 55) எனும் வழக்கைச் சொல்லலாம். இவ்வழக்கில் அண்ணன் தம்பி இருவர். இவர்களின் மூதாதையர்கள் இந்துக்கள். பிறகு கிறித்தவத்திற்கு மதம் மாறியவர்கள்.


இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார். இறந்தவரின் மனைவி தனது கணவருக்குச் சேர வேண்டிய சொத்துக்களுக்காக இன்னொரு சகோதரர் மீது வழக்கிடுகிறார்.


அந்தச் சகோதரரோ, தன் மூதாதையர் இந்துவிலிருந்து கிறித்தவத்திற்கு மாறியவர் என்றும், அதனால் இந்துக்களின் வழக்கப்படி மொத்த சொத்திற்கும் தானே வாரிசு என்றும் உரிமை கொண்டாடினார்.


இந்நிலையில், தான் இந்து வழக்கத்தையே பின்பற்றுவதாக நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டி வந்தது. ஆனால் உண்மையில் அவர் ஆங்கிலேய, போர்ச்சுகீசியருக்குப் பிறந்த பெண்ணை மணந்து கொண்டு ஆங்கிலேயெர் நடை உடை பாவனைகளுடன் ஆங்கில கிறித்தவ வழியையே பின்பற்றியதால், அவருக்கு இந்து வழக்காறு செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதே போல, மோஹந்தாஸ்Vsதேவஸ்வம் போர்டு வழக்கில், பாடகர் ஜெயசுதாஸ் கிறித்தவராகவே பிறந்தாலும், அவர் இந்து வழக்கங்களையே பின்பற்றி வந்ததாக நிருபித்த பின், அவர் இந்துவாகவே கருதப்படலாம், இந்து கோவில்களுக்கும் அவர் அனுமதிக்கப்படலாம் என தீர்ப்பானது.

மைனா போயி Vs ஓடரம் வழக்கில், கைவிடப்பட்ட இந்துப் பெண்ணுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவர் குடும்பம் நடத்தி இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னிட்டு ஒரு குழந்தை இறந்துவிட்டது. இப்போது அக்குழந்தைகளுக்கு எந்த மத சட்டம் பொருந்தும்? உயிருள்ள குழந்தை இறந்த குழந்தையின் சொத்தைப் பெற முடியுமா? எனும் இரு கேள்விகள் எழுந்தன.


தீர்ப்புரைத்த ப்ரிவ்யு கவுன்சில், கிறித்தவ தந்தைக்கும் மதம் மாறாத இந்து தாய்க்கும் பிறந்த குழந்தைகள் முறைமணப் பிறப்பு குழந்தைகள் அல்லர் எனினும்(கிறித்தவத்தில் கிறித்தவராக அல்லாத அல்லது மதம் மாறாத ஒருவரை மணக்க்க இயலாது) அக்குழந்தைகள் இந்து முறைப்படி வளர்க்கப்பட்டுள்ளனர் எனவே, அவர்களுக்கு இந்துச் சட்டமே பொருந்தும் என தீர்ப்பளித்தது


கிறித்தவ மதம் அதிக அளவுக்கு நெகிழும் தன்மையைக் கொண்டே இருக்கிறது. அதிக அளவில் மக்களின் வழக்காறுகளுக்கு இடம் அளிக்கிறது.


காமுவதி ஙண் திக் விஜய் சிங் வழக்கில் இந்துவாக இருந்து கிறித்தவத்திற்கு மாறிய பின்னர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது சகோதரி இறங்குரிமையின் அடிப்படையில் அவரது சொத்துக்கு பாக உரிமை கோரினார். கிறித்த மத அடிப்படையில் அவருக்கு அந்தச் சகோதரிக்கு சொத்து உரிமை கிடைத்தது.


கிறித்தவர்களில் திருமணம் என்பது ஒரு சமூக ஏற்பாடு போல இஸ்லாமியர்களின் திருமண ஒப்பந்தம் போல எழுத்துவடிவில் பதியப்பட்டாலும், அது இந்துக்களைப் போல கடவுள் போட்ட முடிச்சு மாதிரியான நம்பிக்கை நிலவுவதால், கிறித்தவத்தில் அடிப்படையில் விவாகரத்துக்கு அனுமதி இல்லை.


ஆனால், திருமணம் செய்விக்கும் முறை, போன்றவை அவர்களுடைய தனிச்சட்டத்தின் படியே நடக்கின்றன. விவாகரத்து என்பது மதத்தால் ஏற்கப்படாவிட்டாலும், இந்தியாவைப் பொறுத்து மணமுறிவுச்சட்டம் - 1869 (The Divorce Act - 1869) தான் பயனாகிறது.


அவர்களின் திருமணங்கள், அவரவர் தேவாலயங்களில், அந்த ஆலயங்களின் நடைமுறையை வழக்காறுகளை ஒட்டி, திருமணங்கள் நிகழ்த்தப்பட்டு அத் திருமணண்ங்கள் தேவாலயப் பதிவேடுகளில் பதிவாகின்றன. அப்படிப் பதிவேடுகளில் பதிந்த பிறகு தம்பதியருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது வரை சட்டம் கிறித்தவ தனிச்சட்டத்தில் தலையிடுவதில்லை என்ற போதிலும், சில இடங்களில் நீதிமன்ற உதவியை இவர்கள் நாடலாம்.


உதாரணமாக, திருமணத்திற்கு இசைவு அளிக்க வேண்டிய நபர், பித்து நிலையடைந்து விட்டிருந்தாலோ, தமது இசைவை நியாயமில்லாமல் நிறுத்தி வைத்திருந்தாலோ, சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் இருப்பவர்கள் அந்தந்த உயர் நீதிமன்றத்திடமோ, மற்றவர்கள் மாவட்ட நீதிபதியிடமும் மனுச்செய்யலாம்.


மணமுறிவுச்சட்டமானது, தனது பிரிவு10-ன் கீழ் மணமுறிவுக்கான காரணங்களைச் சொல்கிறது. கூடுதல் காரணங்களை மனைவிக்கு வழங்குகிறது.


கிறித்தவம் பிற மதங்களைக் காட்டிலும் இருக்கும் தலத்திற்கொப்ப நெகிழும் தன்மையை அதிகமாகவே கொண்டுள்ளது.


.இன்னும் அலசுவோம்


- ஹன்ஸா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல