வியாழன், 29 செப்டம்பர், 2016

வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழினி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -35)

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.

புதன், 28 செப்டம்பர், 2016

சிறுமியைக் காப்பாற்றிய கடைசி நாள் ஒளிப்பதிவு

’வாடி கெதியா, எரும மாடு... வாடி கெதியா... கெதியா வா, தேவடியாள்’, கையில் நீண்ட தடியுடன், உரத்த குரலில் அந்தச் சின்னஞ்சிறுமியை நோக்கி அள்ளி வீசப்பட்ட அந்தவார்த்தைகளால், உள்ளங்கி மட்டுமே அணிந்திருந்த நிலையில், சற்றுத் தூரத்திலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வந்த அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து பந்தாடிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி, அந்த வீடியோவைப் பார்த்த சகலரின் கண்களையும் ஒருகனம் நனைத்துவிட்டது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஒடிஷாவில் உறவினர்கள் உதவாததால் தாயின் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த மகள்கள்!!

ஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம் நடந்துள்ளது.

திங்கள், 26 செப்டம்பர், 2016

விமா­னத்தில் பக்­கத்து ஆச­னத்­தி­லி­ருந்த பரு­ம­னான நபரால் அசௌ­க­ரியம் விமா­ன­சேவை நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்குத் தாக்கல்

விமா­னத்தில் தனது ஆச­னத்­துக்கு அரு­கி­லி­ருந்த ஆச­னத்தில் பரு­ம­னான நப­ரொ­ரு­வரை அமரச் செய்­ததால் தான் பெரிதும் அசௌ­க­ரிய நிலையை எதிர்­கொள்ள நேர்ந்­த­தாக குற்­றஞ்­சாட்டி இத்­தா­லியை சேர்ந்த நப­ரொ­ருவர் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.

தீப்­பற்றி எரிந்த அம்­புலன்ஸ் வண்டி; நோயாளி பலி

மருத்­து­வ­ம­னை­யொன்­றுக்கு வெளியில் அம்­புலன்ஸ் வண்­டி­யொன்று தீப்­பற்றி எரிந்­ததால் அதி­லி­ருந்த நோய­ாளி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­துடன் மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் ஒருவர் காய­ம­டைந்த சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய முடியாது?; மத்திய அரசு கேள்வி!

இஸ்லாத் திருமண சட்டத்தில் இஸ்லாம் நாடுகளே திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஏன் திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது மத்திய அரசு.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?


நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?

இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.

ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது.

டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்!

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

எழுக தமிழ் யாரை நோக்கி??????

எழுக தமிழ் பேர­ணிக்­கான முன்­னா­யத்­தங்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடந்து கொண்­டி­ருந்த போது, நியூ­யோர்க்கில் நடந்து கொண்­டி­ருந்த ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச தலை­வர்கள் வாழ்த்­துக்­களைப் பரி­மாறிக் கொண்­டி­ருந்­தார்கள்.

இலங்­கையில் தீவிரம் அடைந்துவரும் சிறுநீரக நோய்

இலங்­கையின் வட­மத்­திய மாகா­ணத்தில் புதி­தாகத் தோன்­றி­யுள்ள சீறு­நீ­ரக நோய் பெரும் சுகா­தாரப் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இது தொற்­றா­நோய்ப்­பி­ரி­வுக்குள் இருந்­தாலும் நோயின் தீவிரம் அதி­க­ரித்­து­ வ­ரு­வது பல­ரையும் கவ­லை­க்கொள்ளச் செய்­துள்­ளது.

சரு­மத்தை சுத்­த­மாக்கும் எலு­மிச்சை பேஸ் பெக்

வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு, தினமும் அலு­வ­லகம் செல்லும் டென்­ஷனில் சரு­மத்தை பாது­காப்­பது சற்று கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும்.
இனி அதை பற்றி கவ­லைப்­பட வேண்டாம். எப்­போதும் ப்ரஷ்­ஷாக இருக்க பிரத்தி­யேக குளியல் பவு­டரை வீட்­டி­லேயே தயா­ரிக்­கலாம். அது எப்­படி என்று இப்­போது பார்க்­கலாம்.

சரும சுருக்கத்தை போக்கும் கோப்பி பவுடர் ஸ்க்ரப்

உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
 தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

அரிசி கழு­விய தண்­ணீரை வீணாக்­காமல் சரு­மத்தை அழகு படுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தலாம்.

பிரசவ தழும்புகள் மறைய...

சரு­மத்தில் வரி­வ­ரி­யான தழும்புகள் பல கார­ணங்­களால் ஏற்­படும். உடல் எடை குறை­யும்­போது, பிர­சவம் ஏற்­ப­டும்­போதும் உண்­டாகும். விரிந்த சருமம் சுருங்­கு­வதால் திசுக்­களில் ஏற்­படும் பாதிப்­புதான் அந்த வரி­வ­ரி­யான தழும்பு.
 இது தோள்­பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகு­தி­களில் உண்­டாகும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு.....

உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.

இன்­றைய பேஷன் உலகில் பெரும்­பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை­களைத் தான் அதி­க­மாக விரும்­பு­கின்­றனர். ஆனால், அக்குள் கரு­மை­யாக இருப்­ப­வர்­களால் இத்­த­கைய ஆடை­களை அணிய முடி­வ­தில்லை. இதனால் பலர் அக்­குள்­களை வெள்­ளை­யாக்க அதிகம் பணம் செல­வ­ழிக்­கின்­றனர்.

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!-

குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை வெவ்வேறு விதமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

நீர்வேலி சிறுமி மீதான சித்திரவதை: சமூக வலைத்தளத்தளத் தகவலும், நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் சிறுமியைக் காக்க உதவின

நீர்வேலியில் சித்தியினால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 வயது சிறுமியை தொடர்ச்சியான சித்திரவதையில் இருந்து காத்து பாதுகாப்பதற்கு, சமூக வலைத்தளத் தகவலும், அதனைத் தொடர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் உதவியிருக்கின்றன.

சனி, 24 செப்டம்பர், 2016

வாழ்நாள் முழுக்க தப்பாவா யூஸ் பண்ணோம்? அந்த ப்ளூ கலர் ரப்பர் இன்க் அழிக்க இல்லையாம்.

நாம் அனைவரும் பயன்படுத்திய ரப்பர், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத ரப்பர் அந்த சிவப்பு, நீலநிறம் கலந்து பென்சில், பேனா இரண்டும் அழிக்க பயன்படும் என விற்கப்பட்ட ரப்பர்.

கம்ப்யூட்டர் வெப்கேமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி.?

வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டைப் பாதுகாப்பது மிகவும் எளிய விடயமாகி விட்டது. வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது கம்ப்யூட்டர் வெப்கேமரா போன்றவற்றைக் கொண்டு வீட்டை எங்கிருந்தும் கவனிக்க முடியும். அந்த வகையில் நீங்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு சிசிடிவி பாதுகாப்பு வழங்க உதவும் தொகுப்பாக இது அமைந்துள்ளது.

நோயாளிக்கு வெறும் தரையில் சாப்பாடு: மருத்துவமனையின் அவலம்!!

அரசு மருத்துவமனையில் தட்டு இல்லாததால் வெறும் தரையில் நோயாளி பெண்ணுக்கு சோறு போட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“மூன்று வயது குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி கொலை செய்த தந்தை – (காணொளி)

மூன்று வயது குழந்தையை நீச்சல் குளத்தில் பலமுறை தூக்கி விசி கொடூரமாக கொலை செய்த நபருக்கு மெக்சிகோவில் 100 வருடம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் அடித்தேன். தாய் நீதிமன்றில் விளக்கம்!

நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க. அரியநாயகம் உத்தரவு இட்டுள்ளார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி : வளர்ப்புத் தாய் கைது, தந்தைக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல்!!! -(வீடியோ)

யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 21 செப்டம்பர், 2016

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான அல்லோ

பிரபல தேடுபொறி நிறுவனமாகக் கூகுள் குறுந்தகவல் போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் குறுந்தகவல் செயலிான அல்லோ (ALLO) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த குறுந்தகவல் செயலியான கூகுள் அல்லோ, தன்னுள் தேடுபொறி திறன் கொண்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையையும் வழங்குகின்றது.

எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் வசதி

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்ட, முற்றிலும் புதிய பிரவுசரான 'எட்ஜ்' பிரவுசர், தொடக்கத்தில், கூடுதல் வசதிகளைத் தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் வடிவமைத்துத் தரப்பட்டது. அண்மையில், ஆகஸ்ட் 2 அன்று, தரப்பட்ட விண்டோஸ் 10 மேம்படுத்தலில், எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்று இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள்

 காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை

இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார்.

திங்கள், 19 செப்டம்பர், 2016

நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக்!! மக்களே அவதானம்…

நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக்!! மக்களே அவதானம்… யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக் ஒன்று உலா வருகின்றது. அந்த பேஸ்புக் நீதிபதி இளஞ்செழியனின் உத்தியோகபுர்வ பேஸ்புக் என நினைத்து பல முக்கியஸ்தர்களும் அந்த நட்பு வட்டத்தில் இணைந்திருந்துள்ளனர்.

சனி, 17 செப்டம்பர், 2016

சுடுகாடாகி காட்சியளிக்கும் கிளிநொச்சி சந்தை!!: கண்ணீர் வடிக்கும் வர்த்தகர்கள் - (படங்கள்)

கிளிநொச்சி, பொது சந்தைத் தொகுதியில் நேற்றிரவு (16) திடீரென பரவிய தீயினால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துபோயின.

தீயினால் 90 கடைகள் முற்றாகவும் சுமார் 20 க்கும் அதிகமான கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

18 காரட் தங்கத்திலான கழிப்பறை நியுயார்க்கில் திறப்பு !


 கலையா ? மௌரிஸியோ கேட்டலோனின் "அமெரிக்கா" - தங்கக் கழிப்பிடம் !

நியு யார்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

' அமெரிக்கா' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான் உருவாக்கியுள்ளார்.

புதன், 14 செப்டம்பர், 2016

ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் அட்டூழிய காணொளி

எச்சரிக்கை!! இதயம் பலவீனமானவர்கள் இதனைப் பார்ப்பதை தவிர்க்கவும்


Share |

புனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34)

எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

எந்தக் கையில் ரேகை பார்ப்பது சரியானது??

ஓர் எளிதான கைரேகை விளக்கம்
வலது கையில் கம்பீரமாக சனிமேடுவரை சென்றிருக்கும் விதிரேகையானது, இடது கையில் துண்டுபட்டுப்போய் அரையும் குறையுமாய்க் காணப்படலாம். இப்படிப்பட்ட கைகளையுடையவரை வாழ்நாள் முழுவதும் சௌகரியமாய்ச் சீவிக்கிறாரென்று சொன்னால் ரேகை சாத்திரமே பொய்யானதாகிவிடும்.
எந்தக் கையில் ரேகை பார்ப்பது? வலக்கையிலா? இடக்கையிலா? ஆணுக்கு வலக்கையும் பெண்ணுக்கு இடக்கையும் பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்களே, உண்மையா என்றெல்லாம் இக்கட்டுரைத் தொடரை வாராவாரம் வாசித்துவரும் வாசக நேயர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன.

கட்டுப்பாடாக பேண வேண்டிய உப்பு!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

வீட்­டிற்கு வந்த விருந்­தா­ளியை வர­வேற்று சுக­ந­லன்­களை விசா­ரித்து விட்டு, தேநீர் குடிக்­கி­றீர்­களா? உங்­க­ளுக்குச் சீனி எப்­படி? கூடவா, குறை­யவா போட­வேண்டும்?” என்று கேட்டு உப­ச­ரிக்கும் வழக்கம் நம்­மி­டையே வந்­து­விட்­டது. ஆனால் விருந்து கொடுத்து உப­ச­ரிக்கும் விட­யத்தில், உணவில் உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு உப்புப் போட வேண்­டு­மென்று கேட்­பது நம்­மி­டையே இன்னும் வழக்­கத்­திற்கு வர­வில்லை.

ஈரலில் ஏற்படும் நோய்கள்

உட­லி­லுள்ள மிகப் பெரிய உறுப்­பா­னது ஈரல் ஆகும். மூளை, இரு­தயம், சிறு­நீ­ரகம், சுவா­சப்பை என்­ப­வற்றைப் போல மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான பணி­களை ஈரல் செய்து வரு­கின்ற போதும் அதன் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது. கல்­லீரல் என்று பொது­வாக அழைக்­கப்­படும் ஈரல் (Liver) மனித உடலில் வயிற்றுப் பகு­தியில் மேற்­பு­ற­மாக அமைந்­துள்­ளது.இதன் பெரும்­ப­குதி வயிற்றின் வலப்­பு­ற­மா­கவும் சிறு­ப­குதி இடப்­பு­ற­மா­கவும் பரந்­துள்­ளது.

உதடுகளின் கருமை நீங்க.....

உதடுகள் சருமத்தை விட எளிதில் கறுப்பாகிவிடும். ஆனால், எளிதில் போகாது. அதேபோல் மிக மெல்லிய சருமம் இருப்பதால் எளிதில் வெடிக்க ஆரம்பித்து விடும். குளிரோ வெயிலோ, சருமத்தை காட்டிலும் உதடுகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்.

கழுத்­தையும் கவ­னி­யுங்கள்

கழுத்து என்­பது முகத்­திற்கு அடுத்­த­படி நாம் பரா­ம­ரிக்க வேண்­டிய ஒன்­றாகும். முகம் ஒரு நிற­மா­கவும், கழுத்து ஒரு நிற­மா­கவும் இருந்தால் அழகை கெடுப்­பது போலா­கி­விடும். அதுபோல் இரட்டை நாடி, மரு, சுருக்கம் ஆகி­யவை ஒழுங்­காக பரா­ம­ரிக்­காமல் இருக்கும் போது ஏற்­ப­டு­பவை.

பணிந்தது பேஸ்புக்...! (படங்கள் இணைப்பு)

Phan Thị Kim Phúc 'நாபாம் சிறுமி' (Napalm girl)

"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்", பணிந்தது பேஸ்புக்...!

கடந்த மாதம், நிர்வாணம் சார்ந்த தனது கொள்கைகளை இப்புகைப்படம் மீறுவதாக கோரி புலிட்சர் பரிசு பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்த அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரரான நிக் உட் அவர்களின் பக்கத்தில் இருந்து இப்புகைப்படம் நீக்கப்பட அதனை தொடர்ந்து நோர்வே மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

அப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார்? பரபரப்பை கிளப்பிய தகவல்கள்

இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார்.

இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மரணம் பற்றிய சந்தேகத்துடன் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த பதிவு

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

புனிதப் பயணத்தின் பொன்னான தருணம்!

அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ல் காலமானதற்குப் பிறகு, குறைந்த கால அவகாசத்தில், அதாவது 19 ஆண்டுகால இடைவெளியில், செப்டம்பர் 4-ல், அவருக்குப் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. குணப்படுத்தவே முடியாத அளவுக்கு மூளையில் ஏற்பட்டிருந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக் காத்திருந்த பிரேசிலைச் சேர்ந்த நோயாளி ஒருவரைத் தனது பிரார்த்தனையின் மூலம் அன்னை தெரசா குணப்படுத்தினார் என்று சொல்லி, அதை அவரது இரண்டாவது அற்புதச் செயலாக போப் பிரான்சிஸ் சமீபத்தில் அங்கீகரித்தார். 2003 அக்டோபர் 19-ல் அன்னை தெரசாவுக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, 13 ஆண்டுகாலத்துக்குப் பிறகு, வாடிகன் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திங்கள், 5 செப்டம்பர், 2016

மலேசியாவில் இலங்கை தூதர் முகத்தில் சரமாரி குத்துவிட்ட தமிழர்கள்- (வீடியோ)

கோலாலம்பூர்: மலேசியாவில் இலங்கை தூதர் இப்ராகிம் அன்சர் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனி, 3 செப்டம்பர், 2016

தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்த ரயில் : யாழில் சம்பவம்

யாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில், தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெத்தால் இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெத்துக்கணும் என்று அனைவரையும் ஏங்க வைக்கும் உண்மைச் சம்பவம் இது!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் வர்மா. அங்குள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாயா குடும்பத்தலைவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். பெரியவள் பெயர் சுஷ்மா. வயது 15. இரண்டாவது பையன் சைலேந்திரா வயது 10. கடைக்குட்டி அனன்யா வயது 4. இந்த மூன்று குழந்தைகளையும் பார்த்துத்தான் உத்தரப் பிரதேச மாநில மக்கள் மூக்கில் விரலை வைக்கின்றனர்! அப்படி என்ன சாதித்து விட்டார்கள்?

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எம்.ஜி.ஆர்.- லதா

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் , 1977 - ம் ஆண்டு “பொம்மை” சினிமா இதழுக்காக நடிகை லதாவுக்கு பேட்டி கொடுத்தபோது எடுத்த படமாம் இது..!

எம்.ஜி.ஆர்.- லதா இணைந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தபோது உள்ளத்தில் சில “உரிமைக்குரல்” நினைவுகள் ஒலித்தன...!

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.”
இந்த "உடுக்கை" குறளுக்கும் , உரிமைக் குரலுக்கும் என்ன சம்பந்தம்...?

அடுக்கு மாடி கல்லறைகள்

 The world's tallest existing cemetery is the 32-story high Memorial Necropole Ecumenica in Santos, Brazil. When completed, it will hold 180,000 bodies.

இதுவரை பல ஆயிரம் கோடி மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கிறார்கள். சமீபகாலங்களில் அன்புக்குரியவர்கள் இறந்து போனால், உரிய மரியாதையோடு வைத்திருப்பதற்காகவே அடுக்கு மாடி கல்லறைகள் உலகின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. பிரேசிலின் சான்டோஸ் பகுதியில் உள்ள நெக்ரோபோலே இகுமேனிகா, உலகின் மிக உயரமான கல்லறை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. 108 மீட்டர் உயரத்தில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.

‘டெத் நூடுல்ஸ்’ ‘death noodles’ (காணொளி, படங்கள் இணைப்பு)

பிரிட்டனைச் சேர்ந்த பென் சுமடிநிரியா (22) சமையல் கலைஞராக இருக்கிறார். இந்தோனேஷியாவில் ‘டெத் நூடுல்ஸ்’ என்ற சவாலை ஏற்றார். மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கு அதிகக் காரம் கொண்ட நூடுல்ஸ் இது.

இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் பிரபாகரனை கண்டுபிடித்து தரச் சொல்லி இலங்கை எம்பி மனு கொடுப்பது சரியா? தவறா? - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து

மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கை யில் உள்ள காணாமல் போன வர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜி லிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை

நல்லூர் கந்தனின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலயச் சூழலில் பெண் ஓருவர் வேட்டி சேட்டுடன் வருகை தந்துள்ளார்.

சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)

சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.

கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.

வேண்டாம் என்று மாப்பிள்ளை கதற கதற நடந்த கட்டாய திருமணம்! (வீடியோ)


Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல