சனி, 18 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 9

ராஜிவ் கொல்லப்படுவதற்கு சற்று முன், அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ (கடந்த அத்தியாயம்), ஹிந்து நாளிதழில் வெளியானதுதான், இந்த கொலை வழக்கில் ஏற்பட்ட முதலாவது திருப்பம். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கும் முன்பே, போட்டோ வெளியாகிவிட்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 8

மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப் பணியை அதிகாரபூர்வமாக சி.பி.ஐ. தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 7

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திதான் என்பது உறுதிப் படுத்தப்பட்டு 12 மணி நேரமாகியும், கொலையை புலனாய்வு செய்யப்போவது யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் கட்டத்தில், கொலை எப்படி நடந்தது என்பதும் தெரியாது. கொலை செய்தது யார் என்பதும் தெரியாது. “குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்” என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் தெரியாது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 06

குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது. அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 05

பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டதால், லதா கண்ணனும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அவரது மகள் கோகிலாவும் பரபரப்பாக காணப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 04

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 03

பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான். வி.ஐ.பி.களை பொதுமக்கள் நெருங்காதபடி அமைக்கப்படும் தடுப்பு அது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 02

இரவு 8.20 மணிக்கு அந்த விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. விசாகப்பட்டினத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரி சாகர் இல்லாமல் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - அத்தியாயம் 01

அத்தியாயம் 1

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.

இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல