திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 5 (ஏற்கப்பட்ட திருமணங்களும், தந்தைமையும்)

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது, ஒர் ஒப்பந்தம் அல்ல. அது ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஒரு பந்தம் என்றும், மதச் சடங்காகவுமே கருதப்பட்டு வந்தது.இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இந்த மதச் சடங்கிற்கு வயது ஒரு தடையில்லை; எந்த வயது ஆணும் பெண்ணும் கூட திருமணம் செய்து கொள்ளலாம் என இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்ததால் பால்ய விவாகம் பரவலாக இருந்து வந்தது.திருமணத்தின் முக்கிய நோக்கம், சந்ததி பெருக்குவதும்தான் என இருந்தமையால், ஆண் தன்மை அற்றவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பித்து நிலையர் திருமணம் கூடாது. ஆனால், அந்தக் குழு வழக்கத்தில் அப்படி ஒன்று இருப்பின், செய்து கொள்ளலாம். இவை எல்லாம் போக ஒரு திருமணத்திற்கு மதவழி தகுதி என சிலவற்றை இந்துக்கள் பின்பற்ற வேண்டி இருந்தது (இன்றைய சட்டத்திற்கு முன்புவரை)




திருமணத்தில் கட்டுப்பாடு:

அதாவது ஒரே சாதியில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். கலப்புத் திருமணம் அனுமதிக்கப்படவில்லை (எனினும், அவ்வப்போது அப்படியான கலப்புத் திருமணங்கள் நடந்தே வந்துள்ளன. உயர் சாதி ஆணும், கீழ் சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு அனுலோமம் என்றும், உயர் சாதிப் பெண்ணும், கீழ் சாதி ஆணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு ப்ரதி லோமம் என்றும் பெயர்.)ஒரே கோத்திரத்தை அல்லது பர்வதத்தைக் கொண்டவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், தன் குடும்பத்தை நிறுவியவர் என எட்டு முனிவர்களைக் கொண்டுள்ளனர். அந்த ஒவ்வொரு முனிவர் பெயராலும் ஒரு கோத்திரம் தோன்றியது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த்வர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என முன்பு இருந்தது.


கட்டுப்பாடுகள் அகன்றன:

ஆனால், இந்து திருமணத் தகவின்மைச் சட்டம் வந்ததும் இந்த பண்டைய வழக்கங்கள் மறைந்தன. ஆனால், அதன் பின் 1955 -ல் வந்த இந்து திருமணச் சட்டத்தின் 30 வது பிரிவின் மூலம் இந்து திருமணத் தகவின்மைச் சட்டம் நீக்கப்பட்டது. அத்தோடு, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5ன் படி கலப்புத் திருமணமோ, ஒரே கோத்திரத் திருமணமோ அங்கீகரிக்கப்பட ஆரம்பித்தது.இந்து மதத்தில் சபிண்டா உறவு முறையில் திருமணம் செய்தல் கூடாது. அதாவது, தாயின் ஐந்து தலைமுறை வரையிலும், தந்தை வழியில் ஏழு தலைமுறை வரையிலும், உள்ள உறவே சபிண்டா உறவு முறை எனப்படும். இந்த உறவுகளில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றாலும், அந்ததந்தக் குழுவில், பகுதிகளில் அப்படியான வழக்கம் இருப்பின் அத் திருமணங்கள் ஏற்கப்பட்டன. உதாரணமாக, தாய் மாமன் மகளை மணத்தல், மாமனை மணத்தல் போன்றவை இன்றும் வழக்கத்தில் உள்ளன. முன்பு ஒரு ஆண், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே மற்றொரு பெண்ணை மணத்தல் ஏற்கக்கூடியதாகவே இருந்தது. ஆனால், இந்து திருமணச் சட்டம் மற்றும், மற்றும் அது பற்றிய பல நவீன சட்டங்கள் வந்த பின்னால் இந்த வழக்கம் மறுக்கப்பட்டது. இன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே மணக்கலாம்.இந்து நம்பிக்கையில் திருமணம் என்பது ஒரு ஜன்ம ஜன்ம பந்தம், மற்றும் மதச் சடங்காகவே பார்க்கப்பட்டமையால் திருமணம் எனும் நிகழ்வு மதச் சடங்குகள் இன்றி நடக்கக்கூடாது என்றும் அப்படி நடந்தால் அது திருமணம் எனும் அந்தஸ்தைப் பெறாது என்றும் முன்பு இருந்தது.ஆனால், இன்று மதச் சடங்கின்றி, சீர்திருத்தத் திருமணம் செய்யலாம் என சுயமரியாதைத் திருமணம்-1955-ன் பிரிவு 7A சொல்கிறது.திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல என இந்து நம்பிக்கை இருந்தமையால், விவாகரத்து அல்லது மணப் பிரிவு என்பது ஏற்கப்படவில்லை. ஆனால், 1955-ன் இந்து திருமணச் சட்டமானது ஒப்பு இல்லாத தம்பதியருக்கு, நீதிமுறைப் பிரிவு, விவாகரத்து போன்ற பல தீர்வழிகளை நல்குகிறது.


இஸ்லாத்தின் நிலை:

இதைப் போலவே இஸ்லாத்தில், இன்னின்ன உறவு முறைக்காரர்களை மணக்கக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் அது இல்லா நிலைத்திருமணம் ஆகிவிடும் என்றும் இஸ்லாமிய சட்டத்தின் பிரிவு260 கூறுகிறது.அதாவது, இந்துக்களில் அந்தந்த குழுக்களில் வழக்கத்தில் இருந்தால் திருமணம் செய்விக்கலாம் என இருந்த சில உறவு முறைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.சகோதரியின் மகளை மணக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அதாவது, இந்துக்களில் திருமண உறவு அனுமதிக்கப்பட்ட சகோதரியின் மகளை மணக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இது தவிர, இந்து மதத்தைப் போலவே சகோதரிகளை, தந்தை வழிச் சகோதரிகள், தாய்வழிச் சகோதரிகள் தந்தையுடன் பிறந்த சகோதரி, தாயுடன் பிறந்த சகோதரி என பல உறவுகளை திருமணம் செய்தல் கூடாது எனச் சொல்கிறது. இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு, மனைவி உயிருடன் இருக்கையில் இரண்டாம் திருமணம் குற்றமாகக் கருதப் படவில்லை. ஆனால் அந்த இரண்டாம் மனைவி எவராக இருக்கலாம் என எந்த குறிப்புக் இல்லை.


இஸ்லாமிய கடகடுப்பாடுகள்:

ஆனால் இஸ்லாத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வாராயின், அவர்கள் ஒருவருக்கொருவர் ரத்தத் தொடர்புடையவராக இருத்தல் கூடாது, அதாவது இரு சகோதரிகளை ஒருவர் மணக்க முடியாது. இருவரும் தாய் மகளாக இருத்தல் கூடாது. ஒரு மனைவிக்கு மற்றவர் சகோதரியாகவோ, சகோதரியின் மகளாகவே இருத்தல் கூடாது. அவ்விதம் இருந்தால் அத் திருமணம் இல்லாநிலைத் திருமணம் ஆகிறது. சட்ட முரண் ஆகிறது.ஒரு இஸ்லாமியப் பெண் விதவையானால், உடனேயே மற்ரொருவரைத் திருமணம் செய்து கொள்ள இயலாது. பெண்ணுக்கான மூன்று தீட்டு வெளியாகும் காலம் வரை, அல்லது நான்கு மாதம் பத்து நாள் காலம் வரை அவள் வேறு திருமணம் செய்ய இயலாது,. இதற்குக் காரணம், அவள் கருவுற்றிருக்கிறாளா எனும் கேள்விக்கு விடை தெரிய வேண்டியது இஸ்லாத்தில் அவசியமாகிறது.மேலும், பெண் கருவுற்றிருந்தால், குழந்தை பிறக்கும் வரை மறு திருமணம் கூடாது. அப்படிக் காத்திருக்கும் காலமே இத்தா காலம் ஆகும். இந்த சமயத்தில் திருமணம் கூடாது.இந்துக்களில் திருமணம் ஒரு ஒப்பந்தமல்ல, வாழ்நாள் பந்தம் எனும் நம்பிக்கை இருக்கிறபடியால் மறு விவாகம் எனும் பேச்சுக்கே இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு அங்கே இடமில்லை.


தந்தைமை:

திருமணம் நடந்த்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு அந்த ஆண் தந்தை ஆகிறான். ஒரு தம்பதியரில் பிறந்த குழந்தைக்கு அவன் தான் தான் தந்தை என ஒப்புக் கொள்ளுதல் கூட அந்த பெண்ணுடன் அவனுக்கு நடந்த திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டது. (Muhammad Allahabad Vs Muhammad Ismail எனும் வழக்கை உதாரணமாகக் கொள்ளலாம்.)ஆனால், தாய் வழி முறையில் முறை மணப்பிறப்பாயினும், இல்லாவிட்டாலும், தாய்-சேய் இடையே சொத்துரிமை ஏற்பட எவ்விதத் தடையும் இல்லை என 'சுன்னி' சட்டம் கூறுகிறது, ஆனால், 'ஷியா' சட்டம் முறை மணப் பிறப்புக் குழந்தைக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு எனக் கூறுகிறது. இஸ்லாத்தில் சொத்துரிமைக்காக குழந்தைப் பிறப்பின் தந்தைமை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. பண்டைய இந்து சட்டத்தில் முறைமணப்பிறப்புக் குழந்தைகள் மட்டுமே ஏற்கப்படுகின்றன.முறை மணப்பிறப்பில்லாத குழந்தைக்கு தாய் வழிச் சொத்தை அடைய இஸ்லாத்தின் ஒரு பிரிவான 'சுன்னி' பிரிவு மறுப்பேதும் சொல்லவில்லை. இந்துக்களில், முன்பு பெண்ணுக்கு சொத்துரிமையே சற்றும் இல்லாததால் இந்தக் கேள்வியும் கூட எழ வாய்ப்பே இல்லை. ஆனால், ஒரு குழந்தை முறை மணப் பிறப்பாக இல்லை எனில், அந்தக் குழந்தைக்கு வர வேண்டிய பரம்பரைச் சொத்தை மறுக்க அந்த குடும்பத்தின் கர்த்தாவுக்கு உரிமை இருந்திருக்கிறது.


காப்பாளர்:

இஸ்லாத்தில், திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுவதால், இளவயதுத் திருமணமும், சித்தம் கலங்கியவரும் கூட திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை, இளவர் மற்றும் சித்தம் கலங்கியவர்களுக்கான திருமணக்காப்பாளர் எனும் வழி முறையில் இருந்து அறியலாம். திருமணக் காப்பாளர்களை “ஜபர்” என்பர். ஒரு இளவர் அல்லது சித்தம் கலங்கியவருக்குக் காப்பாளராக, அவரின் தந்தை, தந்தையின் தந்தை(எத்தனை தலைமுறை முன் சென்றாலும்), சகோதரனும், தந்தையின் உறவினரான எச்சதாரர்களும் ஒருவர் பின் ஒருவராக, அதன் பின் தாய், தாயின் உடன்பிறந்தவர்கள், அரசாங்கம்.இஸ்லாம் தந்தை வழியை நிலை நிறுத்துவதாக இருப்பதால் காப்பாளராக தந்தை வழி உறவுகளே முன் நிற்கின்றனர். மேற் சொன்ன பட்டியலில் அவர்கள் அதே வரிசைக் கிராமத்திலேயே உரிமை கொண்டவர்கள் ஆவர். இப் பட்டியலிலுள்ளோர் இருக்கையில், கீழ் நிலையில் உள்ளவரோ, அல்லது, பட்டியலில் இல்லாதவரோ, காப்பாளராக இருக்க இஸ்லாமிய சட்டம் கூறும் ஜபரின் அனுமதி இன்றி நடக்கும் திருமணம் இல்லா நிலைத் திருமணம் (VOID) ஆகிவிடும். (Abdul Kasem Vs Jamila Khatun Bibi)ஆனால், பருவம் அடையாத பெண் ஒருத்திக்கு திருமணம் முடிந்துவிட்டாலும், அவள் பருவம் அடையும் வரை அவளது காப்பாளராகச் செயல் படும் உரிமை அவளது தாயே தவிர, கணவன் அல்ல என்று இஸ்லாம் சட்டத்தின் 356 பிரிவு கூறுகிறது. ( Nur Kadir Vs Zuleikha Bibi) பண்டைய இந்து திருமணத்திலும் பால்ய விவாகம் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதிலுமே, பருவ வயது அடையும் வரை அவளது காப்பாளர் அவளது பெற்றோரே. ஆனால், இந்த இந்து பழக்கம் இந்து திருமணச் சட்டம், போன்ற பல நவீன சட்டங்களினால் மாற்றம் கண்டது.இந்து மதமும் சரி, இஸ்லாமிய மதமும் சரி சமூக வாழ் முறையை வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றன. சில விஷயங்களில் ஒத்துப் போகவும் செய்கின்றன.கிறித்தவ மதமானது, மிக அதிக அளவில் பரவி இருக்கிறது, வெவ்வேறு நாட்டு கிறித்தவர்களிடையேயும் பல பழக்கங்கள் வெவ்வேறாகவே இருக்கின்றன..நாம் இதுவரை வெவ்வேறு மதங்கள் சட்டத்தை, சமூக வாழ்முறையை எப்படி நெறிப்படுத்துகின்றன, சட்டங்கள் சட்டத்தை எப்படிப் பார்க்கின்றன, எப்படிப் பயன்படுதுகின்றன எனப் பார்த்துக் கொண்டிருப்பதன் நோக்கம், எந்த அளவுக்கு ஒரு நாட்டிற்குள் ஒத்த சிவில் சட்டம் கொண்டு வர இயலும் என்பதைப் பற்றி அறியும் முயற்சியே.
சிந்திப்போம்…

- ஹன்ஸா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல