இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையா, முடியுமா என்பது பற்றிப் பேசுவதென்றால், இந்தியாவில் இருக்கும் மக்கள் அதுவரை பயன்படுத்திய சட்டங்களும், அந்தச் சட்டங்களில் திடத்தன்மை அல்லது நெகிழும் தன்மை பற்றியும், மற்றும் வேறுபாடுகளும், பற்றி ஆழ்ந்து அறிய வேண்டியது அவசியமாகிறது.இஸ்லாமியர் அல்லாத சராசரி ஒருவனிடம் இஸ்லாமியச் சட்டம் பற்றிக் கேட்டால் திருக்குரானை அவர்கள் அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அதுதானா என அறிய வேண்டி இருக்கிறது.
அதற்கு பொதுவாக இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும், இந்தியாவில் அதன் வரலாறு பற்றியும் கொஞ்சம் அலச வேண்டியதிருக்கிறது.
அந்த மதத்தின் வரலாறு அதை முழுமையாக்கித் தந்த முகம்மது நபி(ஸல்)யிடமிருந்தே தொடங்குகிறது. கி.பி.540ல் பிறந்த இவர் அரேபியாவில் உள்ள மெக்காவில் பிறந்தார். இவர் தன் நாற்பது வயதுகளில் இஸ்லாமிய மூலக் கொள்கைகளையும், சில புதிய கொள்கைகளையும் மக்களுக்கு போதித்ததோடு, ஐந்து வேளை தொழுகை; ஜகாத்; ரம்ழான் நோன்பு; ஹஜ் புனிதப்பயணம்; வட்டி, மது கூடாது; பெண்களைப் பிறப்பால் பேதப்ப்படுத்தக் கூடாது; அவர்களுக்கான முழு சொத்துரிமை என பலவற்றையும் இணைத்து புதிய கொள்கைகளையும் மெக்கா நகர மக்களுக்கு போதித்தார். இதை ஏற்காத அவர்களில் சிலர், அவருக்கு சொல்லொணாத் துயரத்தை விளைவிக்க அவர் மதினாவுக்குப் புறப்ப்பட்டார்.
முகம்மது நபி அவர்களின் போதனைகளை ஏற்றவர்களே முஸ்லிம்கள் /இஸ்லாமியர் எனப்பட்டனர்.
நபியின் காலத்திற்குப் பிறகு (கி.பி.632), நபிகளின் கொள்கைகளைப் பின்பற்றி வழி நடந்தவர்களில் முதல் கலீபாவாக அவரது நண்பர் அபுபக்கரும், அதன் பின் உமர், உதுமான், மற்றும் அலி ஆகியவர்களும் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இவ்விதம் கலீபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழி நடத்தும் முறையை ஆதரித்தவர்களே சன்னி பிரிவினர். இவர்கள் சுன்னத் ஜமா அத் எனப்பட்டனர். இவர்களில் முதல் முதல் மூன்று கலிபாக்களை ஏற்காதவர்கள் ஷியா பிரிவினர்.
இந்த பிரிவினரில் இமாம் அபு ஹனிஃபா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபி, இமாம் ஹன்பல் எனப் பல மகான்கள் தோன்ற இவர்களின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் ஹனஃபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி பிரிவினர் எனப்பட்டனர்.
ஹனஃபி பிரிவினர் இமாம் அபுஹனிஃபாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். இப்பிரிவின் கோட்பாடுகள் 'ஹிதயா' எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இமாம் மாலிக்கின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் மாலிகி பிரிவினர். இஸ்லாம் சட்டத்தின் முக்கிய மூலங்களில் ஒன்றாக இவரின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அமைந்திருந்தன. இவரது கொள்கைகள் இஸ்லாமிய 'இஜ்மா'விற்கு (இஜ்மா-வின் விளக்கம் இறுதியில்) அதிக முக்கியத்துவம் தருவதாக அமைந்திருந்தது. இவரது கோட்பாடுகள் ”கிதாப்-அத்-மெளவாட்டா” நூலில் விளக்கியுள்ளார்.
இமாம் மாலிக்கின் மாணவரே இமாம் ஷாஃபி. இமாம் ஷாஃபியின் கொள்கைகளைப் பின்பற்றும் ஷாஃபி பிரிவினர், 'இஜ்மா'விற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். இவரது கோட்பாடுகளிலிருந்துதான் 'கியாஸ்' தோன்றியது. இதுவும் இஸ்லாம் சட்டத்தின் ஒரு மூலமாகவே கருதப்படுகிறது.
இமாம் மாலிக்கின் மாணவரே ஹன்பலி. இமாம் ஹன்பலியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் (ஹன்பலி). இப்பிரிவினர் சிரியா பாலஸ்தீனிய பகுதிகளில் உள்ளனர்.
ஷியா பிரிவினர், அலி அவர்களைத் தவிர மற்ற மூன்று கலீபாக்களை ஏற்காதவர்கள். இந்த கலிபா அலி, முகம்மது நபியின் மகளை மணந்தவர் ஆவார். இந்த அலிதான் முதல் கலீபா என்பவர்கள் ஷியாக்கள். ஷியா பிரிவில் அலியை முதல் கலீபாவாக ஏற்பவர்கள் ஷியாக்கள். இமயஜித்தை(ஐந்தாவது கலீபா) ஏற்கும் ஷியாக்கள் ஜைதி எனப்படுகின்றனர். இமாம் இஸ்மாய்லை(ஏழாவது) ஏற்பவர்கள் இஸ்மாயிலி எனவும். இமாம் முஹம்மது அபுல் காசிம்மை(பன்னிரண்டாவது) ஏற்பவர்கள் ”இதுன-அஷரி' எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சன்னி பிரிவில் ஹனஃபி பிரிவினரும், ஷியா பிரிவில் இதுன-அஷரி பிரிவைச் சேர்ந்தவர்களுமே அதிகம் உள்ளனர்.
jதிருக்குரான்:
பொதுவாக இஸ்லாமியர்களின் வழி நூலாக திருக்குரான் கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் சட்ட, வாழ்க்கை, நெறி முறைகள் அனேகம் அங்கிருந்தே எடுக்கப்படுகிறது. திருக்குரானே அவர்களின் அடிப்படை சட்ட நூலாக, வாழ்நெறி நூலாகப் பார்க்கப்படுகிறது. இது இஸ்லாமிய சட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் அடிப்படை எனும் கருத்து மறுக்கப்படலாகாது என்ற போதிலும், இஸ்லாமியர்களின் சட்ட நூல், திருக்குரான் மட்டுமே அல்ல. திருக்குரான் ஜிப்ரில் எனும் தூதர் வழியாக ஆண்டவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதாக கூற்று. ஆனால், இவை அனைத்தும் ஒரே நேரத்தில், ஒரே சந்தர்ப்பத்தில் அருளப்பட்டவை அல்ல. அவ்வப்போது இஸ்லாம் சமுதாயத்தில் எழுந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக முஹம்மது நபி அவர்களுக்கு அருளப்பட்டது.
திருக்குரான், பல்வேறுபட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும், நெறிகளையும், சட்டத் திருத்தங்களையும் கூட தன்னகத்தே கொண்டுள்ளது.
இது இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கான வழிகாட்டும் நெறி நூலாகவும் இருப்பதால் அதிலிருந்தே இஸ்லாமிய சட்டம் பெரிதும் பெறப்படுகிறது. திருக்குரான், திருமணம், விவாகரத்து, குழந்தைகளைப் பராமரித்தல், வாரிசுரிமை எனப் பலவற்றைப் பற்றியும் பேசுகிறது.
சுன்னா:
இஸ்லாமிய சமூகத்தில் எழும் பிரச்னைகளுக்கு திருக்குரானில் விடை கிடைக்காத போது, முஹம்மது நபி வாழ்ந்து காட்டிய முறை அல்லது அவர் தன் வாழ்நாளில் அந்த குறிப்பிட்ட பிரச்னை பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை வைத்தோ, விடை காண முற்படுதலே சுன்னா எனப்படும்.
சுன்னா என்றால் வழிமுறைத் தத்துவம் என்றே பொருள். இதை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். நபிகள் தம் வாழ்நாளில் செய்து காட்டியவற்றை அடிப்படையாகக் கொண்டது 'சுன்னத்துல் ஃபில்”. நபிகள் நாயகம் சொன்ன அறிவுரைகளின் அடிப்படையில் பிரச்னைகளுக்கு விடை காண்பது ”சுன்னத்துல்கால்”. நபிகள் நாயகம் முன் மற்றவர்களால் செய்யப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது, "சுன்னத்துல் தக் ரீரு” இதைத் திருக்குரானுக்கு அடுத்ததாகப் புனிதத் தன்மை கொண்டதாக இஸ்லாமியர் கருதுகின்றனர்.
திருக்குரானை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது. நபி அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்ட நெறிகள் பின்பு "ஹதீது” எனும் பெயரில் தொகுக்கப்பட்டது. இது இஸ்லாமியர்களின் சட்டப் பிரச்னைகளுக்கு விடை காண திருக்குரானுக்கு அடுத்து புனிதமானதாகக் கருதப்படுகிறது.
திருக்குரான், மற்றும் முஹம்மது நபியின் வழிகாட்டல் தொகுப்பான "ஹதீது” இவற்றை நன்கு அறிந்த அறிஞர்களால், வகுக்கப்பட்ட ஒத்த சிந்தனையே இஜ்மா ஆகும். அதாவது, இஸ்லாமியர்களிடையே ஏற்படும் ஒரு பிரச்னைக்கு இஸ்லாமிய அறிஞர்களால் ஒருமித்து கண்டறியப்படும் விடையே இஜ்மா ஆகும்.
கியாஸ் என்பது திருகுரான், ஹதீது, இஜ்மா என இம்மூன்றிலிருந்து ஒரு பிரச்னைக்கு விடை கிடைக்காவிடில், இம்மூன்று ஆதாரங்களில் இருந்தும், ஒத்த தன்மை உடைய கருத்துக்களை ஒருங்கிணைத்து, பிரச்னைக்குரிய விடையை ஊகித்துணர்வதே கியாஸ் ஆகும்.
இஸ்திஹாஸன் என்பது திருக்குரானில் இருந்தோ, முகம்மது நபி அவர்களின் சொல்லில் இருந்தோ, ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிடில், பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டிய நீதிபதியானவர், தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, மனசாட்சிக்கு ஒப்ப விடை காணுவதே இஸ்திஹாஸன் ஆகும்.
இஸ்லாமியச் சட்ட அடிப்படையில் நீதி வழங்கும்போது நியாயம், நீதி, மனசாட்சி அடிப்படையில் நீதி வழங்கலாம் என்பதும், இஸ்லாமியச் சட்டம் நியாத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடியது என்றும் இதன் மூலம் அறியலாம்.
ஃபத்வா என்பது மொகலாய ஒளரங்கசீப்-ன் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய நீதிபதிகளால் "திருக்குரான்”, ”சுன்னா”, ”கியாஸ்” அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டௌ 'ஃபத்வா ஆலம்கிரி” என அழைக்கப்பட்டது. இதுவும் இஸ்லாமிய சட்டத்தின் சட்டப் பிரச்னைகளுக்கு உதவியாக இருக்கிறது.
வழக்கம்:
வழக்கம் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் எந்த அளவிற்கு இடம் அளிக்கிறதென்றால், இந்து மதத்தில் வழக்கங்களுக்கு இருக்கும் அளவிற்கு இஸ்லாத்தில் வழக்கங்களுக்கு இடம் இல்லை என்றாலும், முன்னர் இருந்த வழக்கங்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதுவே அன்றி, இன்றைய இஸ்லாமிய வழக்கங்கள் பெரிதளவில் சட்ட மூலமாக இருக்கவில்லை. ஆனால், வழக்கங்களுக்கும் இஸ்லாமிய சட்டத்தில் அங்கிகாரம் உண்டு.
இந்தியாவில் இஸ்லாமிய சட்டம்:
இந்தியாவில், பலர் இந்துக்களாக இருந்து இஸ்லாமியராக மாறியவர்கள். ஒளரங்க சீப் காலத்தில் இஸ்லாமிய சட்டம் அன்றைய இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கு இந்துக்களின் சட்டமுமே பயன்படுத்தப் பட்டது. அதன் பின்னான ஆங்கிலேயர் காலத்திலும் அவரவருக்கு அவரவர் மதச் சட்டமே பயன்படுத்தப்பட்டது.
ஆனாலும் கூட, இன்றைய இந்திய நிலப்பகுதியில் இந்துக்களும் இன்னபிற மதத்தவரும் இருப்பதால், ஓரளவிற்கு இஸ்லாமிய சட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியச் சட்டங்களால் இஸ்லாமிய சட்டங்களிலும் மாற்றம் வந்தது.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை ஒட்டி, இஸ்லாமிய குற்றவியல் சட்டம் மாற்றம் கண்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 முதல் பிரிவு 127 இஸ்லாமிய ஜீவனாம்சம் குறித்த பார்வையை மாற்றியது எனலாம்.
அதே போலவே இந்திய ஒப்பந்தச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், ஆகியவற்றால், இஸ்லாமிய ஒப்பந்தச் சட்டம், சாட்சியம் போன்றவை மாற்றம் கண்டன. உரிமை வயதடைந்தோர் சட்டம் -1875ன் மூலம், மஹர், திருமணம், திருமண முறிவு ஆகியவை அல்லாத மற்றவற்றிற்கு இஸ்லாமிய உரிமை வயதடைந்தோர் சட்டம் செல்லாததாகியது. அடிமைகள் குறித்த இஸ்லாமியச் சட்டம், அடிமை ஒழிப்புச் சட்டம்-1843-ன் மூலம் ஒழிக்கப்பட்டது. The child marriage Restraint Act - 1929 சட்டமானது, குறிப்பிட்ட வயது வரும் முன் திருமணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு தண்டனை என்கிறது.
ஆக, பொதுவாகப் பலரும் கருதுவது போல, இஸ்லாமிய சட்டமானது திருக்குரானை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது இன்னும் பிற அறிஞர் கருத்துக்களையும், சூழலுக்கேற்ப மனசாட்சி நியாயப்படியும் சட்டமும், நீதியும், கொண்டு வரலாம் எனும் கருத்தோடுதான் நெகிழ்வுத்தன்மையோடு விளங்குகிறது என அறிய முடிகிறது.
ஆக, இஸ்லாமியர் சட்டங்களையும் பொது சிவில் சட்டத்தின் மூலம் மாற்ற முடியும் என்றாலும் அப்படி மாறுவதற்கான தேவை இப்போது ஏற்பட்டுள்ளதா? அல்லது அதன் தேவை இருக்கிறதா? எனும் கேள்வியே நம் முன் எழுகிறது.
ஆக இப்போது நம் முன் இருக்கும் கேள்விகள் இரண்டு.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம், இஸ்லாமிய சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய சட்டம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறதா?
அப்படி பொது சிவில் சட்டம் கொண்டு வர இப்போது தேவை ஏற்பட்டிருக்கிறதா?
பதிலைத் தெரிந்து கொள்ள இன்னும் அலச வேண்டி இருக்கிறது.பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம், இஸ்லாமிய சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய சட்டம் நெகிழ்வுத் தன்மையுடன்தான் இருக்கிறது.
ஆனால்..
.(இன்னும் அலசுவோம்)..
-ஹன்ஸா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக