டிஸ்க் பார்மட்டிங் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த, ஒரு டிஸ்க் அல்லது ஏதேனும் ஒரு ஸ்டோரேஜ் மீடியத்தினைத் தயார் செய்வதாகும். இதில் மூன்று வகை செயல்பாடுகள் உள்ளன.
முதலாவதாக, லோ லெவல் பார்மட்டிங் (lowlevel format). இது மீடியாவைப் பயன்படுத்தத் தயார் செய்கிறது.
அடுத்த நிலையில், அந்த மீடியா அல்லது டிஸ்க், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக அமைக்கப்படுகிறது.
மூன்றாவதாக, ஹை லெவல் பார்மட் மேற் கொள்ளப்படுகிறது.இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பைல் வகை சிஸ்டம் (FAT32 அல்லது NTSF) இந்த மீடியாவிற்கென தரப்படுகிறது.
பொதுவாக, டிஸ்க் ஒன்றினை பார்மட் செய்தால், அதில் உள்ள பைல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்று நாம் எல்லாரும் எண்ணுகிறோம். அது தவறு.
பார்மட் செய்யப்படுகையில், ஏற்கனவே உள்ள பைல்களின் பைல் ஹெடர்கள் மற்றும் பிற குறியீடுகள் மட்டுமே நீக்கப்படுகின்றன.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம், இந்த நீக்குதல் நடவடிக்கை, இங்கே பைல்களை எழுத இடம் உள்ளது என அறிவிக்கிறது. மேலும் இதில் பைல்கள் எழுதப்படாத வரையில், ஏற்கனவே இருந்த பைல்களை அதற்கான பாதுகாப்பான டூல்கள் கொண்டு மீட்டுவிடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக