வெள்ளி, 19 ஜூன், 2015

திருமணத்தில் நாமல் வழங்கிய தங்கச் சங்கிலி பித்தளையாக மாறியது! முன்னாள் போராளி குற்றச்சாட்டு

முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பெரும் எடுப்பில் விளம்பரப்படுத்திக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் முன்னாள் போராளிகளான தமக்கு தங்கச் சங்கிலி என கூறிக்கொண்டு வழங்கிய சங்கிலி, பித்தளை சங்கிலி என முன்னாள் போராளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணவனின் ஆணுறுப்பில் உதைந்த அலங்கோல ஆசிரியர்

மாணவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பில் ஆசிரியர் ஒருவர் உதைத்தமையினால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி ரௌடிகளை வேட்டையாடியது பொலிஸ்!

வடமராட்சியின் நெல்லியடி பகுதியில் நேற்று மதியம் பொலிசார் நடத்திய வேட்டையில் 23 வாலிபர்கள் கைதாகியுள்ளனர். பெண்களுடன் சேட்டை புரிந்தது, பொது இடங்களில் கூடி இடையூறு ஏற்படுத்தியது, நெல்லியடி பஸ்தரிப்பிடத்தில் கூடி நின்று பாடசாலை மாணவிகளுடன் சில்மிசம் புரிய முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்களில் இந்த வாலிபர்கள் கைதாகியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பியின் சாரதியால் நுனாவிலில் நடாத்தப்படும் விபச்சார விடுதி.

“எலைட்ற் என்ரரைமன்ட்“ எனும் பெயருடன் நுனாவில் பகுதியில் ஏ9 வீதியில் ஒரு விபச்சார விடுதி இயங்கி வருகின்றது.

இந்த விடுதியில் பெண்களைக் கொண்டு வந்து தங்கியிருந்து விபச்சாரம் செய்து வருகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பாக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல