ஒரு திருமணம் என்பது எந்தப் புள்ளியில் நிறைவடைகிறது என்பது அந்தந்த மதங்களின் திருமணம் குறித்த பார்வையைப் பொறுத்தே அமைகிறது.இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இரு மதங்களும் தனது குடிகளில் ஒவ்வொரு செயலையும் முடிந்த வரை பதிவு செய்கிறது. இந்து என்பது இஸ்லாம், கிறித்தவம் போல இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்யப்பட்ட மதம் அல்ல. அதாவது, இந்து மதம் எந்த ஒரு தனிப் புத்தகத்தையும் பின்பற்றவில்லை.
மதத் தலைவர் எனத் தனி ஒருவர் இல்லை. ஒவ்வொரு இஸ்லாமியரும் ஒரு இஸ்லாமியக் குழுவினுள் அடங்குவார். அந்தக் குழுவுக்கென்று உள்ள தலைவரின் ஆலோசனைப் படி, அது இஸ்லாமியரின் வேத புத்தகமான திருக்குரானின் சொல்படி நடக்கும் கடமை அவருக்கு உள்ளது. அதே போல, அவரின் திருமணம் போன்ற குடும்பச் செயல்கள் அங்கே பதியப்படும்.கிறித்தவமும், இந்தியாவிற்குள் வருகை தந்தவர்களைப் பின்பற்றி தோன்றிய மதம் என்றாலும், ஒவ்வொரு கிறித்தவரும் அவர் இணைந்துள்ள தேவாலயத்திற்குக் கட்டுப்பட்டவராகிறார்.
அந்த தேவாலயம் பைபிளை முன்மாதிரியாகக் கொண்டு, அந்த தேவாலயத்தின் தலைமைப் பேராயரின் பொறுப்பில் வாழ கடமை கொண்டவராகிறார். அவரது திருமணம் போன்ற செயல்களும் அந்தந்த தேவாலயங்களில் பதியப்படும்.ஆனால், இந்து என்பது அப்படி ஒரு கட்டுக்குள் இல்லை என்பதாலும், ஒரு தலைமை, ஒரு புத்தகம் என இல்லாததாலும், இங்கே திருமணம் என்பது சமூகச் செயலாகப் பார்க்கப்படாமல், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு பூர்வ ஜென்ம பந்தமாகவே பார்க்கப்பட்டதால், இங்கே பதிவு எனும் விதிக்கு அவசியம் ஏற்படவில்லை. அதுவே இந்து மதத்தின் செளகரியமும், சங்கடமும்.
கிறித்தவத்தில் திருமணம் நடத்தல்:
கிறித்தவம், ஆண், பெண் இருவரும் கிறித்தவராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அத்திருமணத்தை ஏற்கிறது. ஒருவர் வேறு மதத்தைச் சார்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அந்தத் திருமணம் இல்லா நிலையதாகும் என்றே இந்தியக் கிறுத்தவ திருமணச் சட்டம், 1872-ன் பிரிவு 4 கூறுகிறது.கிறித்தவம் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட (well organized) ஒன்று ஆனதால், இங்கே திருமணம் நடத்தி வைத்தல் என்பதற்கான விதி முறைகளை அந்தச் சட்டத்தின் பிரிவு 5 கூறுகிறது.ஒரு கிறித்தவத் திருமணமானது, திருச்சபை ஆட்சிக்குரிய ஆணையப் பெற்ற (Episcopal ordination) ஒருவரால், அவர் மத அமைச்சராக (religious minister)உள்ள கிறித்தவ தேவாலயத்தின் விதிகளின் படி நடத்தி வைக்கலாம்.
இந்தியக் கிறித்தவ திருமணச் சட்டம், 1872-ன் கீழ் திருமணங்களை நடத்தி வைக்க உரிமம் பெற்றவரால் திருமணம் நடத்தி வைக்கப்படலாம்.இதே சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள திருமணப் பதிவாளரால் (Marriage Register) அல்லது அவரது முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்படலாம்.
இந்தியக் கிறித்தவர்களுக்கிடையேயான திருமணத்திற்கு சான்றிதழ் வழங்க உரிமம் அளிக்கப்பட்டுள்ள எந்நபராலும் திருமணம் நடத்தி வைக்கப்படலாம்.ஒரு கிறித்தவத் திருமணம் காலை ஆறு மணி முதல் மாலை ஏழு மணி வரைக்குமான இடைப்பட்ட நேரத்தில் நடத்தி வைக்கப்படுதல் வேண்டும்.
மேற்கண்ட மத அமைச்சர்களால் ஒரு கிறித்தவத் திருமணம் எவ்வாறு நடத்தி வைக்கப்பட வேண்டும் என இச் சட்டத்தின் 12 முதல் 26 வரையிலான பிரிவுகள் சொல்கின்றன.திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்ட நபர்களில் ஒருவர் தன் விழைவை மத அமைச்சருக்கு முறைப்படி விண்ணப்பமாக அனுப்பி வைக்க வேண்டும்.
திருமணமானது, கிறித்துவ தேவாலயம் அல்லது தனி வசிப்பிடம் ஆகிய இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் நடைபெறலாம். அந்த அறிவிப்பானது அந்த தேவாலயத்திற்கு வரும் எவரும் பார்க்கும் வண்ணம் அந்த மத அமைச்சரால் ஒட்டி வைக்கப்படும்.
அதே திருமணம் தனி வசிப்பிடத்தில் நடக்க விரும்பினால், அதை மத அமைச்சருக்கு விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டிருக்க வேண்டும். மத அமைச்சர் அதனை கிறித்தவர் மறை மாவட்ட திருமணப் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். அங்கே அந்த தகவல் அனைவரும் பார்க்கும் இடத்தில் ஒட்டி வைக்கப்படும்.திருமணத்திற்கு எதிர்ப்பு ஏதும் இருப்பின், எவர் வேண்டுமானாலும் அதை விண்ணப்பத்தின் மூலம், தெரிவிக்கலாம். அதை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவினை எடுத்து அதன் படியே மத அமைச்சர் தரப்பினர்களுக்கு சான்றிதழை வழங்கவோ மறுக்கவோ செய்வார்.
திருமணத் தரப்பினரில் ஒருவர் உரிய வயதடையாதவராக இருக்கும் பட்சத்தில், மத அமைச்சர், அவ்வறிவிப்பின் நகல் ஒன்றினை, அம்மாவட்டத்தின் மூத்த திருமணப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.அப்படியான திருமணத்தை நடத்த ஒப்புக் கொண்ட மத அமைச்சரானவர் அந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின் விண்ணப்பம் செய்தவரின் வேண்டுகோளின் படி ஒரு சான்றிதழை தம் கைப்பட வழங்குதல் வேண்டும்.
அத்தகைய சான்றிதழ் ஏன் தரக்கூடாது என்பதற்கு சட்டமுறையான தடை ஏதும் இல்லாதிருக்க வேண்டும்.அதே சமயம் திருமணத் தரப்பினரில் ஒருவர் மத அமைச்சரின் முன் ஆஜராகி தாங்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான தடை ஏதும் இல்லை எனவும், அத்திருமணத்திற்கு சட்டப்படியான தங்கள் இசைவு பெறப்பட்டுள்ளது எனவும் விளம்ப (declaration) வேண்டும்.
அந்த விளம்பலானது, திருமணம் செய்து கொள்ளூம் இருவரும் குருதித் தொடர்பு இல்லை, அல்லது இருவரும் திருமணம் செய்து கொள்ள எவ்விதமான சட்டபூர்வமான தடைகளும் இல்லை என தான் நம்புவதாக உறுதி மொழி அளிக்க வேண்டும்.அந்த இருவரில் ஒருவரின் தொடர் வசிப்பிடமானது அந்த திருமணப் பதிவாளரின் மாவட்டத்தில் இருப்பதாக உறுதி மொழி அளிக்க வேண்டும்.
இத்தகு முறைகள் பின்பற்றப்படவில்லையாயின், மத அமைச்சர் அத் திருமணத்தை நடத்தி வைக்க முன் தேவையான அந்த சான்றிதழைத் தர மறுக்கலாம் அல்லது ஒத்தி வைக்கலாம். சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், மத அமைச்சர் உள்ளூர் வழக்கப்படியோ, அல்லது அந்த தேவாலயத்தின் விதிகளின் படி, சடங்குகளைச் செய்தோ திருமணத்தை நடத்தி வைக்கலாம்.கிறித்தவம், திருமணத்தை ஒரு சமூக நிகழ்வாகவே பார்ப்பதால்,கிறித்தவத் திருமணம் இரு சாட்சியங்களின் முன்னர் நடத்தி வைக்கப்பட வேண்டும்.
மத அமைச்சரால் சான்றிதழ் வழங்கப்பட்டதிலிருந்து இரு மாதங்களுக்குள் திருமணம் நடத்தப்படவில்லை என்றாலோ, அல்லது அதன் பேரில் நடந்து கொண்டிருந்த நடவடிக்கைகளோ இல்லா நிலயதாகும். மீண்டும் புதிதாக அறிவிப்பு கொடுத்து, சான்றிதழ் பெற்றே திருமணத்தை நடத்த முடியும்.
ஆனால், திருமணம் செய்து கொள்ள உத்தேசித்துள்ள ஆணின் வயது 21க்கு அதிகமாகவும், பெண்ணின் வயது 18 வயதுக்கு மேற்பட்டும் இருந்தால், திருமணம் செய்து கொள்ள உத்தேசித்துள்ள நபர்களுக்கு திருமணத்தின் போது கணவனோ மனைவியோ உயிருடன் இல்லாதிருந்தால், இந்திய கிறித்தவச் சட்டம் பிரிவு 60-ல் குறிப்பிடப்பட்டுள்ள விளம்புகையைச் செய்தால், இந்தியக் கிறித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருப்பது குறித்து யாருக்கும் அறிவிப்பு கொடுக்க வேண்டியதில்லை.
நேரடியாகச் சான்றிதழைப் பெறலாம்.திருமணப் பதிவாளர் மேற்கண்ட சான்றிதழை காரணமின்றி அளிக்க மறுக்கும் போதும் திருமணத் தரப்பினர்களில் எவரும், இது குறித்து உயர் நீதிமன்றத்திற்கு மனுச் செய்யலாம். (பிரிவு 46)கிறித்தவத் திருமணத்தின் சடங்கின் ஒரு பகுதியாக கீழ் கண்ட விளம்புகை இருக்க வேண்டும்.
இதைத் திருமணத்தின் தரப்பினர் இருவருமே செய்தல் வேண்டும்.” இன்னாராகிய நான்…இன்னாராகியவருடன் மண வாழ்வில் சேரக் கூடாது என்பதற்கு சட்டப்படியான தடை ஏதும் இருப்பதாக நான் அறிந்திலேன் என்று உளமார விளம்புகிறேன்.” இன்னாராகிய நான்…இன்னாராகியவருடன் மண வாழ்வில் ஈடுபட்டு என் சட்டபூர்வமான திருமணமான மனைவியாக / கணவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்பதைக் காண இங்கு முன்னிலையாகி உள்ள இந்நபர்களுக்கு நான் கோரிக்கை விடுகிறேன்.
பிரிவு 60ல் குறிப்பிட்டுள்ள விளம்புகையைச் செய்து முடித்தவுடன், அவர்களின் விண்ணப்பத்தின் பேரில், சிறு தொகை கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, அத்திருமணத்திற்குண்டான சான்றிதழினை உரிமை உள்ள நபர் வழங்குதல் வேண்டும்.அந்தச் சான்றிதழானது, அத்தகு உரிமம் பெற்றுள்ள நபரால் கையொப்பமிடப் பட்டிருக்க வேண்டும்.
மேலும், அந்தச் சான்றிதழானது, உரிமையியல் வழக்கு எதிலும், அத்தரப்பினருக்குத் திருமணம் நடந்தேறி உள்ளது என்பதைக் காட்டும் ஒரு அறுதியான நிரூபணமாக அச்சான்றிதழை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளும்.இந்தியக் கிறித்தவர்களுக்கிடையேயான திருமணத்தை நடத்தி வைக்க உரிமம் உள்ள அந்நபர், தன் முன்னிலையில் நடந்த அத்தனைத் திருமணங்களையும் பதிவேடு ஒன்றில் பதிந்து வைக்க வேண்டும்.
மேலும், அதன் உண்மையான குறிப்புகளை தகுந்த கால இடைவெளிகளுக்குள் பிறப்பு, இறப்பு, மற்றும் திருமணங்கள் குறித்த தலைமைப் பதிவாளரின் அலுவலகத்தில் வைப்பீடு செய்தல் வேண்டும்.இந்தப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பத்தின் பேரில், தகுந்த கட்டணம் செலுத்தப்படுவதன் மூலம் எவரும் சான்று பெறலாம்.
ஆனால், இந்தியக் கிறித்தவர்களுக்கான திருமணத்தில், அதாவது இந்தச் சட்டம், ரோமன் கத்தோலிக்கர்களுக்கு பொருந்தாது எனக் கூறுகிறது(பிரிவு 65).ஆக, இந்திய கிறித்தவ திருமணச் சட்டம் 1872-ன் படி, திருமணம் என்பது பிரிவு 60ன் கீழான விளம்புகை ஆனவுடனேயே முடிவுக்கு வருகிறது.
அந்த முடிவுக்கு அத்தாட்சியாக திருமணச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இங்கே நாம் கவனிக்க வேண்டியது, திருமணம் என்பதற்கான வரையறையை கிறித்தவர்கள் தங்களுக்குள்ளாக நிர்ணயித்துக் கொண்டுள்ளனர். ஆனால், எப்போது அந்த நிகழ்வு, கிறித்தவ வரையறைப்படி நடந்து முடிகிறதோ அப்போதிருந்து, அது இந்திய பொதுச் சட்டத்தின் கீழான திருமணம் எனும் கட்டத்தை அடைந்து விடுகிறது.
- ஹன்ஸா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக