வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒரு சில நாடுகள் ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன எனினும், அந்த நாட்டிலேயே வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.இந்தியா மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இங்கேயும் பல மதங்களைப் பின்பற்றுபவர்களுக் இருக்கிறார்கள். ஒரே மதத்தைச் சார்ந்த இரு வெவ்வேறு நாட்டினர்களிடையேயும் வித்தியாசங்களைக் காணமுடிகிறது. ஒரு நாட்டின் கலாசாரமும், மதமும் இணைந்து அவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன.இந்தியா ஒரு இந்துப் பெரும்பான்மை நாடு. இதற்கு முந்தைய கட்டுரைகளில் பார்த்தது போல, ஒவ்வொரு மதமும் சமூகச் செயல்களை வெவ்வேறுவிதமாகவே பார்க்கின்றன.
பெண்ணுக்கான ஜீவனாம்சம்:
திருமணம், விவாகரத்து, தத்து போலவே பெண்ணுக்கான ஜீவனாம்சத்தையும் ஒவ்வொரு மதமும் பார்க்கும் விதம் வேறாகத்தான் இருக்கிறது. ஆனால், மதத்திற்காகச் செய்யும் சடங்குகளில் சட்டம் தலையிடுவதில்லை. அதே மதமானது, மனித அடிப்படைத் தேவையில் தலையிடாதவாறும் சட்டம் பார்த்துக் கொள்ளவே முயற்சி செய்கிறது.இந்துத் திருமணங்களில் வரதட்சிணை எனும் பழக்கம் அனேக இந்துக் குழுக்களில் முன்பு இருந்தது. பெண்ணுக்கு முன்பு சொத்துரிமை இல்லாதிருந்தமையால், திருமணத்தின் போது அவளுக்கு நகையாகவோ, பணமாகவோ மணமகளின் பெற்றோரால் அளிக்கப்பட்டது.
அதே போலவே, இஸ்லாமிய சமூகத்தில் மணப்பெண்ணுக்கு அவளை மணம் செய்து கொள்ளப்போகும் மணமகனால் அளிக்கப்பட்டது.பெண் கொஞ்சம் அடங்கியே இருக்கப் பழக்கப்பட்டிருப்பதாலும், முக தாட்சண்யம் பார்த்து பலவற்றை விட்டுக் கொடுக்கும் போக்கு இருந்தமையாலும், அண்டி இருக்கும் மனநிலையாலும், வரதட்சணைப் பணம் என்பது பெண்ணின் பயன்பாட்டுக்கு என்பது போய் அது மணமகன் வீட்டாரின் சொத்தாக பார்க்கப்பட ஆரம்பித்தது.
அதை ஒட்டி, மணமகளின் சார்பில் கேட்பதான பாவனையுடன் அதே சொத்து, மணமகன் வீட்டாரின் சார்பில் மணமகளின் பெற்றோரிடம் இருந்து வலிந்தே பெறப்பட்டது.வரதட்சிணைத் தொகை என்பது எவ்வளவு என்பது, மணமகள் குடும்பத்தின் அந்தஸ்து, அவளின் மற்ற சகோதர சகோதரிகளுக்காக ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்ட சொத்தின் அளவு, மணமகனின் அந்தஸ்து என இரு குடும்ப அந்தஸ்தை அளவுகோலாக வைத்து மணமகன் வீட்டாரால் வலிந்தே பெறப்பட்டது.
அப்படி பெறப்பட்ட தொகையும் கூட மணமகளின் தனிப்பட்ட பொறுப்பில் இல்லாமல், அந்த சொத்தை பாதுகாப்பதாகச் சொல்லி மணமகன் அல்லது அவனின் பெற்றோர் பெயரில் பெறப்பட்டது. சில சமயங்களில் அவளுக்கு அனுபவ பாத்தியதை மட்டுமே கிட்டும்.இந்தப் பணத்தொகை காரணமாகவே பெண் மணமகன் வீட்டில் துன்புறுத்தப்படுவதும், நிகழ ஆரம்பித்தது.
மஹர் எனும் மணக்கொடை:
இஸ்லாத்தில் மணமகளுக்கு மஹர் எனும் மணக்கொடை மணமகனால் அளிக்கப்பட்டது. இஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்வியல் ஒப்பந்தமாகவே பார்ப்பதால், அந்தப் பணம், அவர்களிருவருக்குமிடையே எழும் மண ஒப்பந்தத்தை மணமகன் மீறினால் அதற்கான ஈட்டுத் தொகையாகவே மஹர் அளிக்கப்பட்டது. கணவனுக்கு நிகரான மதிப்பை மனைவிக்கு வழங்கும் நோக்கமும் இதில் உண்டு.
இதனாலேயே மஹர் தொகை கணவனின் அந்தஸ்திற்கு ஏற்ற வகையில் பெருந்தொகையாகவே இருக்கும். தம்பதியர் பிரிந்து போனால், அப்போது கண்டிப்பாக மனைவிக்கு கணவன் ஏற்றுக்கொண்ட மஹர் தொகையை அளித்தே ஆக வேண்டும். இதனாலேயே பல விவாகரத்துகள் குறையும் வாய்ப்பும் உண்டு.
இந்த மஹர் தொகை மணமகளுக்கு மட்டுமே சொந்தம். அதில் எவருமே பங்கு போட வர இயலாது என இஸ்லாமியச் சட்டம் சொல்கிறது.ஆனால், இங்கேயுமே இந்து மதத்தைப் போல பெண் அடங்கி இருக்கவே பழக்கப்பட்டிருப்பதாலும், முகதாட்சண்யத்திற்காக விட்டுக் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாலும், அவளுக்கு தரப் பட வேண்டிய மஹர் தொகை ஒரு சின்னஞ்சிறு தொகையாகவும் (token amount) அமைந்து விடுவதும் உண்டு.
இஸ்லாமிய சட்டத்தின் படி, திருமணத்தின் போது, தன் பின்னர், அல்லது கணவன் இறந்துவிட்டால் அவனது சொத்திலிருந்தும் கொடுக்கப்படலாம். இஸ்லாமிய சட்டவியல் கோட்பாடுகள் மஹரை திருமண ஒப்பந்தத்திற்கான ஒரு மறுபயன் என்றே கூறுகிறது. (Dower as consideration for the contract of marriage). எனவே மஹர் தொகை பின்னர் தரப்படுவதாயின் அந்த தொகை எவ்வளவு என்பது அத்திருமணத்தை நடத்திவைக்கும் திருமணப் பதிவேட்டில் காஜியார் பதிந்து வைப்பார்.ஒரு வேளை மணமகன் இளவராக இருக்கும் பட்சத்தில், அந்த மஹர் தொகையைத் மணமகனின் தந்தையார் தரச் செய்யலாம்.
ஆனால் இது ஷியா பிரிவுக்கு மட்டுமே. (Sabir Hussain Vs Forzand Khan எனும் வழக்கு இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.)இஸ்லாத்தில் சன்னி பிரிவு இஸ்லாமியர்களில், மணமகன் இளவராக இருந்தால், மணமகனின் தந்தையார் தன் பொறுப்பில் ஒப்பந்தம் செய்திருந்தால்தான் மஹர் தொகையைத் தந்தை வழங்க வேண்டும்.
மு அஜ்ஜல்:
இது திருமணம் ஆன உடனேயே மணமகனால் தரப்பட வேண்டிய மஹர் தொகை. இத் தொகை தரப்படாவிட்டால் உடலுறவுக்கு இணங்க மறுக்கும் உரிமை மனைவிக்கு உண்டு. அப்படி அவள் அத் தொகையைக் கேட்டுவிட்டால் அத்தொகை கணவனானவன், மனைவிக்குப் பட்ட கடன் ஆகிவிடுகிறது.
இது இஸ்லாமிய சட்டம் சொல்வதாயினும், இந்த இடத்தில் சட்டம் நுழைகிறது.இத் தொகை கணவன் மனைவிக்குப் பட்ட கடன் என இஸ்லாமிய சட்டம் சொல்லுவதால், மற்ற கடன் தொகை வசூலிப்பதே போல, மனைவி சட்ட உதவியுடன் வழக்கிடலாம்.மணமகள் இளவராக இருக்கும் பட்சத்தில் மணமகளின் பெற்றொர் அல்லது காப்பாளர், அத் தொகையை மணமகன் தரும் வரை அவளை மணமகனோடு உடலுறவுக்கு அனுப்ப மறுக்கலாம்.
இந்த இரு சூழலிலுமே, மணமகனானவன், மனைவி தன்னோடு சேர்ந்து வாழ வழிவகுக்கும் சட்டத்தின் பிரிவான தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டளிக்கக் கோரி (Restitutuion of conjugal rights) வழக்கிட இயலாது. (Mastan Sahib Vs Asan Bibi எனும் வழக்கை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
(ஆனால், இத் தொகையைப் பெற மனைவி அவ்விதம் கோரிய தேதியிலிருந்து, அல்லது மஹர் தொகை தராமல் கணவன் இறந்துவிட்டால் அவன் இறந்த தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்குள் அவள் அந்தத் தொகையைக் கேட்டுப் பெற வேண்டும். வழக்கிட்டும் கூட. அதன் பின் எனில் காலக்கெடு முடிந்துவிடும் என்பதால் பணத்தைத் தரத் தேவை இல்லை.)
முவஜ்ஜல்: இது காலம் தாழ்த்தியோ, அல்லது சில சம்பவம் நிகழ்ந்த பின்னரோ தருவதாக ஒப்ப்ந்தம் செய்து கொள்ளலாம். மஹர் தொகை அந்தப் பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் எனினும், இந்த முவஜ்ஜல் மஹரானது, இஸ்லாம் மனைவி பெற்றுக் கொள்வதற்கு முன்னமே இறந்துவிட்டால் அந்தத் தொகையை (அவள் இல்லாததினால்) அவளது வாரிசுகள் கூட கணவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தரப்படாத இந்த 'மஹர் தொகையானது கடன் தொகை போல' என மதச் சட்டமே சொல்லி இருப்பதால் அதை மற்ற கடன் தொகையை வழக்கிட்டுப் பெறுவதைப் போலவே பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இது ஒரு பிணையில்லாக் கடனே ஆகும்.
எனவே, கணவன், மனைவிக்குப் பட்ட கடனுக்காக தனது சொத்தின் உடைமையில் மனைவியை அமர்த்தலாம். அதிலிருந்து வரும் வரும்படித் தொகையை தனது மஹருக்காக அவள் பெற்றுக் கொள்வாள். அதே சமயம் இந்தக் கடனால், மனைவியின் நடவடிக்கையை எவ்வகையிலும் கட்டுப்படுத்தும் உரிமையை கணவன் இழக்கிறான்.
அந்த மஹர் தொகையை மனைவி கேட்டும் கணவன் தராதிருந்தால், அல்லது கேட்ட பின் தான் கொடுத்தான் எனில், கொடுக்கத் தவறிய நிலை கணவனைச் சாரும். ஆனால், மனைவி தன்னுடைய மஹர் தொகையை கேட்காமலேயே இருந்தாள் எனில், கணவன் கொடுக்கத் தவறியதாகச் சொல்லமுடியாது என வழக்கொன்றில் தீர்ப்பானது.
Abdul Kadir Vs Salima எனும் வழக்கில் சுன்னி பிரிவைச் சேர்ந்த அப்துல் காதிர், சலீம் தம்பதியரில் மனைவி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். வாழ்வுரிமையை மீட்டளிக்கக்கோரும் Restirution of conjugal rights வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மனைவியை த்ன்னுடன் வந்து இணைந்து வாழுமாரு கணவர் கோரி இருந்தார்.
மனைவி பிரிந்து வந்ததற்குக் காரணம் கணவன் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த மஹர் தொகையைத் தரவில்லை என்பதே. மனைவி மஹர் பணத்தைக் கேட்கவில்லை என்பது கணவரின் வாதம். இந்நிலையில் மஹர் தொகை நீதிமன்றத்தில் கட்டப்பட்டிருந்த போதிலும், முதலிலேயே கொடுக்கப்படாததால் தாம்பத்திய உரிமை கோரும் வழக்கிடும் உரிமையை கணவர் இழந்துவிட்டார் எனக் கூறி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. கணவர் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த மேல் முறையீட்டில், மனைவி கேட்ட பின் கணவர் கொடுத்திருந்தால், கொடுக்கத் தவறிய நிலை கணவரைச் சாரும். கேட்கப்படவில்லையானால் கணவன் கொடுக்கத் தவறியதாகச் சொல்ல முடியாது என்று கணவனுக்கு ஆதரவாக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.எந்த மதமாயினும் பெண்கள் அடங்கி இருக்கவே பழக்கப்பட்டிருப்பதால், அது வரதட்சணையாயினும், மஹர் தொகையாயினும் சரி சட்டம் எத்தனை ஆதரவுக் கரம் நீட்டினாலும், அதை பழக்கத்தில் கொண்டுவருவது அவர்களுக்கே கூட கடினமாக இருக்கிறது போலும்.
இதனாலேயே அவர்களுக்குத் வர வேண்டிய சொத்து மற்றவர்களால் தரப்படாமலேயே இருந்து வருகிறது.வரதட்சிணை வலுக்கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதால் அது சட்டப்படி கூடாது என சட்டம் போடப்பட்டது. இந்து மதத்தில் சில குழுக்களிடையே அது முன்பு புழக்கத்தில் இருந்திருந்த போதிலும், சட்டம் தேவையான இடத்தில் நுழைந்து அது போன்ற குற்றங்கள் நடக்க விடாமல் செய்தது.
அதே போல இஸ்லாத்திலும், எந்தப் பெண்ணாகிலும், குடும்பச் செலவுகளுக்கு கணவனிடமிருந்து எந்தத் தொகையும் கிடைக்கப் பெறாதிருந்தாலோ, அல்லது தலாக் ஆகி பிரிந்து வாழ்கையில் தன்னை காத்துக் கொள்ளும் அளவுக்கு பண வசதி இல்லாதிருந்த நிலையில் அவள் மற்றெந்த மதத்தைச் சார்ந்த மனைவியும் ஜீவனாம்சம் கோரி வழக்கிடும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கிட்டு ஜீவனாம்ச தொகையைப் பெறலாம் என ஷாபானு வழக்கில் கூறப்பட்டது.வெவ்வேறு மதங்களும் வெவ்வேறு பழக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், அடிப்படை தனிமனித வாழ்வுரிமைக்கு எதிராக மதம் செயல்படும் இடங்களில் எல்லாம் சட்டம் நுழைகிறது.
- ஹன்ஸா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக